கண்ணதாசன் பணியாற்றிய பத்திரிகைகள் யாவை? | Kannadasan Paniyatriya Pathirikai

Kannadasan Paniyatriya Pathirikai

கண்ணதாசன் பணியாற்றிய பத்திரிகைகள் யாவை..!

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் கண்ணதாசன் அவர்களை பற்றி தான்.. அதாவது கண்ணதாசன் அவர்கள் பணியாற்றிய பத்திரிகைகள் யாவை என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். ஆகவே இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

கண்ணதாசன் அவர்கள் பற்றிய சிறிய தகவல்கள்:

பிறப்பு:

கண்ணதாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

இளமை பருவம்:

கண்ணதாசன் அவர்களுக்கு சிறு வயதிலேயே எழுத்தின் மீது நிறைய ஆறுவம இருந்துள்ளது. இதன் காரணமாக சிறு சிறு புத்தகங்களை வாசிக்க தொடங்கினர். பிறகு பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசன் அவர்களுக்கு வந்தது.

திரை உலகிற்கு வந்த விதம்:

பிறகு 16 வயதி அவரது வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு வந்துவிட்டாராம். பின் தன் பெயரை சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. அதன் பிறகு ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார்.

பின்பு கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் “நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், “ப்ரூப் திருத்துனர்” வேலை கேட்டார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரை ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.

கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

கண்ணதாசன் பணியாற்றிய பத்திரிகைகள் யாவை? – Kannadasan Paniyatriya Pathirikai

திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன.

கண்ணதாசன் திரைப்பட பாடல் எழுத தொடங்கியது எப்போது தெரியுமா?

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.

பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன்.

கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil