Fingerprint Sensor – ல் பல விஷயம் உள்ளது தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

சில வருடங்களுக்கு முன்னெல்லாம் நாம் பயன்படுத்தும் மொபையில் போனுக்கு பாஸ்வேர்ட், பேட்டன் அல்லது பின் நம்பர் கொடுத்து நமது பாதுகாப்புக்காக லாக் செய்து வைத்திருப்போம்.

ஆனால் அந்த லாக் மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டது என்றால் மிக எளிதாக நமக்கு தெரியாமலேயே அன்லாக் செய்து அவர்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், தற்போது விற்பனை செய்யப்படும் அனைத்து போனிலும் fingerprint sensor அறிமுகம் செய்தார்கள்.

இந்த fingerprint sensor பயன்படுத்தி நமது போனை லாக் செய்து கொள்ள முடியும். மேலும் fingerprint sensor -யில் நாம் லாக் செய்து வைக்கும் போது மற்றவர்களால், நம் போனை அன்லாக் செய்ய முடியாது என்பதாலும், இந்த fingerprint sensor அதிக பாதுகாப்பாக இருந்தது. இருப்பினும் இந்த fingerprint sensor அடுத்த கட்டமாக தற்போது விற்பனையாகும் அனைத்து போனிலும் In-Display Fingerprint sensor அறிமுகம் செய்து, புழக்கத்தில் வந்துவிட்டது.

இந்த In-Display fingerprint sensor தற்போது பயன்படுத்தி வருகின்றோம். அவற்றை பற்றிய சில விஷயங்களை இப்போது நாம் தெளிவாக தெரிந்து கொள்வோம் வாங்க.

In-Display Fingerprint Sensor பயன்:

In-Display Fingerprint sensor பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நமது கைரேகையை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். நமது கைரேகையில் மூன்று வகைதான் உள்ளது. அவை Loop, Arch மற்றும் Whorl ஆகும்.

இந்த மூன்று கைரேகையை பொறுத்தவரை Ridges மற்றும் Valleys என்ற இரண்டு பிரிவுகளை கொண்டது. அதாவது நமது கைரேகையில் உள்ள மேடு மற்றும் பள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும்.

இந்த காரணமாக நாம் நமது போனில் Fingerprint sensor லாக் செய்யும் போது மற்றவர்களால் அன்லாக் செய்ய முடியாது. இதன் காரணமாக தற்போது விற்பனையாகும் போனில் In-Display Fingerprint sensor வசதிகள் உள்ளது.

இந்த In-Display Fingerprint Sensor-லும் மூன்று வகைகள் உள்ளது Capacitive Fingerprint Sensor, Optical Fingerprint Sensor மற்றும் Ultrasonic Fingerprint Sensor இன்று மூன்று வைகை உள்ளது. அவற்றில் தங்களது மொபைல் போன் இந்த ரகம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சுருட்டி வைத்து கொள்ளும் வசதி கொண்ட புதிய டிவியா..!

Capacitive Fingerprint Sensor:

தற்போது நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றுதான் இந்த Capacitive Fingerprint Sensor. நமது போனின் பின்புறத்தில் ஒரு ஸ்கெனர் போல் இருக்கும், அவற்றில் நாம் லாக் செய்யும்போது, நமது ரேகையில் உள்ள மேடுகள் மற்றும் பள்ளங்கள் எங்கு உள்ளது, எத்தனை உள்ளது என்பதை ஸ்கேன் செய்து கொள்ளும். ஸ்கேன் ஆன டேட்டா நமது போனில் சேவாகும். மறுமுறை நாம் அன்லாக் செய்யும்போது, சேவாகிய டேட்டாவும் தற்போது இருக்கும் டேட்டாவும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கும். சரியாக இருந்தால் போன் அன்லாக் ஆகும்.

இப்படித்தான் capacitive Fingerprint sensor ஒர்க் ஆகும்.

Optical Fingerprint Sensor:

இந்த Optical Fingerprint Sensor பொறுத்தவரை நம் போனில் முன் பகுதியில் ஒரு பட்டன் போல் இருக்கும் அவற்றில் நமது கைரேகையை வைக்கும்போது லைட் எரியும், அப்போது நமது கை விரலில் உள்ள பள்ளம் மற்றும் மேடுகளை சேவ் செய்து 2D வடிவில் சேவ் செய்து வைத்துக்கொள்ளும்.

பின்பு மறுமுறை நாம் கிளிக் செய்யும்போது, தான்சேவ் செய்து வைத்துள்ள டேட்டாவும், தற்போது இருக்கும் டேட்டாவும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து. பின்பு அன்லாக் செய்து கொடுக்கும்.

திருட்டு போகாமல் இந்த சாதனம் பார்த்து கொள்ளும்..!

இப்படித்தான் தற்போது இருக்கும் In-Display Fingerprint sensor வேலை செய்கிறது. ஆனால் Optical Fingerprint sensor பொறுத்த வரை 2D வடிவத்தில் ஸ்கேன் செய்வதினால் ஈசியாக ஹேக் செய்ய முடியும் என்பது இதன் மைனஸ் பாயின்டாக உள்ளது.

Ultrasonic Fingerprint Sensor:

இந்த Ultrasonic Fingerprint sensor அம்சம் தான் தற்போதைய புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. இந்த ultrasonic Fingerprint sensor அம்சத்தை நாம் பயன்படுத்தும் போது அதாவது நமது மொபைல் போனில் Fingerprint செய்யும் போது, நமது விரல்களின் அழுத்தத்தை கொண்டு நமது விரலில் எத்தனை பள்ளங்கள் உள்ளது மற்றும் எத்தனை மேடுகள் உள்ளது என்று அறிந்துகொண்டு.

அந்த டேட்டாவை ஒரு 3D வடிவத்தில் சேவ் செய்து வைத்துக்கொள்கிறது. இதனால் யாராலும் ஹேக் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது. இந்த புதிய அம்சம் ultrasonic Fingerprint sensor மிகவிரைவில் அனைத்து மொபையில் போனுக்கும் வரப்போவதாக எதிர்பாக்கப்படுகிறது.

இவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளது இந்த In-Display Fingerprint sensor – ல். இந்த தகவல் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

Tv & Fridgeக்கு இனி இதை Try பண்ணுங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement