முன்கூட்டியே திருட்டு நடப்பதை கண்டறியும் தொழில்நுட்பம்..!
ஜப்பானிய தொழில்நுட்பம் ஸ்டார்ட்அப் நிறுவனமான வாக்(Vaak), ‘வாக்ஐ'(VaakEye) என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது.
இந்த மென்பொருள் கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நடத்தைகளை கண்டறிந்து, உண்மையில் திருட்டு நடைபெறுவதற்கு முன்னரே தடுக்கக்கூடியது.
இந்த மென்பொருள் கண்காணிப்பு காமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகத்திற்குரிய நடத்தைகளை கண்டறிந்து, உண்மையில் திருட்டு நடைபெறுவதற்கு முன்னரே தடுக்கக்கூடியது.
இதையும் படிக்கவும்–> | நீங்கள் சுற்றுலா செல்ல இந்த 5 Android ஆப்ஸ் போதும் -கவலை இல்ல இனி..! |
முந்தைய தொழில்நுட்பம் – வெர்சன்:
எனினும் தொழில்நுட்பம் ஆச்சர்யமளிக்கும் வேகத்தில் முன்னேறியதற்கு நாம் நன்றி கூறுவது அவசியம். சில படத்தில் காண்பித்த தொழில்நுட்பத்தின் முந்தைய வெர்சன் நம்மிடம் ஏற்கனவே உள்ளது.
முன்கூட்டியே கடைகளில் நடக்கும் திருட்டை கண்டறியும் வாக்ஐ தொழில்நுட்பம்:
உண்மையில் முன்கூட்டியே கடைகளில் நடக்கும் திருட்டை கண்டறியும் திறன் கொண்டது. இது கடைக்காரர்கள் கண்டறிய முடியாத வகையில் இருக்கும், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமராக்களின் காணொளியை ஆராய்வதன் மூலம் கண்டறிகிறது.
இந்த அல்காரிதம், ஒரு நபர் பின்னர் கடையில் திருடுவதற்கான போதுமான வாய்ப்பு இருக்கிறதா என்பதை கணித்து ஸ்மார்ட்போன் செயலின் மூலம் எச்சரிக்கையை வழங்குகிறது. இதன் மூலம் அந்த குற்றம் நடைபெறுவது தடுக்கப்படலாம்.
வாக்ஐ தொழில்நுட்பம் :
யோகோகாமாவிலுள்ள பல்பொருள் அங்காடியில் முன்னதாக கண்டுபிடிக்கப்படாத திருட்டு சம்பவத்தை சரியாக கண்டறிந்தபோது டிசம்பர் 2018ல் செய்திகளில் வலம் வந்தது வாக்ஐ. சந்தேகத்திற்கிடமான அந்த 80 வயதான மனிதர் தொப்பியை திருடி சில நாட்களுக்கு பின்னர் பிடிபட்டார்.
இப்போது டோக்கியோ பகுதியில் அமைந்திருக்கும் சில கடைகளில் வாக்ஐ மென்பொருளை பரிசோதனை செய்து வருகிறது வாக். இருப்பினும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜப்பான் முழுவதும் உள்ள சுமார் 100,000 கடைகளில் வாக்ஐ மென்பொருளை நிறுவ திட்டமிட்டு வருகிறது.
இதையும் படிக்கவும்–> | ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..! |
ராயோ டனாகா:
வாக் நிறுவன நிறுவனர் ரயோ டனாகா முதல் முறையாக வாக்ஐ மென்பொருள் சரியான திருடர்களை கண்டறிந்த சம்பவத்தை பின்வருமாறு நினைவு கூர்ந்தார், ‘செயற்கை நுண்ணறிவு மூலம் குற்றங்களை தடுக்கம் வகையில் சமுதாயத்திற்கு நெருக்கமான ஒரு முக்கிய நடவடிக்கையை நாம் கடைசியில் எடுத்துவிட்டோம் என நினைத்தேன்’ என்றார்.
மிகவும் சிக்கலான அல்காரிதம்-ஐ அடிப்படையாக கொண்ட வாக்ஐ, ஒரு ஆழமான கற்றலை கையாள்வதற்காக 100,000 மணி நேரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு காரணிகளை பயன்படுத்துகிறது. மனிதர்களின் முகம், உடைகள், இயக்கம், ஒட்டுமொத்த நடத்தை ஆகிய காரணிகளுடன், காலநிலை, கடை அமைந்துள்ள பகுதி ஆகியவையும் இதில் அடங்கும்.
அற்புதமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் :
30 வயதான டனாகா, வாக்ஐ-ன் செயல்பாடுகளை மேம்படுத்த திட்டங்களை வைத்துள்ளார். அவர் கூறுகையில் ‘நாங்கள் இன்னும் இதற்கான சந்தை திறனை கண்டுபிடித்துக்கொண்டுள்ளோம்.
நாங்கள் தொடர்ந்து நிறுவனத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம்’ என்கிறார்.
இதையும் படிக்கவும்–> | வாட்ஸ்அப்ல உங்களுக்கு பிடிச்சவங்க மெசேஜ் அனுப்பறத மட்டும் தனியா பார்க்கும் வசதி இப்போ வந்தாச்சு… |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |