விதவை பென்சன் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி? | How to Apply Widow Pension Online in Tamilnadu
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் விதவைகளுக்கான பென்ஷன் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி? என்று தெரிந்துக்கொள்ளலாம். விதவை பென்ஷன் வாங்குவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், தேவையான ஆவணங்கள் என்னெல்லாம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். தமிழகத்தில் ஏராளமான பென்ஷன் திட்டங்கள் உள்ளன. அதில் விதவை பெண்களுக்காக இப்போது பென்ஷன் ஆன்லைன் மூலம் எளிமையாக எப்படி அப்ளை செய்து பெறலாம் என்பதை படித்தறியலாம் வாங்க..!
திருமண உதவித்தொகை பெறுவது எப்படி |
திட்டத்திற்கு தகுதியானவர்கள்:
- ஆதரவற்றோராக இருக்க வேண்டும்
- கணவரால் கைவிடப்பட்ட விதவையாக இருக்க வேண்டும்.
- 20 வயதிற்கு மேல் உள்ள ஆண் மகன்கள் அவர்களுக்கு இருத்தல் கூடாது.
- அவர்களுக்கு சொந்தமாக வீடு / நிலங்கள் எதுவும் இருக்க கூடாது.
தேவையான ஆவணம்:
- விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo)
- குடும்ப அட்டை (Ration Card)
- ஆதார் அட்டை (Aadhar Card)
- இறப்பு சான்றிதழ் (Death Certificate)
- விதவைக்கான சான்றிதழ் (Widow Certificate)
- பேங்க் புத்தகம் (Bank PassBook)
விண்ணப்பங்கள் சென்றடையும் நபர்கள்:
- VAO
- RI
- SSS (தாசில்தார்)
- இவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பிறகு Approved செய்வார்கள். உங்களுக்கு தேவையான Order copy-யை ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- அடுத்த மாதத்தில் இருந்து உங்களுடைய வங்கி கணக்கிற்கு விதவை பென்ஷன் தொகையானது ரூ. 1000/- வந்தடையும்.
விதவை உதவித்தொகை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?
ஸ்டேப் 1:
முதலில் tnega என்று டைப் செய்யவும்.
ஸ்டேப் 2:
அவற்றில் “Citizen Login” என்பதை க்ளிக் செய்யவும்.
புதிதாக Account ஓபன் செய்யவும். அதில் new user? sign up என்ற ஆப்ஷனில் புதிதாக அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து Login செய்யவும்.
Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து லாகின் செய்யவும்.
ஸ்டேப் 3:
அவற்றில் Revenue Department என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் நிறைய திட்டங்கள் இருக்கும். நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது Destitute Widow Pension scheme என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக Proceed என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டேப் 4:
இப்போது Register can என்பதை க்ளிக் செய்யவும்.
அவற்றில் Document Type-ல் திரு/ திருமதி என்பதில் சரியானவற்றை கொடுத்து விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும்.
ஸ்டேப் 5:
அந்த OTP எண்னை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யவேண்டும். இப்போது can நம்பர்/ ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வந்துவிடும். அவற்றை க்ளிக் செய்யவேண்டும்.
ஸ்டேப் 6:
அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும். அவற்றை கொடுத்து Confirm OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இப்போது படிவமானது ஓபன் ஆகும்.
ஸ்டேப் 7:
அடுத்து mode of disbursement என்பதில் bank / postal மூலம் தேர்வு செய்யவும். அதன் பிறகு bank details என்பதில் சரியானவற்றை கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் 8:
படிவத்தில் கேட்டுள்ள இதர விவரங்களை சரியாக குறிப்பிட வேண்டும். மேலும் வருமானம், குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை விவரத்தினை சரியாக கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் 9:
அதன் பிறகு Property Details என்பதில் select ஆப்ஷனில் விண்ணப்பதாரர் பெயரை செலக்ட் செய்து கொள்ளவும். அவற்றில் கேட்டுள்ள விவரங்களுக்கு சரியானவற்றை நிரப்ப வேண்டும்.
சரியானவற்றை படிவத்தில் நிரப்பிய பிறகு submit ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
ஸ்டேப் 10:
அடுத்து உங்களுடைய ஆவணங்களை அப்லோட் செய்யவும். உங்களுடைய புகைப்படம் (Photo) 50 KB அளவுடனும், மீதமுள்ள அனைத்து ஆவணங்களும் 200 KB என்ற அளவுடன் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.
Scan செய்து வைத்துள்ளதை படிவத்தில் Upload செய்யவும்.
ஸ்டேப் 11:
அடுத்து Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்வதற்கு Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும்.
இது போன்ற படிவமானது டவுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்.
ஸ்டேப் 12:
அடுத்து Download Aadhar Consent Form டவுன்லோடு செய்வதற்கு Download Aadhar Consent Form என்பதை க்ளிக் செய்யவும்.
இது போன்ற படிவமானது டவுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்தினை என்டர் செய்யவும்.
Aadhar Consent Form-ஐ பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். இல்லையெனில் இ சேவை மையம் மூலம் பயன்படுத்தி கையெழுத்து இடவும். இந்த படிவத்தினை upload செய்யவும்.
ஸ்டேப் 13:
அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். அவற்றில் service charges என்பதில் ரூ.10/- இருக்கும்.
அவற்றின் I agree என்ற கட்டத்தில் டிக் செய்த பிறகு make paymentஐ கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் 14:
இவற்றில் ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவற்றில் உங்களுக்கான எண் இருக்கும். அந்த எண்ணினை கொடுத்து உங்களுடைய status-ஐ உறுதி செய்து கொள்ளலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |