பான் கார்டுடன் ஆதாரை ஒரு நிமிடத்தில் இணைத்துவிடலாம்.!

Advertisement

பான் கார்டு ஆதார் கார்டு

வணக்கம் நண்பர்களே.! ஆதார் கார்டை பல ஆவணங்களில் இணைப்பது அவசியமாகிவிட்டது. அந்த வகையில் உங்களிடம் பான்  இருந்தால் உடனே ஆதார் எண்ணை இணைத்துவிடுங்கள். பான் கார்டுடன் ஆதார எண்ணை இணைக்க வேண்டும் என்று முன்பே அறிவித்திருந்தது. ஆனால் இன்னும் பல நபர்கள் பான் கார்டுடன் ஆதாரை  இணைக்காததால் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் ஒரு நிமிடத்தில் பான் கார்டுடன் ஆதாரை எப்படி இணைப்பது என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு 31.03.2023 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்முக்கிய அறிவிப்பு.. பான் கார்டு, ஆதார் இணைப்புக்கு கடைசி தேதி இதுவே.. இணைக்காவிட்டால் பான் கார்டு பிளாக் செய்யப்படும்

பான் கார்டு ஆதார் இணைப்பு:

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முக்கியமாக இருப்பது நீங்கள் ஆதார் எண் அப்ளை செய்த போது எந்த நம்பர் கொடுத்தீர்களா அந்த நம்பர் இருக்க வேண்டும். அந்த நம்பரிலுருந்து தான் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

அடுத்து பான் கார்டு நம்பர் ஆதார் எண் நம்பர் தேவைப்படும். இப்போது எப்படி இணைப்பது என்று தெரிந்து கொள்வோம்.

ஸ்டேப்:1

முதலில் ஆதார் எண்ணில் எந்த நம்பர் பதிவு செய்துள்ளீர்களோ அந்த போனை எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

அதில் 567678 அல்லது 56161 ஏதாவது ஒரு  நம்பருக்கு Message செய்ய வேண்டும். நீங்கள் என்ன மெசேஜ் செய்ய வேண்டுமென்றால்  கீழ் கொடுக்கப்பட்டுள்ளது போல் மெசேஜ் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

UIDPAN  space ஆதார் நம்பர் space பான் நம்பர் 

உதாரணமாக (UIDPAN 5521565645458798 AABHCC198)

ஸ்டேப்:4

UIDPAN  என்பது கேப்ஸ் லெட்டரில் தான் இருக்க வேண்டும். இது போல் மெசேஜ் செய்தவுடன் உடனே பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது என்பதற்கான மெசேஜ் வந்துவிடும். 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil

 

Advertisement