சாலைகளில் மூன்று விளக்குகள் உணர்த்தும் செய்திகள் உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

சாலை விளக்குகள்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் சாலைகளில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகள் எரிவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம். பொதுவாக சாலைகளில் செல்லும் போது இது போன்று விளக்குகள் எரிவதை கவனத்திருப்போம். ஆனால் அந்த விதிமுறைகளை எல்லோரும் கடைபிடிப்பதில்லை.  மேலும் இது போன்ற விளக்குகள் ஏன் எரிகிறது, வேறு கலர் கொடுத்திருக்கலாமே என்று யாராவது யோசித்திருக்கிறார்களா.! அப்படி யோசித்தீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த மூன்று நிறம் விளக்குகள் எறிவதற்கான காரணம் மற்றும் முழு தகவலையும் தெரிந்து கொள்வோம்.

சாலை விளக்குகள் அமல்படுத்திய ஆண்டு:

 இந்த விளக்குகள் முதன் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் லண்டன் பார்லிமென்டில் 1868 ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த விளக்குகள் அமல்படுத்தியபோது சிவப்பு மற்றும் பச்சை விளக்குகள் மட்டும் தான் நடைமுறையில் இருந்தது. 1868 ஆம் ஆண்டில் மின்சாரம் இல்லாததால் எரிபொருள் மூலமாக சிக்னல் அமைக்கப்பட்டது.  முதன் முதலாக அமெரிக்காவில்  1890 ஆம் ஆண்டு மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டது. இப்பொழுது மின்சார விளக்குகள், பேட்டரி விளக்குகள், சோலார் விளக்குகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.  

இதையும் படியுங்கள் ⇒ ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா?

மூன்று நிறம் விளக்குகள் வருவதற்கு காரணம்:

 traffic signal history in tamil

சிவப்பு நிறம்:

சாலைகளில் தூரத்தில் வந்தாலே அந்த விளக்குகளில் எரியும் நிறங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக தான்  சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்களை தேர்வு செய்தனர். அதிலும் சிவப்பு நிறம் தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும் என்பதற்காக தேர்வு செய்தனர். சிவப்பு என்றால் அபாய எச்சரிக்கையை குறிக்கிறது. அதனால் தான் நிறுத்தல் என்பதன் அடையாளமாக இந்த நிறத்தை தேர்வு செய்தனர்.

பச்சை நிறம்:

வாகனத்தை நிறுத்துவதற்கு நிறம் தேர்வு செய்த பின்னர் நிறுத்திய வாகனத்தை புறப்பட வைப்பதற்கு ஒரு நிறம் தேவையாய் இருந்தது. அதனால் சிவப்பு நிறத்திற்கு எதிர்மாறாக இருப்பதால் பச்சை நிறத்தை தேர்வு செய்தனர்.

மஞ்சள் நிறம்:

சாலைகளின் நெரிசல்களை குறைக்கவும், வாகனங்களின் எரிபொருளின் செலவை குறைப்பதற்கும் மஞ்சள் நிறம் கொண்டு வரப்பட்டது. ஏனென்றால் சிவப்பு நிறம் வந்தலிருந்து அங்கு நிறுத்தப்பட்டிற்கும் வாகனங்கள் அனைத்தும் ஆன்லயே வைத்திருப்பார்கள். இந்த நிலையை தவிர்ப்பதற்கும் தான் மஞ்சள் நிற விளக்கு எறிந்தால் அப்பொழுது வாகனங்களை தயார் நிலையில் வைத்தால் போதும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

இதையும் படியுங்கள் ⇒ சாலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் ஏன் உள்ளன..? காரணம் தெரியுமா..?

மூன்று விளக்குகளின் விதிமுறைகள்:

சிவப்பு விளக்கு ஒளிரும் போது:

சிவப்பு விளக்கு எரியும் போது வாகனங்களை நிறுத்த வேண்டும். 

சிவப்பு மற்றும் மஞ்சள்:

சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்கு எரியும் போது வாகனங்களை தயார் நிலையில் வைத்திருப்பதை குறிக்கிறது. 

பச்சை விளக்கு:

பச்சை நிற விளக்கு புறப்படு என்பதை குறிக்கிறது. 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement