எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை

Advertisement

சுதந்திர இந்தியா கட்டுரை

நண்பர்களே இன்று சுதந்திர இந்தியாவை பற்றிய கட்டுரையை பார்க்க போகிறோம். சுதந்திர இந்தியா சொல்வதற்கே தனி கர்வம் உள்ளதா..! ஆனால் இந்த சுதந்திரத்தை நமக்கு அளிப்பதற்கு நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருப்பார்கள் நம் சுதந்திர போராட்ட வீரர்கள். இந்த சுதந்திரம் மிகவும் சுலபமாக கிடைக்கவில்லை. அவர்கள்  அதற்காக பாடுபட்டதோ அதிகம் அதை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். நிறைய உயிர்கள் சுதந்திரத்திற்காக காணிக்கையாக அளித்திருக்கார்கள். நமக்கான சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பதை மிகவும் விரைவாக காண்போம் வாங்க..!

எனது பார்வையில் சுதந்திர இந்தியா கட்டுரை:

சுதந்திர இந்தியா கட்டுரை

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைக்கு வேண்டும், கனவு மெய்பட வேண்டும், கைக்கு கிடைப்பது விரைவாக வேண்டும் இனி இந்திய மக்கள் அனைவரும் மனதில் உறுதியோடு வாழ்ந்து வருகிறீர்கள் என்பது மிகவும் பெரிய பெருமையாகவும் இருக்கிறது.

சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை

 

கற்கலாம் முதல் பொற்காலம் வரை போராட்டங்கள் ஒன்று நமக்கு புதிது அல்ல அன்று ஆங்கிலயேர்களைபோரிட்டு வெற்றிபெற்று இன்று இந்த சுகந்திரத்தை பெற்றோம்.

அன்று மாகாகவி பாரதி அவர்களுடைய சொற்களாலே போரிட்டு வெள்ளையர்களை வெளியேற்ற முயன்றார்.

நம் இந்தியாவின் பெருமை:

சுதந்திர இந்தியா கட்டுரை

சுதந்திர இந்தியா என்றவுடன் அதன் பெருமையை சொல்லக்கூடாது நமக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது இது இந்தியாவின் 75 வது சுதந்திரம் தினமாகும். அதாவது 1947 ஆம் நாள் ஆகஸ்ட் 15 அன்று கிடைத்தது.

பூமியின் சொர்க்கம் என்றால் அது இந்தியா என்று பேரரசர் “ஜஹாங்கீர்” கூறினார். அதிக இயற்கையை வளங்கள் மற்றும் அதிகப்படியான பொருட்கள் இந்தியாவில் காணப்படுவதால் உலகில் எந்த மூலையில் இருந்தால் அதிகளவு இந்தியாவை நாடுகிறார்கள்.

நம் நாட்டில் விளையும் அனைத்தையும் கண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவை அவர்களுக்கு அடிமை படுத்த நினைத்தார்கள். ஒரு காலத்தில் பிரிடிஷ் ஆட்சிக்கு அடிமையாக இருந்தோம்.

அதனை கண்ட காந்தியடிகள் அவர்கள் படித்த அரிச்சந்திர கதையை படித்து அதன் மீது கொண்ட ஆர்வத்தை அதிகமாக படிக்க தூண்டுகோலாக இருந்தது. அதனை தொடர்ந்து படித்து இந்தியாவில் உள்ள மக்கள் படும் கஷ்டத்தை கண்டு அவர்களுக்காக போராட முன்வந்தார் அதன் பின் அவர்களுக்கு நிறைய போராட்ட தியாகிகளின் பலம் கிடைத்தது காந்தியடிகளுக்கு துணையாக நிறைய கைகள் கிடைத்தது.

அதில் காந்தியடிகள் நிறைய போராட்டங்களை கொண்டார் ஒரு கட்டத்தில் ஆயுத போராட்டங்கள் தேவையில்லை என்று உறுதிபூண்டார் அதில் உப்பு சாத்தியகிரகத்தை கையில் எடுத்தார். அதில் சில சம்பவங்கள் மனதில் பெரிய துயரத்தை அளித்தது அதிலும் ஜாலியன் வாலாபாக் போராட்டங்கள் இரத்த சரித்திரத்தை உருவாக்கியது. இந்த போராட்டங்களை கண்ட ஆங்கிலேயர்கள் போராட்டங்களை கைவிட நிறைய வித்தைகளை செய்தார்கள். அதற்கும் அசையாமல் போராட்ட வீரர்கள் உறுதியாக தொடர்ந்து போராடி வந்தார்கள்.

விடுதலை நாள்:

ஆங்கிலேயர் ஒரு கட்டத்தில் வெறுத்துவிட்டார்கள் காரணம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நின்று போராடி வந்தார்கள் அப்போது ஆங்கிலேயருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அவர்களால் ஒற்றுமையாக இருந்த மக்களிடம் போராட முடியாமல் 1947 ஆகஸ்ட் 15 இந்தியர்களிடம் ஒப்படைத்தார்கள். அக்கணமே இந்தியாவின் சுதந்திர தினம் என்று முடிவுக்கு வந்தது. இந்த சுதந்திரம் கிடைக்க நம் ஒற்றுமையும் பலரின் உயிர்கள் மற்றும் சுதந்திர தியாகிகளும் காரணமே. அனைவருக்கும் (ஆகஸ்ட் 15) சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → Tamil Katturai

 

Advertisement