NRE vs NRO Account in Tamil
பெரும்பாலான நபர்களுக்கு இந்த NRE கணக்கு என்றால் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இந்த வார்த்தையை அதிகமாக வங்கியில் தான் சொல்வார்கள். மேலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அல்லது அங்கிலிருந்து வந்தவர்கள் தான் இந்த வார்த்தை சொல்வதை கேட்டிருப்போம்.
அப்போது நமக்கு தெரியாது என்னவாக இருக்கும் எதற்காக இந்த கணக்கை சொல்கிறார்கள். ஏன் கணக்கை NRE கணக்காக மாற்ற சொல்கிறார்கள் என்று கேள்வி இருக்கும். இந்த கேள்விக்கும் அதேபோல் NRO என்றால் என்ன என்பதை பற்றியும் தெளிவாக காண்போம் வாங்க..!
NRE Full Form:
NRE = NON-RESIDENT EXTERNAL
NRO Full Form
NRO = NON RESIDENT ORDINARY
What is NRE Account in Tamil:
வெளிநாட்டில் வாழும் அதாவது 182 நாட்கள் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்தார்கள் என்றால் அவரை NRI என்று கருதப்படுவார்.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் அவருடைய கணக்கை NRE மாற்றவேண்டும். சிலர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவில் சேமிப்பு கணக்கு போல் வைத்துக் கொள்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஏனென்றால் அதிலிருந்து Tax பிடிப்பார்கள். அதாவது அதிலிருந்து ஒரு Fixed Deposit போட்டாலும் அதற்கு tax பிடிப்பார்கள். ஆகவே வெளிநாட்டில் உள்ளவர்கள் NRE கணக்கை மாற்றிக் கொள்வது நல்லது.
அதனை எப்படி மாற்றுவது என்றால் உங்களுடைய பாஸ்போர்ட் Copy கொடுத்து அதில் விசா பக்கத்தையும் கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் உங்கள் கணக்கை NRE கணக்காக மாற்றி தருவார்கள்.
NRE vs NRO Account in Tamil:
Non-Residential External:
இதில் பணத்தை ஒரு NRE கணக்கில் உள்ள வைப்புத் தொகைகள் சம்பாதித்த வட்டியுடன் சேர்த்து முழுமையாக திருப்பி அனுப்பப்படும்.
Non Resident Ordinar:
ஆனால் NRO கணக்கில் அப்படி இல்லை. NRO கணக்கிலிருந்து பணத்தை அனுப்ப முடியாது. அப்படி அனுப்ப வேண்டுமென்றால் வருடத்திற்கு ஒரு முறை வெறும் $1 மில்லயன் CA மூலம் அதாவது Chartered Accountant உள்ளவர்களிடமிருந்து Proof பெற்று திருப்பி அனுப்பலாம்.
Non-Residential External:
NRE கணக்கில் டெபாசிட் செய்யும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.
Non Resident Ordinary:
கணக்கின் வருமானத்திற்கு மட்டும் வரி விதிக்கப்படுகிறது. சில நாடுகளில் குறிப்பிட்ட நாடுகளுடனான இரட்டை வரி விதிப்பு கிடையாது.
Non-Residential External:
NRE மற்றும் NRO கணக்குகள் வெளிநாட்டில் உள்ள காசுகளில் எந்த ஒரு நாணயத்தையும் டெபாசிட் செய்ய முடியும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு எங்கு தொடங்குவது?
Non Resident Ordinary:
ஆனால் இந்தியாவில் இருந்து வரும் இந்தியர்கள் குறிப்பிடப்பட்ட நிதிகள் NRO கணக்கில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
Non-Residential External:
நீங்கள் ஒரு NRE கணக்கிலிருந்து மற்றொரு NRE கணக்கிற்கும் NRO கணக்கிற்கும் பணத்தை மாற்ற முடியும்.
Non Resident Ordinary:
ஆனால் NRO கணக்கிலிருந்து நிதியை NRE கணக்கிற்கு மாற்ற இயலாது.
Non-Residential External:
நீங்கள் வசிக்கும் இந்தியருடன் கூட்டு NRE கணக்கைத் திறக்க முடியாது. கூட்டு NRE திறக்கவேண்டும் என்றால் அதற்கு NRI அதாவது வெளிநாட்டில் உள்ளவர்களுடன் மட்டுமே கணக்கை திறக்க முடியும்.
Non Resident Ordinary:
அனால் NRO அப்படி இல்லை கூட்டுக் கணக்குதாரராக வசிக்கும் இந்தியருடன் நீங்கள் NRO கணக்கைத் தொடங்கலாம்.
Non-Residential External:
ஒரு NRE கணக்கில் வைப்புத்தொகை மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் மற்றும் மற்ற இழப்பு ஆகியவற்றிற்கு வெளிப்படும்.
Non Resident Ordinary:
ஆனால் NRO கணக்கு வைப்புத்தொகை தினசரி நாணய ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்படாது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 டீமேட் கணக்கு என்றால் என்ன?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |