Things To Before Buying Your Own House in Tamil
பொதுநலம்.காம் பதிவின் அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் சொந்தமாக வீடு வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அனைவருக்குமே இருக்க கூடிய மிக பெரிய ஆசை சொந்த வீடு. சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவு அனைவரிடமும் இருக்கிறது.
நீங்களும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா..? அப்போ இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். இன்று நாம் இந்த பதிவின் மூலம் வீடு வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சொந்தமாக வீடு கட்டுவதற்கு சில சிறப்பான டிப்ஸ்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.! |
வீடு வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை:
வருமானம்:
சொந்தமாக வீடு வாங்க போகிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் உங்கள் வருமானத்தை தீர்மானிக்க வேண்டும். நீங்கள் வாங்கும் வீட்டின் தேவைக்கு ஏற்றபடி உங்களின் பட்ஜெட்டை தீர்மானிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் பெரும்பாலான மக்கள் கடன் மூலம் வீட்டை வாங்குகிறார்கள். அதாவது EMI -யில் குறைந்த முன் பணம் செலுத்துகிறார்கள். இதனால் நீங்கள் மாதம் மாதம் EMI -யில் கட்டும் பணம் அதிகமாக இருக்கும்.
அதனால் நீங்கள் அதிகமாக முன் பணம் செலுத்தினால் நீங்கள் கட்டும் EMI -யை குறைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வீட்டின் மதிப்பு:
ஒரு வீட்டை வாங்கும் போது எவ்வளவு செலவாகும் என்று யோசிக்கும் நீங்கள் அந்த வீட்டை விற்கும் போதும் எவ்வளவு மதிப்பு கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சொந்தமாக வாங்கும் வீட்டை மறு விற்பனை செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு வீட்டை வாங்க வேண்டும்.
வசதியான இடமாக இருக்க வேண்டும்:
நீங்கள் வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு வீடு இருக்கும் பகுதிகளை பார்வை இட வேண்டும். வீடு வாங்கும் போது வீட்டையும் வீட்டில் இருக்கும் அறைகளை மட்டும் பார்க்க கூடாது.
வீட்டின் அருகிலேயே மருத்துவமனை, பள்ளி, வணிக வளாகங்கள் போன்ற வசதிகள் வீட்டை சுற்றி இருக்க வேண்டும். தேவையான வசதிகள் அனைத்தும் வீட்டை சுற்றி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எல்லா வசதிகளும் இருக்கும் இடத்தில் வீட்டை வாங்கினால் அதை மறு விற்பனை செய்யும் போது அதன் மதிப்பு கூடுதலாக இருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |