Why Do Break A Coconut in Temple Tamil
அன்பான நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக கோவிலுக்கு செல்லும் போது கட்டாயம் தேங்காய் எடுத்து செல்வார்கள். அதை நாம் பார்த்திருப்போம். இந்து சமயத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தேங்காய் உடைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், இந்துக்கள் வீட்டிலும் விஷேச நாட்களில் தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். ஏன் அப்படி கோவிலில் தேங்காய் உடைக்கிறார்கள் என்ற காரணம் உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் கோவிலில் தேங்காய் உடைப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? |
கோவிலில் தேங்காய் உடைக்க காரணம் என்ன..?
கோவிலுக்கு செல்லும் போது அனைவருமே தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இந்த தேங்காய் ஆன்மீக வழிபாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தேங்காய் உடைக்கும் வழக்கத்தை ஒரு பரிகாரமாக வைத்திருக்கிறார்கள்.
கோவில்களில் தேங்காய் உடைப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாக இருக்கிறது. நம் முன்னோர்களிடம் தொடங்கி இன்று வரை கோவிலில் தேங்காய் உடைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிறிய குழந்தைகளாக இருக்கும் போது ஏன் கோவிலில் தேங்காய் உடைக்கிறார்கள் என்று பெரியவர்களிடம் கேட்டால் அதற்கு அவர்கள் நம்மிடம் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தேங்காய் உடைக்கும் போது போய்விடும் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மை காரணம் இல்லை.
தேங்காயில் மும்மலம் என்று சொல்ல கூடிய ஆணவம், கன்மம் மற்றும்மாயை இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அதாவது, தேங்காயின் மேல் இருக்கும் மட்டையை மாயை என்று கூறுகிறார்கள். அந்த மட்டை என்னும் மாயை நீக்கி விட்டால் கன்மம் என்னும் நார் தெரிகிறது. அதேபோல கன்மம் என்னும் நாரை நீக்கி விட்டால் ஆணவம் என்னும் ஓடு தெரிகிறது. அந்த ஓட்டை உடைக்கும் போது உள்ளிருக்கும் தேங்காய் தெரியும். அந்த வெள்ளையான தேங்காயை தான் பேரின்பம் என்று கூறுகிறார்கள்.
இதுபோல வாழ்வில் இருக்கும் மாயை, கன்மம் மற்றும் ஆணவம் போன்ற மும்மலத்தையும் விரட்டினால் தான் நமக்கு பேரின்பம் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்து தான் தேங்காய் உடைக்கிறார்கள்.
நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் பொறாமைகள், போட்டிகள், பயங்கள் எல்லாம் தேங்காய் போல் உடைய வேண்டும் என்பதற்காக தான் கோவிலில் தேங்காய் உடைக்கிறார்கள்.
கோவிலில் சாமி வந்தது போல் ஆடுவதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா ? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |