IRCTC-யுடன் ஏஜென்டாகி மாதம் 80,000/- பணம் சம்பாதிப்பது எப்படி?

Advertisement

IRCTC Agent Registration Process in Tamil

இந்தியாவில் தற்பொழுது கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றன.. இவற்றில் செல்வதற்கு வசதியாக இருப்பதுடன் களைப்பு தெரியாமல் நமது பயணத்தை நிம்மதியாக மேற்கொள்ளலாம். இதன் காரணமாக பலர் ரயில் பயணத்தை விரும்புகின்றன. குறிப்பாக 100-யில் 70 சதவீதம் மக்கள் தங்களது ரயில் பயண டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பெற்று கொள்கின்றன.. ஆக நீங்கள் ரயில் டிக்கெட்டுகளை விற்று பணம் சம்பாதிக்கலாம். அது எப்படி என்றால் IRCTC-யுடன் ஏஜென்ட் ஆகவேண்டும் அதை செய்தால் போதும் அதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.. வாங்க IRCTC-யுடன் எப்படி ஏஜென்ட் ஆகலாம் என்பதை குறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம்..

IRCTC-யுடன் எப்படி ஏஜென்ட் ஆகலாம்?

நீங்கள் IRCTC-யில் ஏஜென்ட் ஆக வேண்டும் என்றால் நேரடியாக ஏஜென்ட் ஆக முடியாது.. IRCTC அங்கீகாரம் பெற்ற முன்பதிவு முகவர்கள் பட்டியலிடப்பட்ட முதன்மை முகவர்கள் மூலம்தொடர்பு கொண்டு தான் நீங்கள் IRCTC-யில் ஏஜென்ட் ஆக பதிவு செய்ய முடியும்.. எனவே நீங்கள் சரியான ஏஜென்டை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் https://www.irctc.co.in/eticketing/findAgents.jsf என்ற லிங்கை கிளிக் செய்து ஏஜென்டுகளை தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது அவற்றில் உங்கள் நகரம் அல்லது பின் குறியீட்டைப் பயன்படுத்தி நீங்கள் ஏஜென்டுகளை சரிபார்க்கலாம். பிறகு அவர்களை தொடர்பு கொண்டு IRCTC-யில் ஏஜென்ட் ஆக பதிவு செய்யலாம்.

இதற்கு தேவைப்படும் ஆவணங்கள்:

  • பான் கார்டு
  • ஆதார் அட்டை
  • மொபைல் எண்
  • மின்னஞ்சல் ஐடி
  • புகைப்படம்

IRCTC அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு ஏஜென்சிக்கான சந்தா கட்டணம்:

பதிவுக் கட்டணங்கள் 1 வருடத்திற்கு ₹ 3,999 ரூபாய் அதுவே பதிவுக் கட்டணம் 2 ஆண்டுகளுக்கு ₹ 5,999 ரூபாய் ஆகும்.

ஏஜென்ட் ஆவதினால் என்ன நன்மை?

  • இவற்றில் ஏஜென்ட் ஆவதன் மூலம் வரம்பற்ற IRCTC இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொடுக்கலாம்.
  • IRCTC ஏஜென்ட் General, Tatkal, Waiting List, RAC ஆகியவற்றை முன்பதிவு செய்யலாம்.
  • இதன் மூலம் IRCTC ஏஜெண்டுக்கு கமிஷன்கள் வழங்கப்படும்.
  • IRCTC கூறியிருக்கும் விதிமுறைகளை சரியாக பின்பற்றி இருந்தால் நீங்கள் எந்த ஒரு அபராதமும் கட்டிட வேண்டிய அவசியம் இருக்காது.
  • ரயில்வே நிறுவனத்திற்கு ஏஜென்ட்டின் Trade License தேவை இல்லை.
  • மிக எளிமையான செயல்முறையின் மூலம் நீங்கள் IRCTC ஏஜென்ட் ஆகலாம். இதன் மூலம் மதம் 80,000/- மேல் சம்பாதிக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

உங்களிடம் நல்ல இண்டர்நெட் வசதி இருக்க வேண்டும், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், பிரிண்டர், மொபைல் இவை இருந்தால் போதும்.

எவ்வளவு கமிஷன் கிடைக்கும்:

Non AC Class (SL, 2S) PNR ஒன்றுக்கு ரூ.20
AC Class (1A, 2A, 3A, CC) PNR ஒன்றுக்கு ரூ.40
Additional PG Commission டிக்கெட் கட்டணத்தில் 1% வரை

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement