பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை..!

Paga Pirivinai Pathiram Eluthum Murai

பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை..! Paga Pirivinai Pathiram Eluthum Murai..!

பாகப்பிரிவினை பத்திரம் என்பதை ஆங்கிலத்தில் பார்ட்டிசின் பத்திரம் என்று அழைப்பார்கள். இந்த பத்திர வகைகள் இரண்டு விதமாக பாகப்பிரிவினையாக மாறுகிறது. மூதாதையர் பூர்விகம், உயில் எழுதாமல் இருக்கும் அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் அல்லது கூட்டு சேர்ந்து வியாபார நோக்கில் கட்டும் கடைகள் மற்றும் வீடுகள் போன்றவைகளால் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் பாகப்பிரிவினை சொத்து கொள்ளலாம். இது கட்டாயம் இல்லை அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம் அல்லது முடிவு ஆகும்.

எடுத்துக்காட்டு: 1

உயில் எழுதாமல் இருக்கும் சொத்துக்கள் அல்லது கூட்டு குடும்பத்தின் வழியாக வந்த சொத்துக்களை எப்படி சமமாக பிரிப்பது?

உயில் எழுதாமல் போனால் முதல் நிலை வாரிசுகளுக்கு எவ்வித தயக்கமும் இன்றி செல்லுபடியாகும். முதல் நிலை வாரிசுகள் அல்லாத நிலையில், நேரடியாக இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு சென்று விடும். முதலில் அசையும், அசையா சொத்துக்களை பட்டியலிட்ட பிறகு சொத்தின் மதிப்பை கணக்கிடவும். அதில் ஒரு சிலர் அசையா சொத்துக்களையும், ஒரு சிலர் அசையும் சொத்துக்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது கட்டாயமில்லை.

சம பாகமாக பிரித்து எடுத்துக்கொண்டால் எந்தவிதமான பிரச்சனைகளும் எவருக்கும் வராது. இதற்கு முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணம் 1 சதவீதம் மட்டுமே. அதாவது ஒவ்வொரு பத்திரத்திற்கு மட்டுமே இது பொருந்தும்.

இதில் தனி தனியே பிரித்தால் அந்த இடத்திற்கு தேவையான பட்டா மற்றும் பத்திரம் உங்கள் பெயரில் மாற்ற வேண்டும். இந்த பத்திரம் நீங்கள் ஒரு நல்ல பத்திர எழுத்தர் கொண்டு எழுதலாம்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
அசல் சொத்து பத்திரம் தொலைந்துவிட்டால் உடனே செய்ய வேண்டிய விஷயங்கள்!

எடுத்துக்காட்டி: 2

கூட்டாக ஒரு இடத்தில் வியாபார நோக்கத்தில் வாங்கினோம், ஆனால் இப்போது ஒன்றாக இணைந்து செயல்பட விருப்பம் இல்லை என்றால் என்ன செய்வது?

மூன்றாம் நபரும் நீங்களும் சேர்ந்து ஒரு இடம் வாங்கிய பிறகு பாகப்பிரிவினை செய்யவேண்டும் என்றால் இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து பத்திரம் எழுதி பதிவு செய்து தனித்தனியே பட்டா மற்றும் பத்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு இடம் பிரிப்பதில் சிக்கல் அல்லது மோசடி ஏற்பட்டால் நோட்டரி வக்கீல் மூலம் வழக்கு தொடர்ந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் அந்த இடத்திற்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு ஒரு விடுதலை பத்திரத்தில் எழுதி அந்த நபரிடம் கையொப்பம் ஒன்று வாங்கி கொள்ளலாம்.

இந்த பத்திரத்திற்கு பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணம் 4 சதவீதமும் பதிவு கட்டணம் 1 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil