குடியரசுத் தலைவருக்கு எவ்வளவு சம்பளம்? அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன தெரியுமா?

Advertisement

குடியரசு தலைவர் சம்பளம் | Kudiyarasu Thalaivar Salary

வணக்கம் நண்பர்களே..! நமது நாட்டிற்கு குடியரசு தலைவர் எதற்கு? அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு? அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன? குடியரசு தலைவரின் அதிகாரம் என்ன? ஒருவர் குடியரசு தலைவர் ஆக வேண்டும் என்றால் அதற்கு என்னென்ன தகுதிகள் தேவைப்படும். குடியரசு தலைவர் தவறு செய்தால் அவர் எப்படி பதவி நீக்கம் செய்ய வேண்டும்?, யார் அவர்களை பதவி நீக்கம் செய்வார்கள் போன்ற தகவல்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

குடியரசு ஆக என்ன தகுதி?

பொதுவாக president and vice president election Act 1952 படி ஒரு குடியரசு தலைவர் ஆக்குவதற்கு 35 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

லோக்சபாவில் MP ஆவதற்கான தகுதி அவர்களுக்கு இருக்க வேண்டும். எந்த வகையிலும் அரசு ஊழியராக இருக்க கூடாது.

மேலும் அவர்கள் தேர்தலில் நிற்பதற்கு 15,000/- ரூபாய் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்.

மேலும் இவர்களுக்கு முன்மொழிவோர் 50 பெரும், வழிமொழிவோர் 50 பெரும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

குடியரசு தலைவரின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் என்ன?

குடியரசு தலைவர் தான் இந்தியாவின் தலைவர், இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார்.

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா, லோக்சபாவை கூடுவதற்கு முழு அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.

பாராளுமன்ற அவைகளை கூட்டுதல், கூட்டமுடிவில், கூட்டநிறைவை அறிவிப்பை வெளியிடும் அதிகாரம், மக்களவையின் பதவிகாலம் முடியும்போதோ அல்லது பிற வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவோ மக்களவையை கலைக்கும் அதிகாரம், சட்டவரைவு மீது இரண்டு அவைகளுக்கும் இடையே எழும் முரண்களை களைய நாடாளுமன்ற கூட்டுக்கூட்டதிற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் போன்ற அதிகாரங்கள் குடியரசுத்தலைவருக்கு உண்டு.

பொதுத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும், ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் இந்திய குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல் 2022

குடியரசு தலைவர் சம்பளம் எவ்வளவு? – President of India Salary Details in Tamil – Kudiyarasu Thalaivar Salary:

இந்தியக் குடியரசுத் தலைவர் மாதத்திற்கு சுமார் 5,00,00/- ரூபாய் சம்பளம் பெறுகிறார். 7வது ஊதியக் குழு அமலுக்கு பிறகு குடியரசுத் தலைவரின் சம்பளம் 200 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவருக்கு மாதம் ரூ.1.50 லட்சம் என இருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் மாதம் ரூ.5,00,000/- உயர்த்தப்பட்டது.

குடியரசு தலைவருக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன?

வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், தங்குமிடம் போன்றவை வழங்கப்படும், அவரும் அவரது மனைவியும் அல்லது (கணவன்) உலகில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்யலாம். அவருக்கு உதவியாக 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பர், இதுமட்டுமின்றி சுமார் 200 பேர் அவர் தங்கும் ராஷ்டிரபதி பவனில் பணியாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் அவருக்கு உதவியாக இருப்பர். மேலும் பல சலுகைகள் குடியரசு தலைவருக்கு வழங்கப்படுகிறது.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement