வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை | Selva Magal Thittam

Updated On: December 26, 2025 4:40 PM
Follow Us:
Sukanya Samriddhi Yojana Scheme In Tamil
---Advertisement---
Advertisement

செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை | Sukanya Samriddhi Yojana Scheme In Tamil

Selva magal thittam:- மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டமானது பெண் குழந்தைகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் உங்கள் பெண் குழந்தைகளின் பெயர்களில் சேமித்து வந்தால் முதிர்வு காலத்தில் ஒரு நல்ல தொகையை பெற முடியும். 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.

சரி இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை (Sukanya Samriddhi Yojana Scheme In Tamil) பற்றிய விவரங்கள் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் பயன்கள் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

எப்போது இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது:

  • சுகன்யா சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

யார் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்:

  • செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் ஆரம்பிக்கலாம்.
  • இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 1,000/- செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் ஆரம்பிக்கலாம்.

தகுதி:

  • செல்வமகள் சேமிப்பு திட்டம் இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும்.
  • ஒரு வேலை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும்.

முதலீட்டு முறை:

  • பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

முதிர்வு காலம்:

  • ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1,000/- இக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை இந்த திட்டத்தில் சேமிக்கலாம்.

வட்டி:

  • ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1,000/- ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1,50,000/- ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
  • இந்தக் கணக்குகளை துவங்கு உள்ளவர்கள் எல்லா மாதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும்.

சேமிப்பு தொகை:

  • இந்த திட்டத்தில்  குறைந்தபட்சம் ரூ.250/- முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
  • ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் போது அந்த தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

இந்த சேமிப்பு கணக்கை தொடர முடியாத போது என்ன ஆகும்?

  • குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான, வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும்.

இடை நிறுத்தப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல்:

  • கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் போது 50 ரூபாயினை அபராதம் செலுத்தி விடுப்பட்ட கணக்கினை மீண்டும் துவங்கலாம்.

 வருமான வரி விலக்கு உண்டா?

  • செல்வ மகள் சேமிப்பு(selva magal thittam) திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்கு பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்.

முதிர்வு தொகையை எப்போது பெறலாம்:

  • இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை 21-ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம்.
  • மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

கணக்கை இடமாற்றுதல்:-

  • கணக்கை வேறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

Sukanya Samriddhi Yojana Scheme In Tamil – குறிப்பு:

  • ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 1,000/- ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம்.
  • குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இக்கணக்கை தொடங்கலாம்.
  • குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் முதலீடு விவரம்:-

மாதம் மாதம் நாம் செலுத்தும் தொகை இறுதியாண்டியில் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இந்த அட்டவணையில் பார்க்கலாம் வாங்க.

உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !

Sukanya samriddhi yojana in tamil / selva magal thittam
மாத முதலீடு  வருடத்திற்கு முதலீடு செய்யும் தொகை  மொத்த முதலீடு  முதிர்வு தொகை 
5,000 5,00.00 X 12 = 6,000 90,000.00 2,87,285
1,000. 1,000.00 X 12 = 12,000 1,80,000.00 5,74,570
2,000 2,000.00 X 12 = 24,000 3,60,000.00 11,49,139
5,000 5,000.00 X 12 = 60,000 9,00,000.00 28,72,848
7,000 7,000.00 X 12 = 84,000 12,60,000.00 40,21,987
10,000 10,000.00 X 12 = 1,20,000 18,00,000.00 57,45,695
12,500 12,500.00 X 12 = 1,50,000 22,50,000.00 71,82,119
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now