டாட்டூ போடுவதற்கு முன் இதை கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

டாட்டூ குத்துவதினால் ஏற்படும் பக்க விளைவுகள் | Tattoo Disadvantages in Tamil

Tattoo Side Effects in Tamil – இப்போது உள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி டாட்டூ குத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதாவது பிடித்த நபர்களின் பெயர்களை உடலில் டாட்டூவாக குத்திக்கொள்வது, அல்லது அழகான டிசைனை டாட்டூவாக உடலில் குத்திக்கொள்வது என்று பலவகையில் உடலில் பச்சை குத்திக்கொள்கின்றன. குறிப்பாக இந்த டாட்டூ குத்துவதற்கு இப்பொழுது பலவகையுண இங்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த டாட்டூவை அழிக்க வேண்டும் என்றால் லேசர் உள்ளிட்ட பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால் அதில் இருக்கு விளைவுகளை பற்றி யாரும் அறிந்துகொள்வது இல்லை. அதுகுறித்த தகவல்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க டாட்டூ குத்துவததால் ஏற்படும் பக்க விளைவுகளை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

பச்சை குத்துதல் தீமைகள் | Tattoo Side Effects in Tamil

No: 1

கருப்பு மையினால் வரையப்பட்ட டாட்டூவை அழிப்பது சுலபம். அதுவே கலர், கலரான இங்கை பயன்படுத்தி வரையப்பட்ட டாட்டூ என்றால், அதனை அழிப்பது கடினம். ஒருவேளை அழித்துவிட்டீர்கள் என்றாலும், உங்களுடைய தோல் பழைய நிலையில் இருக்குமா? என்பது சந்தேகமே.

No: 2 

டாட்டூ குத்துவதற்கு கூட அதிக செலவுகள் ஆகாது, ஆனால் டாட்டூவை அழிப்பதற்கு அதிக செலவு ஆகும்.

No: 3

மிகவும் ஃபேஷனாக பரவி வரும் இந்த டாட்டூ உடல்நல கோளாறுகள், சரும கோளாறுகள் என பலவகையான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தவும்.

No: 4

டாட்டூ போடுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்டெர்லைட்ஊசிகளில் தங்கியிருக்கும் பாக்டீரியாவால் தோல் வீக்கம், வலி, தோல் சிவந்து தடித்து போதல், தொற்று நோய்கள் போன்ற அபாயகரமான பிரச்சனைகளை ஏற்படும்.

No: 5

டாட்டூ போடும்போது ஒரு முறை பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தும் போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் மூலம் சிலருக்கு HIV தொற்று பரவி இருப்பதாக குறிப்பிடத்தக்கது.

No: 6

பல நிறங்களில் குத்தப்படும் டாட்டூகளின் ரசாயனத்தில் உள்ள சாயங்கள் உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது மற்றும் அதன் மீது சூரிய ஒளிப்படும் போது அலர்ஜி மேலும் அதிகமாகிறது.

No: 7

சில காரணங்களுக்காக MRI ஸ்கேன் எடுக்கும் போது, டாட்டூவில் வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

No: 8

டாட்டூ குத்தியவர்கள் தொற்று நோய் அபாயம் காரணமாக ஒரு வாரத்துக்கு இரத்த தானம் செய்யக்கூடாது.

No: 9

டாட்டூ குத்திவினால் சிலருக்கு உடலில் வடுக்கள் ஏற்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது ஏன் தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement