வீட்டிற்கு எந்த கதவு சிறந்தது தெரியுமா?

Advertisement

Which Door is Best in Tamil

5 லட்சம், 50 லட்சம், 5 கோடி, 50 கோடி என்று நாம் எவ்வளவு பணம் செலவு செய்து வீட்டை கட்டினாலும், அந்த வீட்டிற்கு மிக முக்கியமான ஒன்று கதவு தான். ஆக அந்த கதவை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று சந்தைகளில் பலவகையான கதவுகள், பலவகையான டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவை அனைத்தும் பார்ப்பதற்கு கண்களை கவரும் வகையில் இருக்கிறது. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதே என்று வாங்கி விடுகிறீர்கள். நீங்கள் வாங்கும்  கதவின் நன்மை மற்றும் தீமைகளை அறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் வீட்டிற்கு கதவுகளை தேர்ந்தெடுக்கும்போதும், அந்த கதவின் நன்மை மற்றும் தீமைகளை அறிந்து சிறந்த கதவுகளை வாங்க இங்கு சில ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்துகொண்டு உங்கள் வீட்டிற்கு எந்த கதவு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மரக்கதவு – Wooden Doors:

Wooden Doors

மரத்தை கொண்டு அதிக அளவிலான மரக்கதவுகள் வடிவமைக்கப்படுகிறது. மேலும் மரக்கதவுகளில் நமக்கு பிடித்த என்ன டிசைனில் வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளலாம். இதன் காரணமாக மக்கள் மரக்கதவை தேர்வு செய்கின்றன. சரி இந்த மரக்கதவில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறியலாம்.

நன்மை:

  • பலவகையான மரங்களில் மரக்கதவுகளை பலவகையான டிசைன்களில் நாம் வடிவமைக்க முடியும்.
  • நவீன வீடுகள், பாரம்பரிய வீடுகள் என இரண்டிற்கும் மரக்கதவு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

தீமைகள்:

  • மரங்களை பொறுத்தவரை எளிதில் மரக்கதவுகளை கரையான் அரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
  • சில காலங்கள் கடந்த பிறகு மரக்கதவுகள் விரிசங்கள் வர வாய்ப்பு உள்ளது.
  • மரக்கதவுகளுக்கு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு Varnish (வார்னிஷ்) செய்து பராமரிக்க வேண்டியதாக இருக்கும்.
  • மேலும் மரம் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் நாளடைவில் கதவுகள் வீக்கமடையும். இதனால் கதவுகளை சரியாக மூட மற்றும் திறக்க கடினமாக இருக்கும்.
  • அத்துடன் மரக்கதவுகளின் விலையும் அதிகமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டு சமையலறையை வாஸ்துப்படி இப்படி வைத்துள்ளீர்களா .!

கண்ணாடி கதவு – Glass Doors:Opaque glass sliding doors

கண்ணாடி கதவு வீட்டிற்கும் அழகாக இருக்கும் அதேபோல், அலுவலங்கள், ஹோட்டல் இது போன்ற இடங்களுக்கு அழகாக இருக்கும். இப்போது பெரும்பாலானோர் வீட்டிற்கும் சரி, அலுவலகத்திற்கும் சரி Opaque Glass Sliding Doors-ஐ தேர்வு செய்கின்றன. மேலும் இந்த வீட்டிற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் படுக்கை அறை மற்றும் குளியல் அறைக்கும் தேர்வு செய்யலாம்.

நன்மைகள்:

  • நேச்சுரல் வெளிச்சத்தை வீட்டுக்குள் கொண்டுவருவதில் கண்ணாடிக்கு நிகரான வேறு எந்த பொருள் இல்லை. பால்கனியில் பயன்படுத்துவதற்குக் கண்ணாடிக்கதவுகள் ஏற்றவை.
  • கண்ணாடியை பொறுத்தவரை துருபிடித்துவிடும், கரையான் அரித்துவிடும், ஈரப்பதத்தை ஈர்க்கும் என்ற எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

தீமைகள்:

  • கண்ணாடிக் கதவுகளில் தூசிகள் படியும் அதனால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டியதாக இருக்கும்.
  • கண்ணாடியில் கீறல் விழுந்தால் பிறகு பார்ப்பதற்கு அந்த இடம் அழகாக இருக்காது.

அலுமினியம் கதவு – Aluminium Doors:Aluminium Doors

நவீன விஷயங்களை விரும்புவர்கள், தொழில்முறை வடிவமைப்பை விரும்புபவர்கள் கதவை தேர்வு செய்யலாம்.

நன்மைகள்:

  • அலுமியம் கதவுகள் நீண்டகாலம் நீடித்து உழைக்கக்கூடியவை.
  • இந்த அலுமியம் கதவில் உங்களுக்கு பிடித்த வண்ணங்களை தேர்வு செய்துகொள்ள முடியும்.

தீமைகள்:

  • உப்புக்காற்று பட்டால், அலுமினியக் கதவுகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், கடலுக்கு அருகில் வசிப்பவர்கள் அலுமினியக் கதவுகளைப் தேர்வு செய்யாமல் இருப்பது சிறந்தது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாஸ்து படி வீட்டில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் நஷ்டம் தான் வரும்..!

UPVC Door:UPVC Door

UPVC கதவுகளை இப்போது மக்கள் பலர் தேர்வு செய்கின்றன. இதனுடைய நன்மை மற்றும் தீமைகளை அறிந்துகொள்ளலாம் வாங்க.

நன்மை:

  • UPVC கதவு மிகவும் எடைகுறைந்தவை. ஆனால், வலிமையானது. நீடித்து உழைக்கக்கூடியவை. அவை துருபிடிப்பதில்லை. கடலோரப் பகுதிகளில் இருப்பவரும் இந்தக் கதவுகளைப் பயன்படுத்தலாம்.
  • உங்கள் விருப்பத்துக்கேற்ற பூட்டு அமைப்பை இதில் பொருத்திக்கொள்ளலாம்.
  • UPVC கதவுகளைப் பராமரிக்கும் முறை என்பது மிகவும் எளிதானது. சாதாரணத் துணியை வைத்து அவ்வப்போது துடைத்துவந்தால் போதுமானது.

தீமைகள்:

  • குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு இந்த யுபிவிசி கதவுகளின் நிறம் மஞ்சளாக மாறிவிடும். அதனால், தரமான யுபிவிசி பொருளைத் தேர்வுசெய்வது அவசியம்.
  • இந்த யுபிவிசி கதவுகள் குறிப்பிட்ட வடிவமைப்பு, நிறங்களில் மட்டுமே சந்தையில் கிடைக்கின்றன.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement