போல்விட் மாத்திரை பயன்கள் | Folvite Tablet Uses in Tamil
உடலில் ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக நம்மில் பலர் உணவு எடுத்து கொள்வது வழக்கம், சிலர் மருந்து அல்லது மாத்திரை எடுத்து கொள்வது வழக்கம். அப்படி ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக சாப்பிடும் மாத்திரைகளில் ஒன்று Folvite. அந்த மாத்திரை சாப்பிடுவதால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன, அதிகமாக எடுத்துக்கொண்டால் எந்த விதமான தீமைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
போல்விட் மாத்திரை நன்மைகள் – Folvite Tablet Uses in Tamil:

- ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
- உடம்பில் போலிக் சத்து குறைவாக இருந்தால் உடலில் தோன்றும் மெக்லோப்ளாஸ்டிக் எனும் Anemia நோயை குணப்படுத்த உதவுகிறது.
- கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் சத்து அதிகரிப்பதற்காவும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருப்பதற்கும் இந்த மாத்திரை பயன்பட்டு வருகிறது.
- வைட்டமின் B9 குறைபாட்டை சரி செய்வதற்கும், ரத்த சோகை மாற்று நியூரோபதி, சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.
- புற நரம்பு சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கும், பசியை தூண்டுவதற்கும் உதவுகிறது.
- உடம்பில் இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
பக்க விளைவுகள் – Folvite Tablet Side Effects in Tamil:
- குமட்டல், தூக்கமின்மை, காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- தலை வலி, இரைப்பை அழற்சி, மயக்கம் போன்ற பொதுவான தீமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- வலிப்பு நோய், மன குழப்பம், மனதில் சோர்வு, வைட்டமின் பி 12 அளவு குறைவது, பதட்ட நிலை (Fretfulness), பித்தம் (Biliousness) போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
- ஒவ்வாமை, பசியிழப்பு, எரிச்சலூட்டும் தன்மை, தோல் சிவந்து போவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- மேற் குறிப்பிட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
போல்விட் மாத்திரை யார் சாப்பிடலாம்?
- சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடுவதற்கு பின் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
- மருத்துவர் எப்பொழுது சாப்பிட வேண்டும், எந்த அளவு Dosage எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறாரோ அப்பொழுது சாப்பிட வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற முயற்சிப்பவர்கள், குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.
- வேறு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை உபயோகப்படுத்த வேண்டாம்.
- மது அருந்திவிட்டு Folvite மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்.
மருந்து அளவு:
- Folic Acid என்ற வடிவிலும் கிடைக்கிறது.
- Folic Acid – Vitamin B9 – 5 MG மருந்து பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
மருந்து |