கேஸ் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி | How to Cylinder Booking in Tamil
கேஸ் சிலிண்டர் புக்கிங் நம்பர்: வணக்கம் நண்பர்களே..! முன்னெல்லாம் எல்லோர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இருப்பது கேள்விக் குறியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த நிலை இப்போது மாறி அனைவருடைய வீட்டிலும் கேஸ் சிலிண்டர் வந்துவிட்டது. இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களின் நலன் கருதி, பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது உத்திர பிரதேசத்தில் 2016-ம் ஆண்டு மே 01-ம் தேதி மத்திய அரசால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரை புக்கிங் செய்து வாங்குவதற்கு இப்போது நிறைய ஸ்மார்ட் வழிகள் வந்துவிட்டன. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், மொபைல் ஆப், வாட்ஸ் ஆப் போன்ற பல வசதிகள் இருக்கின்றன. பல வழிகள் எளிமையான முறையில் வந்துவிட்டாலும் இன்னும் சிலருக்கு கேஸ் சிலிண்டர் எப்படி பதிவு செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளாமல் தான் இருக்கிறார்கள். அனைவரும் பயனடைய கேஸ் சிலிண்டர் எப்படி பதிவு செய்வது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
மத்திய அரசின் இலவச சிலிண்டர் எப்படி வாங்குவது..? |
கேஸ் சிலிண்டர் புக் செய்வது எப்படி:
சிலிண்டர் புக்கிங் நம்பர்: ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தாதவர்களுக்கு சாதாரண மொபைலில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும். தங்களுக்கு சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (IOCL) 8454955555 என்ற எண்ணை மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளது. சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 8454955555 என்ற எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் செய்தால் போதும். உங்கள் வீட்டிற்கு வந்தே கேஸ் சிலிண்டர் போட்டு செல்வார்கள்.
இண்டேன் சிலிண்டர் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்வது எப்படி:
சிலிண்டர் புக்கிங் நம்பர் தமிழ்நாடு: இன்றைய கால கட்டத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே இல்லை. நீங்கள் வீட்டில் Indane சிலிண்டர் பயணப்படுத்துபவர் என்றால் தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7588888824 (இண்டேன் கேஸ் புக்கிங் நம்பர்) என்ற எண்ணிற்கு வீட்டில் இருந்தபடியே வாட்ஸ்அப் மூலம் தெரிவித்தால் போதும்.
நீங்கள் வாட்ஸ்அப்பில் பதிவு செய்த பிறகு அந்த எண்ணிலிருந்து உறுதியான தகவல் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வந்தடையும். அதைத் தொடர்ந்து சிலிண்டருக்கான பண தொகையினை செலுத்துவதற்கான லிங்க் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். அதன் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யூபிஐ போன்ற எந்த முறையிலும் பணத்தைச் செலுத்தலாம்.
பாரத் கேஸ் சிலிண்டர் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்வது எப்படி:
கேஸ் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி: எரிவாயு நிறுவனத்தின் Bharat Gas சிலிண்டரை தாங்கள் வீட்டில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800224344 (Bharat Gas Booking Number Whatsapp) என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்துக்கொள்ளலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |