வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுயதொழில் – பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு !!!

Updated On: April 29, 2022 6:38 AM
Follow Us:
பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு
---Advertisement---
Advertisement

சுயதொழில் – பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு !!!

பிளாஸ்டிக் குடம்(Plastic Kudam) இல்லாத வீடு எங்கயாவது இருக்கா ? கண்டிப்பா இருக்காது. என்னதான் காலம் மாறினாலும் இந்த பிளாஸ்டிக் குடம் பயன்படுத்தும் முறை மட்டும் மாறாது. எனவே இன்று சுயதொழிலில் பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு முறை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க.

இந்த தொழிலில் அதிக சந்தை வாய்ப்புகள் இருப்பதினால் அதிக லாபம் பெறலாம்.

newசுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..!

சுயதொழில் – முதலீடு:

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு பொறுத்தவரையில் முதலீடு சுமார் 13 – 15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதில் நிறுவனரின் பங்காக 4.20 லட்சம் ரூபாய் கையிலிருந்து முதலீடாகப் போட வேண்டும்.

கட்டிட அமைப்பு:

சுமார் 1,500 – 2,500 சதுர அடியில் நிலம் தேவைப்படும். குடம் தயாரிக்க ஆகும் இடத்தைவிட அதை ஸ்டோர் செய்து வைக்க அதிகளவில் இடம் தேவைப்படும்.

குடம் தயாரிப்பு – தேவையான பொருட்கள்:

குடம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள் பிளாஸ்டிக்தான். இதற்கான பிளாஸ்டிக்கை கெயில், அல்பியா என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

newபேக்கிங் கிளிப் தயாரிப்பு..! லாபம் தரும் சிறு தொழில்

இயந்திரங்கள்:

இத்தொழிலை ஆரம்பிக்க குறைந்தது நான்கு இயந்திரங்கள் தேவை.

எக்ஸ்ட்ரூடர், மிக்ஸர், கிரைண்டர் மற்றும் கம்ப்ரஸ்ஸர் போன்றவையே அந்த நான்கு இயந்திரங்கள்.

இவை சென்னையிலேயே கிடைக்கிறது. விலை ஆறு முதல் ஏழு லட்சத்திற்குள் அடங்கும்.

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு !!!

மிக்ஸர்:

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு முறையில் முதல் வேலையை இந்த மிக்ஸர் மெஷின் செய்கிறது. மூலப் பொருளை இந்த மிக்ஸர் மெஷினில் போட்டு சூடேற்ற வேண்டும். இந்த மெஷினை கையாள ஒருவர் இருந்தால் போதும்.

எக்ஸ்ட்ரூடர்:

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு முறையில் இது இரண்டாம் நிலையாகும்.

மிக்ஸர் மெஷினில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கை இதில் இருக்கும் வெப்பமூட்டிக் கருவிகள் இந்த பிளாஸ்டிக்கை குடம் செய்ய ஏதுவாக கூழ்ம நிலைக்கு கொண்டு வரும்.

இந்த கூழ்ம நிலையில் வெளிவரும் பிளாஸ்டிக்கை தேவையான அளவுகளில் இருக்கும் டை (வடிவமைப்பு வார்ப்பு) மூலம் குடமாக மாற்றுகிறார்கள். டையின் அளவு மாறுபாட்டுக்கு ஏற்ப குடத்தின் அளவும் மாறுபடும்.

இந்த டையின் மதிப்பு 50,000 ரூபாய் ஆகும். இந்த டையை கையாள குறைந்தது இரண்டு பேர் அவசியம் தேவை.

கம்ப்ரஸ்ஸர்:

பிளாஸ்டிக் குடம்(Plastic Kudam) தயாரிப்பு முறையில் கம்ப்ரஸ்ஸரில் இருந்து வெளிவரும் காற்றானது டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூழ்மத்தைக் குடமாக மாற்றுகிறார்கள்.

கிரைண்டர்:

கிரைண்டர் என்பது குடம் உற்பத்தி செய்து முடிந்தபிறகு கிடைக்கும் கழிவுப் பொருளை மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப் பயன்படும் மெஷின் ஆகும்.

குடம் (plastic kudam) உற்பத்தியில் கிடைக்கும் கழிவு பிளாஸ்டிக்குகள் இந்த கிரைண்டர் மூலம் துண்டு துண்டாக ஆக்கப்படுகிறது.

இந்த துண்டுகள் மீண்டும் இரண்டாம் ரக பிளாஸ்டிக் குடத் தயாரிப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

சுயதொழில் – இவற்றின் பிளஸ் மற்றும் மைனஸ்:

பிளஸ் என்னவென்றால் மூலப் பொருளை கொஞ்சம்கூட வீணாகாதபடிக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சியும் செய்து கொள்ளலாம். மூலப் பொருளின் விலையிலும் ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காது.

மைனஸ் என்னவென்றால் இயந்திரங்களை வைப்பதற்கும், தயாரிக்கப்பட்ட குடங்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கும் அதிகளவில் இடம் தேவைப்படும்.

newபுதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த பட்டியல்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil