உலகின் ஆபத்தான இடங்கள் | Most Dangerous Places in Tamil
Most Dangerous Places in Tamil – பொதுவாக அழகா இருக்கும் அனைத்திலுமே அதிக ஆபத்தான விஷயங்களும் அடங்கி இருக்கும். இந்த உலகில் அழகான விஷயங்கள் நிறைய இருக்கின்றன அவற்றில் அதிக ஆபத்துகளும் நிறைய நிறைந்திருக்கும். அந்த வகையில் உலகில் அழகும், ஆபத்துகளும் அதிகம் நிறைந்துள்ள இடங்களை பற்றி தான் இந்த பதிவில் படித்து தெரிஞ்சிக்கபோறோம்..
Lake Nyos:
Lake Nyos என்பது ஒரு ஏரியாகும். இந்த ஏரி உலகில் மிகவும் ஆபத்தான ஏரிகளில் முதல் ஏரி ஆகும். இந்த ஏரியில் அதிகளவு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுமாம். இவை அந்த ஏரி நீரில் கலந்து நச்சுக்கள் வாய்ந்த சிறு சிறு மேகங்களாக உருமாறி காற்றில் கலந்து உயிர் சேதங்களை ஏற்படுத்துமாம். இந்த ஆபத்தான ஏரியானது கேமரூன் (Cameroon) நாட்டில் உள்ளது.
Tianmen Mountain:-
Tianmen Mountain என்பது சீனாவில் உள்ள ஒரு மலையாகும். இந்த மலையில் ஏராளமான குகைகள், அதிக வளைவுகள் கொண்ட ரோடுகள், கோயில்கள் உள்ளதால் இது ஒரு சுற்றுலா தலமாக கருதப்படுகிறது. இந்த 4500 சதுர அடியில் உள்ள கண்ணாடி பாலங்கள் மிகவும் ஆபத்து வாய்ந்த இடமாக இந்த மலையில் காணப்படுகிறது.
Miyake Jima Island:-
Miyake Jima Island என்பது ஜப்பானில் உள்ள ஒரு தீவாகும். இந்த தீவில் குறைந்த அளவிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றன. இங்குள்ள மக்கள் நச்சுவாயுக்கள் தடுக்கும் முகமூடியை எப்பொழுதுமே அணிந்துகொள்வார்களாம். இதற்கு என்ன காரணம் என்றால் இந்த தீவில் இருக்கும் ஒரு எரிமலை தொடர்ந்து நச்சுவாயுக்களை வெளியேற்றிக்கொண்டிருக்குமாம். இந்த தீவு மிகவும் ஆபத்தானதாக இருந்தாலும் மிக குறைந்த அளவில் மக்கள் வாழ்ந்து வருகின்றன.
Lake Natron:
இது ஒரு சிவப்பு நிற ஏரியாகும, இந்த ஏரி தான்சானியா நாட்டில் உள்ளது. வானில் இருந்து இதை பார்த்தால் ஏதோ வேற்று கிரகம் மாதிரி இருக்குமாம். இந்த ஏரியில் இதுவரை எந்த உயிரினங்களும் உயிர் வாழ்ந்தது கிடையாதாம். இதற்கு காரணம் ஏரியின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறும் விஷம் தன்மையான நச்சுக்கள் தான்.
Vesuvius Volcano:
Vesuvius Volcano என்பது இத்தாலியில் உள்ள ஒரு எரிமலையாகும். முன்னொரு காலத்தில் இந்த எரிமலை வெடித்து ஏராளமான மக்கள் எரிந்துள்ளனர். இந்த எரிமலையானது மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். தற்பொழுது வரை இந்த எரிமலையை சுற்றி நேபால் மக்கள் வசித்து வருகின்றன. அடுத்த கணம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற எண்ணத்தோடு அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றன. உலகில் ஆபத்தான இடங்களுள் இதுவும் ஒன்று.
இதையும் படியுங்கள் –> உலகின் மிக ஆபத்தான நாய்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |