எறும்புகள் வட்டமாக சுற்றி வந்தால் என்ன நடக்கும்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான தகவல் தான். அப்படி என்ன தகவல் எறும்புகள் வட்டமாக சுற்றி வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக நாம் அனைவரும் எறும்புகள் வரிசையாக போகின்றதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சில நேரங்களில் அவைகள் வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பதை நம்மில் சிலர் மட்டும் பார்த்திருப்போம்.
அவைகள் ஏன் அப்படி சுற்றுகின்றன என்று சிந்தித்து இருக்கிறீர்களா.! அப்படி சிந்தித்தவர்களுக்காகத் தான் இன்றைய பதிவு. அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
எறும்புகள் வட்டமாக சுற்றிவந்தால் என்ன நடக்கும்.?
பொதுவாக எறும்புகள் தங்களின் இறைகளை தேடி வரிசையாக செல்வதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் சில நேரங்களில் திடீரென்று அவைகள் வட்டமாக சுற்றும் அந்த நிகழ்வை நம்மில் சிலர் மட்டும் பார்த்திருப்போம் ஆனால் இந்த நிகழ்வை பலரும் பார்த்திருக்க மாட்டோம்.
அப்படி பார்த்திருந்தால் ஏன் அவைகள் அப்படி தொடர்ந்து ஒரே இடத்தை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன என்று சிந்தித்து இருக்கிறீர்களா.!
அவைகள் அப்படி தொடர்ந்து ஒரே இடத்தை சுற்றி வந்த பிறகு இறுதியாக இறந்து விடும். இந்த நிகழ்விற்கு பெயர் அண்ட்மில்(Ant Mill) அல்லது டெத் ஸ்பைரல்(Death Spiral) என்பது ஆகும். ஏன் அப்படி நிகழ்கிறது என்றால் பொதுவாக எறும்புகள் தங்களுக்கு தேவையான இறைகளை தேடி வரிசையாக தான் செல்லும்.
அப்படி செல்லும் பொழுது முன்னால் போகின்ற எறும்பு ஃபிரமோன் என்கின்ற வேதிப்பொருளை வெளியேற்றும் அதில் இருந்து வரும் வாசனையை வைத்து தான் பின்னால் வரும் எறும்பு முன்னால் போகும் எறும்பை தொடர்ந்து செல்லும்.
அப்படி செல்லும் பொழுது முன்னாடி போகின்ற எறும்பு வெளியேற்றுகின்ற ஃபிரமோன் என்கின்ற வேதிப்பொருளில் இருந்து வரும் வாசனை பின்னால் வருகின்ற எறும்பை ஒழுங்காக சென்றடையவில்லை என்றால் அவைகள் தடம் மாறி ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருக்கும்.
இவைகளை தொடர்ந்து பின் வரும் அனைத்து எறும்புகளும் அந்த இடத்தை சுற்ற ஆரம்பித்து இறுதியில் அவை அனைத்தும் இறந்துவிடும்.
கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா
மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Interesting Information |