மெட்பார்மின் மாத்திரை பயன்கள் மற்றும் அதன் பக்க விளைவுகள் | Metformin Tablet Uses in Tamil
Metformin Tablet Uses in Tamil:- சர்க்கரை நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தாலும், அதற்கான முதன்மை சிகிச்சையாகப் பார்க்கப்படுவது, ‘மெட்ஃபார்மின்’ (Metformin) என்ற மாத்திரைதான். உலகம் முழுவதும் இந்த மாத்திரை சர்க்கரை நோய்க்காகப் பரிந்துரைக்கப்படுகிறது. சரி இந்த மெட்பார்மின் மாத்திரை பயன்கள் மற்றும் இந்த மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது சில சமயம் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும், யாரெல்லாம் இந்த மெட்பார்மின் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம், யாரெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
மெட்பார்மின் மாத்திரை என்றால் என்ன?
மெட்பார்மின் என்பது டைப்-2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முதல் சிகிச்சையாக கொடுக்கப்படும் வாய்வழி மருந்தாகும். இந்த மாத்திரை பிகுவானைடுகள் எனப்படும் மருந்துகளின் வகையைச் சேர்ந்தது. ஆனால் இந்த மாத்திரை சர்க்கரை நோயை குணப்படுத்தாது. சர்க்கரை நோய்/நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்ற நிலை. எனவே இந்த மாத்திரை இரத்த சர்க்கரை அளவை பாதுகாப்பான அளவிற்கு குறைக்கக்கூடியது.
யாரெல்லாம் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள கூடாது?
நீங்கள் கல்லீரல் நோய், சிறுநீரக கோளாறுகள், இதய நோய், ஒவ்வாமைகள் மற்றும் நீரிழிவு கீட்டோஆசிடோசிஸ் போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டால், இந்த மருந்தை எடுத்துக்கொள்முன் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை பெறவேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், தங்கள் கைக்குழந்தைகள் மற்றும் பத்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளக்கூடாது.
மெட்பார்மின் மாத்திரை பயன்கள் – Metformin Tablet Uses in Tamil:
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்க வேண்டும் என்றால் சரியான உணவுப்பழக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் மெட்பார்மின் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி எனப்படும் இந்த ஹார்மோன் நிலையையும் குணப்படுத்த மெட்பார்மின் மாத்திரை (Metformin Tablet) பயன்படுத்தப்படுகிறது.
மெட்பார்மின் மாத்திரையின் பக்க விளைவுகள் – Metformin Tablet Side Effects in Tamil :
சர்க்கரை நோய் உள்ள பெரும்பானாலோர் இந்த மாத்திரையை முதன்முதலாக உட்கொள்ளும் போது பின்வரும் பக்கவிளைவுகளை எதிர்கொள்கின்றன அவை..
நெஞ்செரிச்சல், குமட்டல், வயிற்று வலி, வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பொதுவான பக்கவிளைவுகளை சந்திக்கலாம்.
இன்னும் சிலர் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றாலும் கஷ்டப்படலாம்.
அதோடு சிலர் சிறிது உடல் எடையையும் இழந்திருக்கலாம்.
இன்னும் சிலர் இந்த மாத்திரையை எடுத்த ஆரம்ப காலத்தில் வாயில் மெட்டாலிக் சுவையை சந்தித்தாகவும், அடிக்கடி தலைவலியை அனுபவித்ததாகவும் புகாரளித்தனர்.
டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil |
ஒமேய் மாத்திரை பயன்பாடுகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |