உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள் | Ulaga Tamil Manadu
தமிழ் இந்த மூன்று எழுத்து இல்லாவிட்டால் நமக்கு தாய்மொழி தமிழ் என்ற ஒரு சிறப்பு பட்டம் கிடைத்திருக்காது. தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் பல ஆண்டுகளாக நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடுகள். இதுவரை 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளது.
மேலும், தமிழ் மாநாடு என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பற்றி ஆய்வு செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் சேர்ந்து நடத்தும் மாநாடு ஆகும்.இது பல நாடுகளில் நடத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் தமிழ் மொழியின் ஆய்வு மற்றும் மேம்பாட்டை உலகளவில் ஒருங்கிணைப்பது ஆகும். வாங்க தமிழ்நாட்டில் நடைப்பெற்ற மாநாடுகளின் தொகுப்பினை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்..
தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள்:
| மாநாடு |
நடைபெற்ற இடங்கள் & ஆண்டு |
| முதல் உலக தமிழ் மாநாடு |
கோலாலம்பூர் (1966) |
| இரண்டாவது உலக தமிழ் மாநாடு |
சென்னை (1968), முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார். |
| மூன்றாவது உலக தமிழ் மாநாடு |
பாரிஸ் (1970,) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார். |
| நான்காவது உலக தமிழ் மாநாடு |
யாழ்ப்பாணம் (1974), பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார். |
| ஐந்தாவது உலக தமிழ் மாநாடு |
மதுரை (1981), முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார். |
| ஆறாவது உலக தமிழ் மாநாடு |
கோலாலம்பூர் (1987) |
| ஏழாவது உலக தமிழ் மாநாடு |
மொரிசியஸ் (1989) |
| எட்டாவது உலக தமிழ் மாநாடு |
தஞ்சாவூர் (1995,) மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார். |
| ஒன்பதாம் மாநாடு |
கோலாலம்பூர் (2015) |
| பத்தாவது உலக மாநாடு |
சிகாகோ (2019) |
11வது சர்வதேச தமிழாராய்ச்சி மாநாடு
|
கோலாலம்பூர் (2023) |
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |