வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

Advertisement

வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

How to Apply Voter ID Online in Tamil:- அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று, தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்று இந்த வாக்காளர் அடையாள அட்டை. எனவே இந்த வாக்காளர் அடையாளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க..!

வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது..!

வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 1

முதலில் www.nvsp.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். பின் அவற்றால் Electros Verification Program என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 2

பின் அவற்றில் தாங்கள் ஏற்கெனவே User ID கிரியேட் செய்திருந்தால், அவற்றில் User ID மற்றும் password கொடுத்து login செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் அவற்றின் Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்து.

இப்பொழுது தங்களுக்கான Account-ஐ கிரியேட் செய்ய வேண்டும்.

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 3

Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்தவுடன் மேலே காட்டப்பட்டுள்ளது போல் ஒரு PAGE ஓபன் ஆகும் அவற்றில் தங்களுடைய தொலைபேசி எண்ணை டைப் செய்யுங்கள், பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது தங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு OTP எண் அனுப்பப்படும். அவற்றை ENTER OTP என்ற இடத்தில் டைப் செய்து Verify என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது தங்களுடைய மொபையில் நம்பர் Verify-ஐ ஆகிவிடும். 

அதன் பிறகு I don’t have EPLC number என்பதை கிளிக் செய்து, தங்களுடைய first name, lest name, e-mail, password, confirm password ஆகியவற்றை டைப் செய்து Register என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது தங்களுடைய Account Register ஆகிவிடும். அதன் பிறகு user id & password-ஐ கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்.

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 4

லாகின் செய்த பிறகு home page-யில் first inculcation/enrolment என்று இருக்கும். அவற்றை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 5

அதன் பிறகு மற்றொரு page திறக்கப்படும். அவற்றில் citizenship என்பதில் i reside in India என்பதை தேர்வு செய்யவும். பின் select state என்பதில் தங்களுடைய state-ஐ தேர்வு செய்யவும்.

பின்பு next என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 6

அதன்பிறகு enter postal address என்ற page திறக்கப்படும் அவற்றில் தங்குடைய முகவரியை தெளிவாக டைப் செய்ய வேண்டும்.

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 7

Upload Document என்பதில் தங்களுடைய ID proof ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து அவற்றில் upload செய்து கொள்ளவும்.

அதன் பிறகு Enter family EPLC if applicable என்று இருக்கும் அவற்றில் தங்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவரது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை அவற்றில் enter செய்ய வேண்டும். இல்லையெனில் வேண்டாம் next என்பதை கிளிக் செய்யவும்.

10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி?

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 8

இப்பொழுது தங்களுடைய பிறந்த தேதியை தெளிவாக உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு Age proof-க்கு ஒரு Document Upload செய்ய வேண்டும்.  எனவே தங்களுடைய ID proof ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து அவற்றில் Upload செய்து கொள்ளவும்.

பிறகு Next என்பதை கிளிக் செயுங்கள்.

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 8

Select your parliamentary/assembly constituency என்பதில் தங்களுடைய parliamentary-select செய்து next என்பதை கிளிக் செய்யவும்.

வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை(How to Apply Voter ID Online in Tamil) ஸ்டேப்: 9

Enter your personal detail என்பதில் தங்களுடைய விவரங்களை உள்ளிடவும். அதன்பிறகு அவற்றின் கீழ் Enter your father/mother/husband detail என்பதில் தாங்கள் யாருடைய விவரங்களை உள்ளிட வேண்டும் என்று நினைக்கின்றிர்களோ அவர்களுடைய விவரங்களை உள்ளிட்டு, பின்பு அவற்றின் கீழ் Upload Document என்பதில் தங்களுடைய புகைப்படத்தை ஸ்கேன் செய்து Upload செய்து கொள்ளவும். பின் Next  என்பதை கிளிக் செய்யவும்.

please choose if you differently abled என்கிற page-யில் தாங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவற்றின் விவரங்களை உள்ளிட வேண்டும். அப்புறம் next என்பதை கிளிக் செய்யுங்கள்.

How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 10

declaration என்பதில் தங்களுடைய Place-ஐ டைப் செய்ய வேண்டும். பின் Next என்பதை கிளிக் செய்யுங்கள். Next என்பதை கிளிக் செய்தவுடன் தங்களுடைய Form Preview ஆகும். தங்களுடைய Form-ஐ ஒருமுறை தெளிவாக படித்து கொள்ளவும்.

பிறகு print என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தங்களுடைய Form-ஐ பிரிண்ட் எடுத்து கொள்ளவும்.

பிறகு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது தங்களுக்கு ஒரு Reference id கொடுக்கப்படும் அந்த id நம்பரை நோட் செய்து வைத்து கொள்ளவும். இந்த நம்பரை வைத்துதான் தங்களுடைய Status-ஐ track செய்து பார்க்க முடியும்.

வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – How to Apply Voter ID Online in Tamil ஸ்டேப்: 11

பின்பு track status என்பதை கிளிக் செய்யுங்கள். பின் அந்த Reference id-ஐ டைப் செய்து track status என்பதை கிளிக் செய்து பார்த்தால் தான் தங்களுடைய விண்ணப்பம் submitted செய்யப்பட்டிருக்கும்.  அதன் பிறகு BLO appointed செய்யப்படும், அதன் பிறகு field verified செய்வார்கள். அதன் பிறகு தங்களுடைய விண்ணப்பம் accepted செய்யப்பட்டதா அல்லது rejected செய்யப்பட்டதா என்று தெரிய வரும். தாங்களுடைய application accepted செய்யப்பட்டால் தங்களுக்கு ஒரு EPLC வரும் அவற்றை எடுத்து கொண்டு. தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil
Advertisement