ரூ.60/- இருந்தால் போதும்..! ஆன்லைனில் சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்..!

Advertisement

ஆன்லைனில் OBC சான்றிதழ் பெறுவது எப்படி..? 

How To Apply OBC Certificate Online: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ்(OBC Certificate) எப்படி அப்ளை செய்து பெறலாம் என்ற முழு விவரங்களை தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த சான்றிதழ் பெறுவதற்கு ரூ.60/- மட்டும் இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே ஓபிசி சான்றிதழை எளிமையாக மொபைல் மூலம் பெறலாம். சரி வாங்க நண்பர்களே இப்போது ஆன்லைன் மூலம் தங்களுடைய மொபைலில் எப்படி ஓபிசி சான்றிதழை அப்ளை செய்யலாம் என்று விரிவாக படித்தறியலாம்.

newஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி..! how To Remove Name In Smart Card Online..!

இணையதள முகவரி:

முதலில் தங்களுடைய மொபைலில் google search ஆப்ஷனில் e sevai என்று டைப் செய்துக்கொள்ளவும். அவற்றில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இதற்கு முன் Registration செய்யாதவர்கள் Register செய்து கொள்ளவும்.

ஸ்டேப் 1:

ஆன்லைன் மூலம் மொபைலில் ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு முதலில் விண்ணப்பதாரரின் பெயர், மாவட்டத்தின் பெயர், தாலுக்கா, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி(Email id), ஆதார் எண் கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 2:

அடுத்ததாக Login id-யில் உங்களுடைய பெயர் மற்றும் பக்கத்தில் ஏதேனும் எண்ணை கொடுத்து என்டர் செய்யவும். அடுத்து password கொடுத்து என்டர் செய்ய வேண்டும்.

ஸ்டேப் 3:

கொடுத்துள்ள passwordஐ உறுதி செய்த பிறகு கேப்ட்சா எண்ணை கொடுத்து sign up ஆப்ஷனை கொடுக்கவும். sign up கொடுத்த பிறகு தங்களுடைய மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும்.

அந்த எண்ணை கொடுத்து என்டர் செய்த பிறகு Registration ஆகும்.

ஸ்டேப் 4:

அடுத்து இணையதளத்தில் Citizen Login என்பதை க்ளிக் செய்யவும். முதலில் கொடுத்த Login Id மற்றும் password ஐ கொடுத்து கேப்ட்சா எண்ணை கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

ஸ்டேப் 5:

லாகின் செய்த பிறகு Revenue Department என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும். அதன் பிறகு revenue department-ல் 10 என்ற இடத்தில் 50 என்ற எண்ணினை கொடுக்க வேண்டும்.

இவற்றில் other backward classes(OBC) certificate என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அடுத்ததாக Proceed என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டேப் 6:

இப்போது Register can என்பதை க்ளிக் செய்யவும்.

அவற்றில் Document Type-ல் திரு/ திருமதி என்பதில் சரியானவற்றை கொடுத்து விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு OTP எண்ணானது வரும்.

newஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?

ஸ்டேப் 7:

அந்த OTP எண்னை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யவேண்டும். இப்போது can நம்பர்/ ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வந்துவிடும். அவற்றை க்ளிக் செய்யவேண்டும்.

ஸ்டேப் 8:

அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு otp எண்ணானது வரும். அவற்றை கொடுத்து conform OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இப்போது படிவமானது ஓபன் ஆகும்.

ஸ்டேப் 9:

அந்த படிவத்தில் personal details-ல் Hindu என்பதை செலக்ட் செய்த பிறகு தங்களுடைய சாதியினை செலக்ட் செய்ய வேண்டும். அடுத்து occupation group-ல் student என்பதை தேர்வு செய்யவும்.

அதன் பிறகு status of father என்பதில் yes/no சரியானவற்றை கொடுத்து அவர்களுடைய தொழில் முகவரியினை சரியாக கொடுக்க வேண்டும்.

இது போன்று mother ஆப்ஷனிற்கும் விவரங்களை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 10:

அடுத்ததாக Declaration என்பதில் அந்த கட்டத்தில் டிக் செய்த பிறகு submit என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

இணைக்க வேண்டியவை:

  • Photo 
  • Any Address Proof 
  • Community Certificate 
  • Self Declaration Of Applicant 

இவற்றில் Self Declaration Of Applicant டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து விவரங்களை குறிப்பிட்டு அப்லோட் செய்து கொடுக்கும் முறையில் இருக்கும்.

கீழ் செலக்ட் என்ற ஆப்ஷனில் போட்டோ கொடுத்து document no 1 கொடுத்து எல்லாவற்றையும் அப்லோட் செய்யவும்.

ஸ்டேப் 11:

அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். அவற்றில் service charges என்பதில் ரூ.60/- இருக்கும்.

அவற்றின் I agree என்ற கட்டத்தில் டிக் செய்த பிறகு make paymentஐ கொடுக்க வேண்டும்.

ஸ்டேப் 12:

அதன் பிறகு application number ஒன்று வரும். அதனை டவுன்லோட் செய்து வெப்சைட்டை லாகின் செய்யவும்.

லாகின் செய்த பிறகு அந்த application எண்ணை கொடுத்து check status என்பதை கொடுத்து உறுதி செய்துகொள்ளலாம். approved செய்த பிறகு சான்றிதழை ஆன்லைன் மூலம் மொபைலில் டவுன்லோட் செய்யலாம்.

newமுதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement