புதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி?

Advertisement

How to Apply PVC Aadhar Card Online in Tamil..!

இந்தியா முழுவதும் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான ஆவணம் என்றால் அது ஆதார் கார்டு தான். ஒரு இந்திய குடிமகன் தனது தனித்துவமான ஆதார் எண்ணை இலவசமாகப் பெறலாம், அதில் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கியிருக்கும். இந்த ஆதார் கார்டினை UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நாம் இலவசமாக அப்ளை செய்து பெறலாம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த ஆதார் கார்டினை பிளாஸ்டிக் PVC ஆதார் கார்டாக அப்ளை செய்து பெறமுடியும். இருப்பினும் இதற்கு நாம் 50 ரூபாய் கட்டண தொகை செலுத்த வேண்டியதாக இருக்கும்.

இந்த PVC ஆதார் கார்ட் பார்ப்பதற்கு பேன் கார்டு போன்று அழகாக இருக்கும். சரி இந்த PVC ஆதார் கார்டினை வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் எப்படி அப்ளை செய்து பெறலாம் இதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

ஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி?

புதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி? How to Apply PVC Aadhar Card Online in Tamil..!

ஸ்டேப்: 1

www.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.

ஸ்டேப்: 2

இப்பொழுது இணையதளத்தின் முகப்பு பகுதி திறக்கப்படும் அவற்றில் My Aadhaar என்பதில் Order Aadhaar PVC Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 3

இப்பொழுது ஒரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் 12-digit Aadhaar number/16-digit virtual ID/28-digit Enrolment ID மூன்று ஆப்சன் இருக்கும் அவற்றில் ஏதாவது ஒரு ID-ஐ தேர்வு செய்து, அவற்றின் நம்பரை டைப் செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு தங்களிடம் 12-digit Aadhaar number இருக்கிறது என்றால் அதனை டைப் செய்யுங்கள்.

ஸ்டேப்: 4

அதன் பிறகு Enter the security code என்று இருக்கும் அவற்றில் அங்கு கொடுக்கப்பட்டுள்ள கேப்ஜா கோடினை டைப் செய்யுங்கள்.

ஸ்டேப்: 5

தங்களுடைய மொபைல் எண்ணினை ஆதார் என்னுடன் இணைந்திருந்தால் ‘Send OTP’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

அதுவே தாங்கள் ஆதார் எண்ணுடன் இதுவரை தங்களுடைய மொபையில் எண்ணினை இணைக்கவில்லை என்றால் mobile number is not registered என்பதற்கு பக்கத்தில் இருக்கும் tick box-ஐ கிளிக் செய்யுங்கள்.

பிறகு தங்களுடைய மொபையில் எண்ணினை டைப் செய்து பிறகு ‘Send OTP’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி?

ஸ்டேப்: 6

இப்பொழுது தங்களுடைய மொபையில் எண்ணிற்கு ஒரு OTP எண் அனுப்பப்படும் அதனை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்து கொள்ளுங்கள். பிறகு Terms and Conditions’ என்பதற்கு பக்கத்தில் இருக்கும் tick box-ஐ கிளிக் செய்யுங்கள். பிறகு Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 9 

இப்பொழுது மற்றொரு பேஜ் திறக்கப்படும் அவற்றில் தங்களுக்கு PVC ஆதார் கார்ட் எப்படி வரும் என்று preview காட்டப்படும். அதன் பிறகு தங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் காட்டப்படும் அவையெல்லாம் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரி பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு ‘Make Payment’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 10

இந்த PVC ஆதார் கார்ட் அப்ளை செய்து பெறுவதற்கு 50 ரூபாய் கட்டணம் தொகை செலுத்த வேண்டியதாக இருக்கும். இந்த கட்டண தொகையை தாங்கள் ஆன்லைன் மூலம் நெட் பேங்க், கிரிடிட் கார்ட், டெபிட் கார்ட் போன்ற வசதிகளை பயன்படுத்தி தங்களுடைய கட்டண தொகையை செலுத்தலாம்.

How to Apply PVC Aadhar Card Online in Tamil step: 11

அதன் பிறகு தங்களுடைய ஆதார் கார்டினை Tracking செய்ய வேண்டும். இதற்கு 28-digit SRN நம்பர், 12-digit Aadhaar நம்பர் இவை இரண்டும் தேவைப்படும்.

தங்களுடைய PVC ஆதார் கார்டினை ட்ராக்கிங் செய்வதற்கு மறுபடியும் www.uidai.gov.in என்ற இணையதளத்தின் முகப்பு பகுதிக்கு செல்லுங்கள். பிறகு அவற்றில் ‘My Aadhaar’ என்பதில் Check Aadhaar PVC card status என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பிறகு தங்களுடைய 28-digit SRN நம்பர், 12-digit Aadhaar நம்பர் மற்றும் அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் captcha code-ஐ டைப் செய்து ‘Check Status’ என்பதை கிளிக் செய்து தங்களுடைய PVC ஆதார் கார்ட் Status-ஐ தெரிந்து கொள்ளலாம்.

இந்த pvc ஆதார் கார்டு அப்ளை செய்த 7 நாட்களில் பெற்று கொள்ளலாம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement