சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை | Independence Day Speech in Tamil

Advertisement

இந்திய சுதந்திர தின கட்டுரை | Short Speech On Independence Day in Tamil

Independence Day Speech in Tamil: நமது தாய் நாடான இந்திய திருநாட்டின் 76-வது சுதந்திர தினத்தினை ஆகஸ்ட் 15 நாள் கொண்டாட இருக்கிறோம். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து தாய் நாட்டின்  சுதந்திரத்தை அடைந்தது. ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் இந்திய மக்களின் வாழ்விலும், மனதிலும் ஆழமாக பதிந்த நாளாக விளங்குகிறது. நமது தாய்நாடான இந்தியா சுதந்திரம் பெற்று, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய் மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! 

சுதந்திர போராட்ட வீரர் காந்தியை பற்றி கட்டுரை

Independence Day Speech in Tamil for Students:

தாய்நாடான இந்தியாவின் ஆரம்ப கால நிலை:Independence Day Speech in Tamil

Suthanthira Thinam Speech in Tamil: ‘தீப கற்பம்’ என்றும் ‘பாரத தேசம்’ என்றும் நமது நாட்டினை அழைப்பார்கள். மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம், என நமது இந்திய நாடானது இரண்டாக பிரிக்கப்பட்டு பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர் ஆட்சி காலத்தில் நமது இந்திய நாடு மிகவும் சீரும் செழிப்பாகவும், பசுமை வாய்ந்ததாகவும், செல்வ செழிப்பில் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது.

எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை

தென்னிந்தியாவை மும்மன்னர்களான சேரர், சோழர், பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் (1206–1707), தில்லி சுல்தானகம் (1206–1526), தக்காணத்து சுல்தானகங்கள் (1490–1596), விஜயநகரப் பேரரசு (1336–1646), முகலாயப் பேரரசு (1526–1803), மராட்டியப் பேரரசு (1674–1818), துர்ரானி பேரரசு (1747–1823), சீக்கியப் பேரரசு (1799–1849) எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்துவதிலே மிகவும் கவனமாக இருந்தனர்.

சுதந்திர தின வாழ்த்துக்கள் IMAGES-ஐ டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> 
Independence Day Kavithai in Tamil
சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை

தாய் நாட்டிற்கு அந்நியர்களின் வருகை:

 Independence Day Speech in Tamilவிஜயநகரப் பேரரசு காலத்தில், கடல் வழியாக முதன்முதலில் நமது இந்திய நாட்டிற்கு வந்தவர் தான், வாஸ்கோடகாமா (vasco da gama). இந்திய நாடானது வந்தவர்களை வாழ வைக்கும் நாடு என்ற பெருமை நமது இந்தியாவிற்குத் தொடக்கத்திலிருந்தே உள்ளது. இவருடைய வருகையைத் தொடர்ந்து, இந்தியாவில் உணவுக்கு அதிக சுவை சேர்க்கும் கறிமசாலா பொருட்கள் இருப்பதை தெரிந்துகொண்ட ஐரோப்பிய நாட்டினர்கள், அதைத் தங்களது நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட எண்ணி, கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்தனர். போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை தொடங்கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து, டச், ஆங்கிலேயர்கள் போன்ற அந்நியர்கள் நமது இந்திய நாட்டிற்கு வந்ததால், ஆங்கிலயேர்களும் போர்ச்சுகீசியர்கள் போலவே வாணிக முகாம்களை நடத்த திட்டமிட்டு, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் வாணிக முகாம்களை நடத்தினர். 1619-ம் ஆண்டில், பிரெஞ்சுகாரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். வாணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் கடக்க அந்நாட்டின் சிம்மாசனப் பொறுப்பைக் கைப்பற்றுவர். அதற்கேற்றவாறு, பல அந்நியர்கள் இந்தியாவுக்குள் வந்ததால், பல போர் சண்டை, குழப்பங்களும் நிலவியதால், ஐரோப்பியர்கள் அரசியல் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தனர். ஆனால், தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளையும், ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இந்திய நாடு இழந்தது.

ஆங்கிலேயர் தொடங்கிய கிழக்கிந்திய கம்பெனி:

Independence Day Speech in Tamilஐரோப்பியர்களை ஆங்கில நாட்டினர்கள் அவர்களுடைய சூழ்ச்சியால் வென்றடைந்து இந்தியாவில் இருந்து வாணிகம் செய்தது மட்டுமல்லாமல், அப்போது ஆட்சி செய்து வந்த முகலாயப் பேரரசர் ஜெஹாங்கிரினுடைய அனுமதிப் பெற்ற பிறகு இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினார்கள். நாளடைவில் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆங்கிலேயர்கள் வரி தொகை கட்டாமலையே வாணிகம் செய்ததால், அவர்களை வங்காளத்தின் நவாப் ‘சிராஜ் உட துலாத்’ என்பவர்அவர்களை எதிர்த்ததால், 1757-ம் ஆண்டில், ‘பிளாசி யுத்தம்’ என்ற போர் நடந்தது.

அந்த போரில் நவாப் ஆங்கிலேயர்களிடம் தோல்வி அடைந்ததால், ஆங்கிலேயர்கள்  இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களையும்  கைப்பற்ற துவங்கினர். இதையடுத்து, 1764-ம் ஆண்டில் பக்சார் போர் நடந்தது, அதிலும் வெற்றிப் பெற்று, வங்காளத்தை ஆட்சி செய்ய அப்போதைய முகலாயப் பேரரசரிடம் அனுமதிப் பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சி வர அதுவே முதல் காரணமாகிவிட்டது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 நமது தேசியக் கொடி கட்டுரை

முதல் உலகப் போரும், இந்தியர்களின் துணிவும்:

இந்திய சுதந்திர தின கட்டுரைஉலகிலுள்ள நாடுகளுக்கிடையே நிலவிய சண்டை மற்றும் விரோதங்களால் 1914-ம் ஆண்டு ‘முதல் உலகப் போர்’ தொடங்கியது. இந்த போரானது இந்திய நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிகளுக்கு நமது இந்தியா பெருமளவில் பங்களித்தது. முதல் உலகப் போரின் போது பின்விளைவுகளான உயிரிழப்பு அதிக விகிதம், உயர்ந்த பணவீக்கம், அனைவராலும் பரவிய இன்புளூயன்ஸா (Influenza) என்ற நோய் மற்றும் போரின் போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பு, இந்திய மக்களுக்குப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

1915-ம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை எதிர்த்ததால், 1916-ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918-ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். தனது இந்திய நாட்டில் நடக்கின்ற கொடூரமான சூழலைத் தடுத்து நிறுத்த மகாத்மா காந்தி, முதல் சத்தியாக்ரஹ இயக்கத்தைத் ஆரம்பித்து, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், காந்திக்கு 1922-ல் ஆறு வருட கால  சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மீண்டும் இரண்டாண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார்.

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

1929-ல், டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு எறிந்தார். குண்டு வீச்சினை  கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், ‘அமைதியால் மட்டும் தான் சுதந்திரம் அடைய முடியுமென்று’ எண்ணி, 1930-ம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’நடத்தி வந்தார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அடுத்த ஆண்டில், ‘காந்தி-இர்வின்’ ஒப்பந்தம் கையெழுத்தானதோடு மட்டுமல்லாமல், அவர் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தியா திரும்பினார். அதே ஆண்டில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டார்.

சுதந்திரம் அடைந்த இந்தியா:

suthanthira thinam speech in tamilஇந்திய சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட சோர்வடையவில்லை. 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள் ஜூன் 3-ம் தேதி ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்தது. இந்திய நாடு 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது.

சுதந்திர இந்திய நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்திய நாட்டில் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும் படி அழைத்தனர். அவர்களுடைய அழைப்பை ஏற்று அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர், 1948-ம் ஆண்டு ஜூன் மாதம் மவுண்ட்பேட்டணுக்கு பதிலாக சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அமர்த்தப்பட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த கொண்டாட்டம்:

suthanthira thinam katturai in tamilவருடா வருடம், ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததை கோலாகலமாக கொண்டாடி வருவார்கள். சுதந்திர தினமன்று பள்ளி, கல்லூரிகளில்  தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி விடுமுறை அளிக்கப்படும். சுதந்திர தின விழாவில், முப்படை அணிவகுப்பு, நாட்டியக்கலை  எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகள் நடைபெறும். தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்!!!

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai
Advertisement