அலெக்சா என்றால் என்ன.? அது எப்படி வேலை செய்கிறது..?

Advertisement

 What is Alexa And How Does It Work in Tamil

பொதுவாக அனைவருமே பல விஷயங்களை கேள்வி பட்டிருப்போம். ஆனால் அதனை பற்றி முழுவதுமாக தெரிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் அலெக்சா என்பதை அனைவரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் அதனை பற்றிய விவரங்கள் முழுமையாக தெரியாது. எனவே அலெக்சா என்றால் என்ன..? அது எப்படி வேலை செய்கிறது.? என்பதை இப்பதிவில் பார்க்கலாம். அலெக்சாவும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற ஒன்று தான். அலெக்சாவை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றை செய்து கொள்ளலாம். ஓகே வாருங்கள் அவற்றின் விரிவான விளக்கங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

அலெக்சா என்றால் என்ன..?

அலெக்சா என்பது அமேசான் உருவாக்கிய குரல் உதவியாளர் (Voice Assistant) ஆகும். இது முதலில் Amazon Echo ஸ்மார்ட் ஸ்பீக்கரில் பயன்படுத்தப்பட்டது.  இதன் மூலம் நீங்கள் உங்களின் கட்டளைகள், கேள்விகள் போன்றவற்றை கூறலாம். உங்களின் கட்டளைக்கேற்ப அலெக்சா செய்லபட்டு உங்களுக்கு பதில்களை அளிக்கும்.

உதாரணமாக,  அலெக்சாவிடம் நீங்கள் வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு அலெக்சா உங்களுக்கு பதிலளிக்கும். அமேசான் மற்ற உற்பத்தியாளர்களிடம் இணைந்து ஸ்மார்ட் ஸ்பீக்கர் முதல் ஸ்மார்ட் டிவி, பல்புகள் போன்றவற்றிலும் அலெக்சா இயக்கப்பட்டு வருகிறது. 

ஸ்மார்ட் டிவி வாங்கணுமா..! அதுவும் குறைந்த விலையில் வாங்கணுமா..! அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அசத்தலான அம்சத்துடன் வருகிறது இந்த ஸ்மாட் டிவி

 

அலெக்சா எப்படி வேலை செய்கிறது..?

மற்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் போலவே அலெக்சாவும் செயல்படுகிறது. அமேசானின் இந்த உதவியாளர் குரல் கட்டளைகளின் படி செயல்படுகிறது. நீங்கள் ஒரு கேள்வியை அலெக்சாவிடம் கேட்கும் போது அலெக்சா உங்களுக்கு பதிலை அளிக்கும். அதுமட்டுமில்லாமல் இதனை பயன்படுத்தி மற்ற சாதனங்களையும் இயக்க முடியும்.

மேலும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற சில சாதனங்களில் ஸ்பீக்கர் எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும். ஆனால் அலெக்சாவிடம் நீங்கள் கட்டளையை கூறும் போது மட்டுமே ஸ்பீக்கர் கேட்கும்.

அலெக்சாவை பயன்படுத்த உங்களுக்கு அமேசான் அக்கவுண்ட் தேவை. எனவே நீங்கள் அமேசான் அக்கவுண்ட் இணைக்க வேண்டும்.

ஸ்மார்ட் போனிற்கு LED டிஸ்பிளே சிறந்ததா.! LCD டிஸ்பிளே சிறந்ததா.!

 

அலெக்சாவை எவ்வாறு நிறுவுவது..?

அலெக்சாவை நிறுவுவது எளிதான ஒன்று. நீங்கள் அமேசான் அக்கவுண்ட் இணைத்திருந்தாலும் முதலில் உங்கள் மொபைலில் உள்ள அலெக்சா செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பிறகு நீங்கள் ஆப்ஸில் நுழைந்ததும் ஸ்மார்ட் லைட்ஸ் முதல் ஸ்மார்ட் பிளெக்ஸ்கள் வரை அலெக்சா ஆதரவு சாதனங்களை உங்களின் அக்கவுண்டில் சேர்க்கலாம்.

உதாரணமாக,  நீங்கள் அலெக்சாவிடம் இன்று வானிலை எப்படி இருக்கிறது என்று கேட்கும் போது உங்களின் குரலை அலெக்சா பதிவு செய்கிறது. பிறகு இணையத்தில் அமேசானின் குரல் சேவைகளுக்கு அனுப்பப்படுகிறது. பின் பதிவை புரிந்து கொள்ளும் கட்டளையாக மாற்றுகிறது. பின்னர் சிஸ்டம் உங்களுக்கு தொடர்புடைய பதிலை அனுப்புகிறது. 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement