கவரிங் நகை பாலிஷ் பண்ணுவது எப்படி தெரியுமா?

Advertisement

கவரிங் நகை பாலிஷ் பண்ணுவது எப்படி தெரியுமா? | Kavaring Nagai Polish in Tamil..!

ஹாய் பிரண்ட்ஸ் நம்ம வீட்டில் நிறைய கவரிங் நகைகள் இருக்கும். அவற்றில் சில கருத்து மிகவும் பலசாக பயன்படுத்த முடியாத அளவிற்கு இருக்கும். இருப்பினு அந்த நகை நமக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கும். அதற்காக பாலிஷ் செய்யும் கடைகளுக்கு சென்று பாலிஷ் செய்ய வேண்டும் என்று அதனை ஓரமாக வைத்திருப்போம். இனி பாலிஷ் செய்ய கடைகளுக்கு செல்ல வேண்டும் நமது வீட்டிலேயே மிக எளிதாக பாலிஷ் செய்யலாம். உங்கள் வீட்டில் இருக்கும் கருத்துப்போன கவரிங் வளையல், செயின், கம்மல் எதுவாக இருந்தாலும் சரி, அதை ஐந்தே நிமிடத்தில் புதுசு போல ஜொலிக்க வைக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

கவரிங் நகை பாலிஷ் பண்ணுவது எப்படி?

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய நன்றாகப் புளித்த தயிர். அதன் பின்பு சாம்பல். எந்த சாம்பலை எடுப்பது? அடுப்பில் இருக்கக்கூடிய சாம்பல் எடுத்துக் கொண்டாலும் சரி.

அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் பூஜை அறையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி பொருத்தி வைப்பீர்கள் அல்லவா. அது எரிந்து முடிந்த பின்பு அந்த அகல் விளக்கில் சாம்பல் இருக்கும் அல்லவா அதை எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது ஊதுபத்தி எரிந்து முடிந்த பின்பு தட்டில் சாம்பல் கொட்டி இருக்கும் அல்லவா அந்த சாம்பலை எடுத்துக் கொண்டாலும் சரி. ஏதோ ஒரு சாம்பல் இருக்கட்டும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் சாம்பலை போட்டு அந்த சாம்பலில் புளித்த தயிரை ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நகைகளை பள பளன்னு ஜொலிக்க வைக்க இந்த பேஸ்ட் போதுங்க.

உங்களுடைய கவரிங் நகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே இந்த பேஸ்டை தடவி லேசாக கையை வைத்து தேய்த்துக் கொடுங்கள்‌.

ரொம்பவும் அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டாம். எல்லா இடங்களிலும் படும்படி இந்த பேஸ்டை அப்ளை செய்து விட்டு 5 நிமிடம் போல தேய்த்து விட்டு தண்ணீரில் கழுவி பாருங்கள். ரிசல்ட் உங்களுக்கே தெரியும்.

இந்த முறையை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் மீது அப்ளை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement