சுற்றுச்சூழல் நன்மைகள் தீமைகள் | Sutru Sulal Benefits in Tamil

Sutru Sulal Benefits in Tamil

சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Sutru Sulal Pathukappu in Tamil

நண்பர்களே இன்று இந்த பதிவில் சுற்றுசூழல் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்க்க போகிறோம். சுத்தம் சோறு போடும் என்பதின் பொருள் எல்லோருக்கும் தெரியும். நாம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக்கொள்வது சுத்தம் இல்லை நம் இருக்கும் இடம் மற்றும் நாம் செல்லும் இடமாக இருந்தாலும் சரி அதனை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமையாகும். இன்று இந்த பதிவில் சுற்றுசூழல் நன்மைகள் மற்றும் அதனை பாதுகாக்காமல் இருத்தல் அதனின் தீமைகளை பற்றி  தெளிவாக படித்து அறிந்துகொள்வோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பற்றி எழுதுக:

 • சுற்றுசூழல் என்பது நாம் உயிர் என்றும் சொல்லலாம். ஏனெற்றால் நாம் சுவாசிக்கும் காற்று சுற்றுசூழலில் தான் கிடைக்கிறது. அதனை நன்மை ஆக்குவதும் நாமே! தீமைகள் ஆக்குவதும் நாமே.
 • நாம் முன்னோர்கள் நமக்கு சொத்துக்களை மட்டும் கொடுக்கவில்லை அருமையான சுற்றுசூழலையும், உலகத்தையும் கொடுத்து சென்றுள்ளார்கள்.
 • சுற்றுசூழல் என்பது நாம் வீடு போன்றதுதான் நாம் மனிதர்கள் என்பதால் வீட்டில் வாழ்கிறோம். மற்ற உயிரினங்கள் இந்த சுற்றுசூழலில் வாழ்கின்றது.
 • இந்த உலகத்தில் எந்த உயிர்களும் குறைந்தது இல்லை எல்லா உயிர்களும் ஏதேனும் ஒரு விதத்திலும் நமக்கு உதவி வருகிறது. அப்படி இந்த உலகத்தில் வாழும் உயிர்களின் வீட்டை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது நாம் கடமையாகும்.

இயற்கை வளங்கள் முக்கியத்துவம்:

இயற்கை வளங்கள்

 • இயற்கை வளங்கள் என்றால் அழகாவும் பசுமையாகவும் இருக்கும். இப்போது அதனை வெளியிர் பயணங்கள் சென்று அதிசயத்தை பார்ப்பது போல் பார்க்கவேண்டியுள்ளது. அந்த அளவிற்கு இயற்கை அழிந்து வருகிறது.
  இயற்கை வளங்கள் அழிந்து வருவதற்கு மிகப்பெரிய முக்கிய காரணம் நாம் தான்.
 • அந்த அளவிற்கு இயற்கைக்கு எதிராக நிறைய தீமைகளை செய்து வருகிறோம். இயற்கையில் மரங்கள்,செடி கொடிகள் இருந்தால்தான் நாம் நீண்ட காலம் வாழ்வதற்கான ஆயுதம்.
 • அந்த ஆயுதத்தை மனிதர்களான நாமே அழித்து வருகிறோம். ரோட்டு ஓரங்களில் மரங்களை பார்ப்பது அதிசமயாக இருக்கிறது. கோடை காலத்தில் அடிக்கும் வெயிலுக்கு ரோட்டுக்கு ஓரம் ஒய்வு எடுப்பதற்க்கு கூட மரங்கள் இல்லை அந்த அளவிற்கு இயற்கை அழிந்து வருகிறது.
 • சரியாக புரிந்துகொள்வோம் இயற்கையின் அழிவு நெருங்க நம்முடைய அழிவிற்கும் நாமே செதுக்கும் உளியாகும்.

 

மரம் வளர்ப்போம் கட்டுரை

இயற்கை அழிவுக்கு காரணம்:

 • உலகத்தில் இயற்கை அழிவிற்கு முக்கிய காரணம் நாம் தான் என்பதை மேல் பதிவில் படித்திருப்பீர்கள். அதுதான் உண்மை. காரணம் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களை உதாரணமாக சொல்லாம்.
 • நீங்கள் எப்போவது யோசித்தது இருக்கிறீர்களா? நாம் பயன் படுத்தும் பொருட்கள் எப்படி நமக்கு கிடைக்கும் என்பதை. ஒரு சில பொருள்களுக்கு நமக்கு எப்படி கிடைக்கும் என்பத்தை அறிந்து இருப்பீர்கள்.
 • சில பொருட்கள் நமக்கு கிடைப்பது எப்படி என்பதை தெரிந்திருக்க மாட்டிர்கள். உதாரணமாக பாலித்தீன் கவர். இந்த கவர் பயன்படுத்துவது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த பாலித்தீன் கவர் பயன்படுத்தி விட்டு குப்பையில் போட்டுவிடுவோம். இதில் அதிகளவு பாதிக்கப்படுவது இயற்கைதான்.
 • ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் அதனை குப்பையில் போட்டாலும் சரி இல்லை எரித்து போட்டாலும் சரி அழிவு இயற்கைக்குத்தான். இந்து போன்ற பொருள்கள், ரசாயண பொருட்கள், ரசாயண தொழிற்சாலைகள் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் இயற்கையையும் பாதிக்கும் நம்மையும் அதிகம் பாதிக்கும்.

இயற்கை புதுக்கவிதை:

முடிந்த வரையில் இயற்கையை பாதுகாத்து
முழுமையாக கொடுத்து செல்..! உன்னை நம்பியுள்ளவர்களுக்கு..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil