மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லா? உருது சொல்லா? எந்த மொழியை சேர்ந்தது?

மன்னிப்பு என்பதன் தமிழ்ச்சொல்

வணக்கம் நண்பர்களே நாம் தமிழ்ச்சொல் என்று நினைத்து பயன்படுத்தும் பல சொற்கள் வேறு மொழி சொற்கள் ஆகும். அவற்றில் ஒன்று தான் மன்னிப்பும். நாம் ஏதாவது தவறு செய்துவிட்டோம் என்றால் உடனே ஆங்கிலத்தில் டீசன்டாக Sorry என்று சொல்லிவிடுவோம். அந்த Sorry-க்கு சரியான தமிழ் சொல் எது என்றால் கேட்டால் அதற்கு அனவைரும் கூறும் பதில் மன்னிப்பு என்று சொல்வார்கள். மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் கிடையாது. மன்னிப்பு என்பது வேறொரு மொழியின் சொல் ஆகும். அப்படியென்றால் Sorry-க்கு தமிழ் சொல் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியும் என்றால் மிக்க மகிழ்ச்சி.. அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மன்னிப்பு என்பதன் தமிழ்ச்சொல் எது?

இந்த மன்னிப்பு என்பதன் தமிழ் சொல் எதுவென்றால் பொறுத்தருள்க, பொறுத்துக் கொள்ளுங்கள் என்பது தான் மன்னிப்பு என்பதற்கான தமிழ்ச்சொல் ஆகும். 2018-யில் நடைபெற்ற TNPSC தேர்விலும் இந்த கேள்வி கேட்டகப்பட்டிருந்தது.. அதற்கு தேர்வாளர்கள் பலர் தமிழ் என்று விடையளித்து இருந்துள்ளார்கள். அந்த தேர்வுக்குக்கான answer key வரும்போது அந்த கேள்விக்கு உருது என்பது தான் சரியான விடை என்பதை அறிந்தபோது பலர் திகைத்துபோயுள்ளார்கள். அதன் பிறகு பல சர்ச்சைகளும் எழுந்தது. இருந்தாலும் மன்னிப்பு என்பது உருது மொழிதான்.

மன்னிப்பு எந்த மொழிச் சொல்?

மன்னிப்பு என்பது உருது சொல் ஆகும்.. ஆனால் பலர் இதனை தமிழ்ச்சொல் என்று நினைத்து வருகின்றன.

மேலும் நாம் தமிழில் பயன்படுத்தும் உருது சொற்களை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

உருது மொழிச் சொல் தமிழ்ச் சொல்
மன்னிப்புபொறுத்தருள்க
நமாஸ் தொழுகை
ஜீரா தீங்கூழ்
ஜிகினா ஒண் தகடு
விலாவரி முழு விளக்கம்
வாரிசு மரபுரிமையர்
வாய்தா தவணை
வாபஸ் திரும்பப் பெறல்
வசூல் தண்டல்
வகையறா முதலியனபிற
லாடம் குளம்பணி
லத்தி குறுந்தடி
ரகம் வகை
மௌசு கவர்ச்சி
மாகாணம் மாநிலம்
மத்தாப்பு தீப்பூ
மசோதா சட்ட முதல் முந்தாவணம்
மசூதி பள்ளிவாயில்
போதை வெறிமயக்கம்
புதினா ஈயெச்சக்கீரை
பூந்தி பொடிக்கோளி
பீடி சுருட்டு 
படுதா திரைச்சீலை
பட்டா உரிமை ஆவணம்
பங்களாவளமனை
தராசுதுலாக்கோல்
தயார்அணியம்
தமாஷ் வேடிக்கை
தபால் அஞ்சல் 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information In Tamil
SHARE