National Emblem Details in Tamil
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தேசிய சின்னங்கள் பற்றி அனைவருக்குமே தெரியும். நம் நாட்டில் பல வகையான தேசிய சின்னங்கள் இருக்கின்றன. அதுபோல தேசிய சின்னங்களில் முதன்மையாக இருக்கும் நான்முக சிங்கம் என்ற தேசிய இலச்சினை சின்னத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஏன் இவை எல்லாம் தேசிய சின்னங்களாக இருக்கின்றன உங்களுக்கு தெரியுமா..? |
இந்திய தேசிய இலச்சினை:
இந்த தேசிய இலச்சினை என்ற சின்னத்தை நாம் பார்த்திருப்போம். நாம் பயன்படுத்தும் நாணயம், ரூபாய் நோட்டிலிருந்து நம் மத்திய அரசு வெளியிடும் அனைத்திலுமே இந்த தேசிய இலச்சினை சின்னம் இருக்கும்.
அப்படி அனைத்திலும் பயன்படுத்தும் தேசிய இலச்சினை என்ற நான்முக சிங்கம் அசோகர் தூணில் இருந்து எடுக்கப்பட்டது. இந்திய தேசிய இலச்சினை சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அசோகர் என்பவர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர் ஆவார்.
நாம் இந்த சின்னத்தை பார்க்கும் போது 3 சிங்கங்கள் தான் தெரியும். ஆனால், அதன் பின் 4 சிங்கங்கள் ஒன்றுடன் ஓன்று சேர்ந்து இருப்பது போல இருக்கும். அதுபோல தேசிய இலச்சினை சின்னத்தில் இருக்கும் நான்கு சிங்கங்களும் அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன.
இந்த நான்கு சிங்கங்களும் வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த வட்ட வடிவ பீடத்தில் நான்கு சக்கரங்கள் இருக்கும். அதை தான் நாம் அசோக சக்கரம் என்று சொல்கின்றோம்.
இந்தப் வட்ட பீடத்தில் கிழக்கில் யானையும், மேற்கில் குதிரையும், தெற்கே எருதும், வடக்கே சிங்கம் போன்ற விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவில் தான் அசோக சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த சின்னத்தின் கீழ் மலர்ந்த தாமரை கவிழ்த்து வைத்திருப்பது போல இருக்கும். இந்த வட்ட வடிவ பீடமானது ஒரு மலர்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது. மலர்ந்த தாமரையானது மலரும் வாழ்வை குறிக்கிறது. அசோக சக்கரம் தூணின் மகுடமாக விளங்குகின்றது.
இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம் |
இந்தியாவின் தேசிய இலச்சினையாக அறிவிக்கப்பட்ட ஆண்டு..?
சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினை சின்னமாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நம் நாட்டின் தேசிய சின்னமாக ஏற்ற பின்பு மூன்று சிங்கங்கள் மட்டும் தெரியும். நான்காவது சிங்கம் மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு இருக்கும். அதுபோல அசோகச்சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது. வலது புறத்தில் எருதும் இடது புறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளன. வலது, இடது கோடிகளில் தர்மச் சக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன. அதுபோல பீடத்தின் கீழிருந்த தாமரை நீக்கப்பட்டு இருக்கும் . இது தான் நம் நாட்டின் தேசிய இலச்சினை சின்னமாக இருக்கிறது.இந்திய தேசிய சின்னங்கள் |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |