கன்னத்தில் கை வைக்காதே
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்..? அப்படி என்றால் எங்கள் பொதுநலம்.காம் பதிவை படித்து பயன் பெறுங்கள். எங்கள் பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை கூறி வருகிறோம். அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் “கன்னத்தில் கை வைக்காதே” என்று நம் முன்னோர்கள் சொல்லியதற்கு காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
“கன்னத்தில் கை வைக்காதே” என்று சொல்ல காரணம் என்ன..?
அந்த காலத்தில் முன்னோர்கள் கன்னத்தில் கை வைக்க கூடாது என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..?
நாம் சிறு குழந்தைகளாக இருக்கும் போதே கன்னத்தில் கை வைத்தால் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கன்னத்தில் கை வைக்க கூடாது என்று கூறுவார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..?
“கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே” என்ற பழமொழியை கூறுவார்கள். அதை நாம் கேட்டிருப்போம்.
நாம் அவர்களிடம் அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அவர்கள் வீட்டில் சண்டை வரும், கஷ்டம் வரும் அல்லது உடல் நிலை சரியில்லாமல் போகும் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை.
அந்த காலத்தில் மக்கள் கடல் கடந்து வணிகம் செய்து வந்தார்கள். பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற காரணதிற்காக கடல் கடந்தும் வெளிநாடுகளுக்கு சென்றும் வியாபாரம் செய்து வந்தார்கள்.
அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருட்களை எல்லாம் கடல் வழியாக தான் கொண்டு வருவார்கள். அப்படி கொண்டு வரும் பொருட்கள் எல்லாம் கடலில் மூழ்கி விடுமாம்.
அந்த காலத்தில் ஒருவன் சம்பாதித்த பொருட்கள் எல்லாம் கடல் பயணத்தில் மூழ்கி அவன் ஏழையாக மாறுவது சாதாரண விஷயமாக இருந்தது. அந்த நேரத்தில் தான் பெரியவர்கள் கப்பலே கவிழ்ந்து போனாலும் சரி “கன்னத்தில் கை வைக்காதே” என்று சொல்வார்கள்.
பெரியவர்கள் சொன்ன கன்னம் என்பது நம் முகத்தில் இருக்கும் கன்னத்தை குறிக்கவில்லை.
அந்த காலத்தில் திருடர்கள் வீடுகளில் புகுந்து திருடுவதற்கு கன்னக்கோல் என்ற ஆயுதத்தினை பயன்படுத்தினார்கள். அந்த கன்னக்கோல் ஆயுதத்தின் உதவியால் ஒரு வீட்டின் சுவற்றில் துளை போட்டு அதன் வழியே உள்ளே சென்று திருடுவார்கள் .
அதை தான் நம் பெரியவர்கள் நாம் செய்யும் தொழிலில் எவ்வளவு பெரிய இழப்போ சரிவோ வந்தாலும், அதேபோல எல்லா பொருட்களையும் இழந்து ஒருவன் ஏழை ஆனாலும் அடுத்தவரின் பொருளுக்கு ஆசைபட்டு அதை திருட கூடாது என்ற காரணத்திற்காக தான் இந்த பழமொழியை கூறினார்கள் .
கன்னக்கோல் என்பதை கன்னம் என்று சொன்னார்கள். எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சரி கன்னக்கோல் என்ற ஆயுதத்தில் மட்டும் கை வைக்க கூடாது என்று சொன்னார்கள்.
அந்த பழமொழியை தான் சுருக்கமாக “கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே” என்று சொல்கிறோம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |