உறவுமுறை பெயர்கள் தமிழில் | Indian Family Relationship Names in Tamil
Family Relationship Names in English to Tamil: நமது தமிழ் மொழியில் மட்டும் 6 தலைமுறைக்கான பெயர்கள் உள்ளன. நம்முடைய தலை முறையில் குழந்தை பேச ஆரம்பிக்கும் போதே உறவு முறைகளையும் அறிமுகப்படுத்துவார்கள் நம் பெற்றோர். அம்மா, அப்பா என்ற வார்த்தையில் தொடங்கி, அண்ணன், அக்கா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று.. நம் தமிழ் மொழியில் ஒவ்வொரு உறவு முறைகளுக்கும் அழகான பெயர்கள் உள்ளது. ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகள் ஆண்களை ‘அங்கிள்’, என்றும் பெண்களை ‘ஆன்ட்டி’ என்று இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே சுருக்கிவிடுகிறார்கள். சிலருக்கு இன்றும் உறவு முறைகளின் பெயர்களுக்கு தமிழ் அர்த்தம் தெரியாமல் பலர் இருக்கிறார்கள். இந்த பதிவில் உறவு முறைகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் அதற்கான தமிழ் அர்த்தத்தினையும் தெரிந்துக்கொள்ளுவோம்..!