பச்சை முட்டைகோஸிற்கும் சிகப்பு முட்டைகோஸிற்கும் இடையே உள்ள வேறுபாடு..?

Advertisement

What is Difference Between Red and Green Cabbage

வணக்கம் நன்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பச்சை முட்டைகோஸ் மற்றும் சிகப்பு முட்டைகோஸ் இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். நாம் அனைவருமே பச்சை முட்டைகோஸ் மற்றும் சிகப்பு முட்டைகோஸ் இவை இரண்டையும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. எனவே சிகப்பு முட்டைகோஸ் மற்றும் பச்சை முட்டைகோஸ் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை பின்வருமாறு இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

What is Red Cabbage in Tamil:

What is Red Cabbage in Tamil

சிகப்பு முட்டைகோஸ் ஒரு இருண்ட ஊதா நிறம் கலந்த சிவப்பு காய்கறியாகும். இது பச்சையாகவும் சமைத்து உட்கொள்ளப்படுகிறது. இது ஊதா முட்டைகோஸ் மற்றும்  சிகப்பு கிராட் அல்லது ஊதா கிராட் எனவும் அழைக்கப்படுகிறது.

சிகப்பு முட்டைகோஸ் வைட்டமின் C -யின் ஆற்றல் மையமாகும். இது புற்றுநோயை எதிர்த்து போராடும் ஃபிளாவனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது ஆண்டுதோறும் வளர்க்கப்படும் காய்கறியாகும். இது இனிப்பு சுவையில் இருக்கும்.

What is Green Cabbage in Tamil:

What is Green Cabbage in Tamil

பச்சை முட்டைகோஸ் ஒரு வெளிர் பச்சை நிறத்தில் வட்ட வடிவத்தில் இருக்கும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சை முட்டைகோஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. சிகப்பு முட்டைகோஸை போலவே பச்சை முட்டைக்கோஸும் ஆண்டுதோறும் வளர்க்கப்படும் காய்கறியாகும். இது சமைக்கும்போது மட்டுமே இனிப்பு சுவையில் இருக்கும்.

விருந்தினர் VS உறவினர்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்..!

பச்சை முட்டைகோஸிற்கும் மற்றும் சிகப்பு முட்டைகோஸிற்கும் உள்ள பொதுவான ஒற்றுமைகள்:

  • சிவப்பு மற்றும் பச்சை முட்டைக்கோஸ் பிராசிகா குடும்பத்தைச் சேர்ந்த  காய்கறியாகும்.
  • இரண்டும் ஆண்டுதோறும் பயிரிடப்படும் உணவு பொருட்கள்.
  • சிவப்பு மற்றும் பச்சை முட்டைக்கோசுகளில் ஃபிளாவனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.
  • இந்த இரண்டும் அதிக ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. மேலும், இவை இரண்டும் குறைந்த கலோரி கொண்ட உணவு பொருட்கள்.

Difference Between Red Cabbage and Green Cabbage in Tamil:

Difference Between Red Cabbage and Green Cabbage in Tamil

சிகப்பு முட்டைகோஸ்  பச்சை முட்டைகோஸ்
சிகப்பு முட்டைகோஸ் அடர் ஊதா நிற இலைகளை கொண்டுள்ளது. பச்சை முட்டைகோஸ் வெளிர் பச்சை நிற இலைகளை கொண்டுள்ளது.
இது இனிப்பு சுவையில் அதிகம். இது இனிப்பு சுவையில் குறைவு.
பச்சை முட்டைகோஸுடன் ஒப்பிடும்போது இது அதிக ஊட்டச்சத்து உடையது. சிகப்பு முட்டைகோஸுடன் ஒப்பிடும்போது இது குறைந்த ஊட்டச்சத்து உடையது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
சிகப்பு முட்டைகோஸ் சில பொருட்களை சாயமிட பயன்படுத்தப்படுகிறது. பச்சை முட்டைகோஸ் கிமு 400-ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றியது. மனிதனுக்கு தெரிந்த பழமையான காய்கறிகளில் இதுவும் ஒன்றாகும்.

 

முட்டைகோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement