Advertisement
Kyc தமிழ் விரிவாக்கம் | Kyc Full Form in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் Kyc என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். வங்கிகளில் கேட்கப்படும் பொதுவான சான்றிதழ்களில் இந்த Kyc-யும் ஒன்று. இது எதற்காக கேட்கப்படுகிறது மற்றும் அதன் பயன் என்ன என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நாம் இந்த பதிவில் Kyc என்றால் என்ன என்பதற்கான முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க.
Kyc Full Form in Tamil:
- Know Your Customer என்பதே Kyc-யின் விரிவாக்கம் ஆகும். தமிழில் “உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்” என்று அர்த்தம்.
- வங்கி தனது வாடிக்கையாளரின் முகவரி மற்றும் அடையாளத்தை தெரிந்து வைத்து கொள்வதற்காக வாங்கபடுகிறது. அதாவது வாடிக்கையாளர் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்காக வங்கி கணக்கு எண் தொடங்கும் போது கேட்கப்படுகிறது.
Kyc Meaning in Tamil:
- இந்த அமைப்பை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வழங்கியிருக்கிறது. இதன் நோக்கமே Black Money-ஐ ஒழிப்பதாகும். வங்கி கணக்கின் உரிமையாளர், தொழில் மற்றும் பணம் எங்கிருந்து வருகிறது போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் மற்றும் வங்கிகள் அளிக்கும் சேவைகள் தவறாக பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த Kyc உதவுகிறது.
- வங்கி கணக்கை தொடங்க தேவையான Kyc-யாக முகவரி சான்று, அடையாள சான்று மற்றும் புகைப்படம் கேட்கப்படுகிறது.
அடையாள சான்றிற்கு தேவையான ஆவணங்கள்:
- What is Kyc in Tamil: அடையாள சான்றிற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
- இவற்றில் உங்களின் சரியான முகவரி இருந்தால் அவற்றையே முகவரி சான்றாகவும் கொடுக்கலாம். இல்லையெனில் முகவரியுடன் கூடிய வேறொரு சான்றை கொடுக்க வேண்டும்.
முகவரி சான்றிற்கு தேவையான ஆவணங்கள்:
- Kyc Meaning in Tamil: முகவரி சான்றிற்கு டெலிபோன் பில், EB பில், கேஸ் பில், ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தலாம்.
What is Kyc in Tamil:
- வாடிக்கையாளர் முகவரி மாற்றம் செய்யப்பட்டால் அதை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். வங்கியும் வாடிக்கையாளரின் முகவரியை கவனிக்க வேண்டும்.
- 1949-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7-ன் படி வாடிக்கையாளரின் முகவரி மற்றும் அடையாள சான்றை சரிபார்க்க முடியும்.
- வங்கி, போஸ்ட் ஆபீஸ், வர்த்தகம் சார்ந்த துறைகளில் Kyc வாங்கப்படுகிறது.
தொடர்புடைய பதிவு: |
LLB Full Form in Tamil |
AM/PM Full Form in Tamil |
MLA Full Form in Tamil |
RIP Full Form in Tamil |
Phd Full Form in Tamil |
BCA Full Form in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
Advertisement