Cabbage Benefits in Tamil
முட்டைகோஸ் என்பது Brassicaceae குடும்பத்தை சார்ந்த சிற்றின வகையை குறிக்கும் ஒரு கீரை வகையாகும். கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளில் முட்டைகோஸ் முக்கிய இடத்தை பெறுகிறது. முட்டைகோஸை இந்தியா, சீனா, உருசியா போன்ற நாடுகள் அதிகமாக உற்பத்தி செய்கின்றன. முட்டைகோஸில் பல வகைகள் உள்ளன. அதாவது முட்டைகோஸ் பச்சை, சிகப்பு மற்றும் ஊதா போன்ற நிறங்களில் காணப்படுகிறது. இதில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பச்சை நிற முட்டைகோஸ் தான். முட்டைகோஸை அனைவரும் உணவில் சேர்த்து கொள்வோம். ஆனால், அவற்றை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன நன்மை என்று பலபேருக்கு தெரியாது. எனவே முட்டைகோஸில் உள்ள நன்மைகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த பதிவில் விரிவாக பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
தர்பூசணி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா..
Benefits of Eating Cabbage in Tamil:
அல்சரை குணப்படுத்தும்:
முட்டைகோஸில் அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைல் உள்ளது. எனவே அல்சரால் அவசிப்படுபவர்கள் முட்டைகோஸில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
முட்டைகோஸில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே இதனை நாம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து உடலை நோய்கள் தாக்காதவாறு உடலை பாதுகாக்கிறது.
புற்றுநோய் வருவதை தடுக்கிறது:
முட்டைகோஸ் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. எனவே இதனை நாம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. மேலும் முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழற்சியை குணப்படுத்தும்:
முட்டைகோஸில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அழற்சி மற்றும் காயங்களை போக்கும் தன்மை கொண்டது. எனவே முட்டைகோஸ் சாப்பிடுவதன் மூலம் உடலின் அழற்சி மற்றும் உட்காயங்கள் போன்றவற்றை விரைவில் குணப்படுத்தலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்:
முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலின் செரிமான மண்டலத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகிறது.
முந்திரி பழம் நன்மைகள் | Cashew Fruit Benefits in Tamil
சருமத்திற்கு ஏற்றது:
முட்டைகோஸில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்திற்கு பொலிவை தருகிறது. எனவே முட்டைகோஸ் சாப்பிடுவதன் மூலம் சருமத்தை பொலிவாக வைத்து கொள்ளலாம்.
எடையை குறைக்க உதவுகிறது:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் முட்டைகோஸை வேகவைத்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
தசைப்பிடிப்பை போக்குகிறது:
முட்டைகோஸில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது தசைப்பிடிப்பு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறது. எனவே தசைகளில் பிரச்சனைகள் உள்ளவர்கள் முட்டைகோஸ் சாப்பிடுவது நல்லது.
முட்டைகோஸ் இருந்தா போதும்.. ரோட்டுக்கடை காளான் நீங்களே செய்யலாம்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |