கொசு தொல்லை தாங்க முடியல
மருத்துவர் ஊசி போடுகிற வலியை கூட பொறுத்து கொள்ள முடியும். ஆனால் இந்த கொசு கடிப்பதை தாங்கி கொள்ள முடியாது. கொசு கடித்து வலிக்கிறது என்று சொன்னால் இதை கூட தாங்கி கொள்ள முடியலையா.! என்று கேட்பார்கள். உடனே கொசுவிடம் கடி வாங்கியவர் கேட்பார்கள் உனக்கு கடித்தால் தெரியும் என்று சொல்வார்கள். ஏன் அவர்களை கொசு கடிக்கவில்லை உங்களை மட்டும் அதிகமாக கடிக்கிறது என்று யோசித்துள்ளீர்களா.! அப்படி யோசித்தீர்கள் என்றால் இந்த பதவி பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுஙகள்.
சிலரை மட்டும் கொசு அதிகமாக கடிப்பதற்கு காரணம்:
ஒரு 5 நபர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது உங்களை மட்டும் கொசு அதிகமாக கடிக்கும் கவனத்திருக்கீர்களா.! அது ஏன் அப்படி உங்களை மட்டும் கடிக்கிறது என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளவோம்.
இதையும் படியுங்கள் ⇒ கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா..?
யாருடைய உடம்பில் கார்பன்டை ஆக்ஸைடு, உடல் சூடு, உடலில் சுரக்கின்ற எண்ணெய் போன்றவை அதிகமாக சுரக்கின்றதோ அவர்களை தான் கொசு அதிகமாக கடிக்கும். கொசு கடிக்கறது அதனின் பசிக்கு உணவாக என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால் அப்படி இல்லை கொசு கடிப்பது அதனின் முட்டைகளின் சத்துக்காக கடிக்கிறது. அதனால் தான் நம்மை பெண் கொசு மட்டும் தான் கடிக்கும். அப்போ உணவுக்கு என்ன செய்யும் என்ற சந்தேகம் இருக்கும், உணவுக்கு பூக்களில் இருக்கும் தேன் போன்றவைகளிலுருந்து உணவை எடுத்து கொள்கிறது.கொசு எப்படி கடிக்கிறது.?
கொசுவின் வாயில் ஆறு வகையான ஊசிகள் உள்ளன. இந்த ஆறு ஊசிகளும் சிறியதாக இருப்பதால் நமது கண்ணுக்கு தெரியாது. ஒரே ஊசியாக தான் கண்ணுக்கு தெரியும். ஆறு ஊசிகளில் இரண்டு ஊசிகள் தோலில் ஓட்டையை போடும். அடுத்து இருக்கிற இரண்டு ஊசிகள் நமது தோலை அழுத்தி பிடித்து கொள்ளும். ஒரு ஊசி கொசுவின் எச்சிலை நமது உடலுக்குள் செலுத்தும். கடைசியாக இருக்கிற ஒரு ஊசி நமது உடலில் உள்ள இரத்தத்தை எடுத்து கொள்ளும்.
எதற்காக கொசுவின் எச்சத்தை நமது உடலில் செலுத்துகிறது என்றால் கொசு நமது உடலிலிருந்து இரத்தத்தை எடுக்கும் பொழுது அதற்கு 3 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அப்படி இரத்தத்தை எடுக்கும் பொழுது இரத்தம் உறைந்து விட கூடாது என்பதற்காக முதலில் கொசு நமது உடலில் உமிழ் நீரை செலுத்துகின்றது. அப்போது தான் அதனால் இரத்தத்தை எடுக்க முடிகிறது.
கொசு கடித்த இடம் ஏன் வீக்கம் அடைகிறது.?
கொசு கடித்த இடம் ஏன் தடிக்கிறது என்றால் கொசு கடிக்கும் போது உமிழ் நீரை அனுப்பிக்கிறது என்று சொன்னோம் அல்லவா..! அந்த உமிழ் நீர் வந்ததும் நமது உடலில் தேவையில்லாது ஒன்று வந்திருக்கிறது என்று நினைத்து நமது மூளை HISTAMINE என்ற வேதி பொருளை செலுத்தும். இந்த வேதி பொருளும் கொசுவின் உமிழ் நீரும் சேரும் போது தான் வீக்கமும், எரிச்சலும் ஏற்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டில் கொசு அதிகமாக இருக்கா..! இதோ இயற்கையான முறையில் கொசுவை அழிப்பதற்கு வழிகள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |