உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !

Advertisement

மாத வருமானம் தரக்கூடிய திட்டம் 

ஒருவரின் தனிப்பட்ட நிதி மேலாண்மையில், அதிகம் அக்கறை செலுத்தவேண்டியது, ஓய்வு கால வாழ்கை முறை பற்றி தான். நீங்கள் ஓய்வு பெற்றவுடன், உங்களுக்கு நிலையான வருமான ஆதாரம் இருக்காது. மேலும், உங்கள் வங்கியில் உள்ள சேமிப்புகள் உங்கள் செலவுகளை ஈடு செய்யாது, ஏனெனில் பணவீக்கம் அவற்றைச் சாப்பிட்டு விடும், உங்கள் விருப்பப்பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் சக்தியையும்  குறைக்கும்.நீங்கள் ஓய்வு பெறும் வயதில் உங்கள் செலவுகளை ஈடுகட்ட உங்களுக்கு பணம் தேவைப்படும் என்பதாலும், பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு நமது வாழ்க்கைத்தரம் குறையாமல் இருக்கவும், பணியின் போது இருந்த வாழ்க்கைத்தரம் நிலையாக இருக்கவும், நமக்கு நிலையான வருமானம், பணி ஓய்விற்கு பிறகும் தேவைப்படுகிறது.

அப்படி ஒரு நிலையான வருமானம் வரக்கூடிய திட்டத்தை நாம் நமது பணிக்காலத்திலேயே  திட்டமிட தொடங்க வேண்டும்.  அந்தவகையில் இன்று பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் இணைந்தால் உங்களின் வருங்காலத்தினை பற்றிய பயமில்லாமல் இருக்கமுடியும். வாருங்கள் இன்று அஞ்சல்துறையில் உள்ள பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தினை பற்றி தெரிந்து கொள்வோம்..

Pradhan Mantri Vaya Vandana Yojana:

பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக ஓய்வூதியத் திட்டமாகும்.

தகுதி:

இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு இந்திய குடிமக்கள் அனைவரும் பயன் அடையாளம். மேலும் 60 வயதிற்கு மூத்த குடிமக்கள் தான் பயன் அடைய முடியும்.

பாலிசி காலம்:

இந்த திட்டத்திற்கான கால அளவு 10 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது.

முதலீடு:

இந்த PMVVY திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீடு 15 லட்சம் ஆகும். நீங்கள் முதலீடு செய்த தொகைகான வட்டியை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரித்து 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது மாதம் மாதம் என பெற்றுக்கொள்ளலாம்.

பென்ஷன் டெபாசிட் செய்யும் தொகை:

குறைந்தபட்ச முதலீடு  அதிகபட்ச முதலீடு 
 1 ஆண்டு ரூ. 1,44,578/-  ரூ. 14,45,783/-
6 மாதங்கள்  ரூ. 1,47,601/- ரூ. 14,76,015/-
3 மாதங்கள்  ரூ. 1,49,068/-  ரூ. 14,90,683/-
1 மாதம்  ரூ. 1,50,000/- ரூ. 15,00,000/-

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • வாங்கி கணக்கு அட்டை
  • பான் கார்டு
  • முகவரி அட்டை
  • வருமான சான்று
  • ஓய்வு பெற்ற ஆவணம்

ஓய்வூதியம் வழங்கும் முறை:

இந்த திட்டத்தில் வழங்கும் பென்ஷனை மாதந்தோறும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை போன்ற முறைகளில் பென்ஷனை வழங்குகிறார்கள்.

NEFT மற்றும் ஆதார் மூலம் நீங்கள் உங்கள் ஓய்வூதிய தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் செலக்ட் செய்யும் ஆப்ஷனை பொறுத்து ஓய்வூதியம் வழங்கபடும்.

வழங்கப்படும் ஓய்வூதியம்:

பென்ஷன் தொகை மாதந்தோறும் 3 மாதத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு ஒரு முறை
குறைந்தபட்சம் முதலீட்டிற்கு ரூ. 1,000 ரூ. 3,000 ரூ.6,000 ரூ.12,000
அதிகபட்சம் முதலீட்டிற்கு ரூ. 10,000 ரூ. 30,000 ரூ.60,000 ரூ.1,20,000

வட்டி:

  • நீங்கள் வட்டி பெறுவது மாதந்தோறும், என்று நீங்கள் தேர்தெடுத்த வழியில் நீங்கள் செலுத்திய தொகைக்கு 7.40% வட்டி கிடைக்கும்.
  • அதுவே நீங்கள் செலுத்திய தொகைக்கு வட்டி 3 மாதத்திற்கு ஒரு முறை என்ற முறையை தேர்வு செய்தால் உங்கள் தொகைக்கு 7.45% வட்டி கிடைக்கும்.
  • 6 மாதத்திற்கு ஒரு முறை என்ற  தேர்வை நீங்கள் விரும்பினால் உங்களுக்கு 7.52% வட்டி நீங்கள் செலுத்திய தொகைக்கு கிடைக்கும்.
  • வருடத்திற்கு ஒரு முறை என்ற  ஆப்ஷனை செலக்ட் செய்தால் 7.66% வட்டியை வழங்குகிறது.

வருமானம் எவ்வளவு கிடைக்கும்:

டெபாசிட் செய்த தொகை  மாதந்தோறும் வழங்கும் ஓய்வூதிய  தொகை  10 வருடத்தில் ஓய்வூதிய தொகை  மெச்சூரிட்டி தொகை 
Rs.1,62,162/- Rs.1,000/- Rs.1,20,000/- Rs.1,62,162/-
Rs.2,00,000/- Rs.1,233/- Rs.1,48,000/- Rs.2,00,000/-
Rs.5,00,000/- Rs.3,083/- Rs.3,70,000/- Rs.5,00,000/-
Rs.10,00,000/- Rs.6,166/- Rs.7,40,000/- Rs.10,00,000/-
Rs.15,00,000/- Rs.9,250/- Rs.11,10,000/- Rs.15,00,000/-

 

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000…. 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு ….

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement