மத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்..!

CGRMSE Scheme

மத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்..! CGTMSE Scheme in Tamil

CGTMSE Scheme in Tamil:- புதிதாக தொழில் துவங்கும் அனைத்து இளம் தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி பல்வேறு மானிய உதவிகளையும், நிதியுவிகளையும் வழங்குகின்றன. அந்த வகையில் 5,00,000 வரை பிணையம் இல்லாமல் கடன் உதவி பெறலாம். அதுதான் மத்திய அரசின் CGTMSE திட்டமாகும்.

சிறு மற்றும் குறு தொழில்கள் வட்டார வளர்ச்சிக்கும், நாட்டின் நிதிநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் பெரும் பங்காற்றுகின்றது. ஆனால் அதற்கான நிதியுதவிகளும், பெருளாதாரக் கைமாற்றுகளும் மறுக்கப்பட்டே வந்துள்ளன. சிறிய கடன் உதவிகளுக்கூட பெறுவதற்கு பெரும் திண்டாட்டங்களை சந்திக்கின்றன. இதன் காரணமாக முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் குறுந்தொழில் தொடங்குவதில், தொடங்கிய தொழில்துறையை நிர்வாகம் செய்வதிலும் பலவகையான ஆபத்தான கட்டங்களை தாண்டவேண்டிய சூழல்களுக்கு தள்ளப்படுகின்றன.

பொது சேவை மையம் தொடங்குவது எப்படி

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

எனவே சிறு குறு தொழிலார்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தொடங்கிய குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம், முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் சிக்கலை தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள புதிய நிறுவனங்கள் இதில் கடன் உதவி பெற தகுதி பெற்றவர்கள். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் மற்றும் சிறு தொழில் வளர்ச்சி வங்கி இணைந்து இந்த நிதி உத்தரவாத திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சரி இந்த CGTMSE Scheme in Tamil பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

newசிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி ?

CGTMSE Scheme in Tamil..!

கடன் வழங்கும் நிறுவனங்கள்:-

குறு மற்றும் சிறு தொழிலார்கள் தொழில்களுக்குக் கடன் வழங்கத் தகுதி பெற்ற வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொது, தனியார் மற்றும் வெளிநாட்டு வணிக வங்கிகள் கடன் வழங்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட கிராம வங்கிகளும் கடன் வழங்குகின்றன.

அதாவது 26 பொதுத்துறை வங்கிகள், 21 தனியார் வங்கிகள், 72 கிராம வங்கிகள், 4 வெளிநாட்டு வங்கிகள் கடன் வழங்குகின்றன. 9 வங்கியல்லாத நிறுவனங்கள் கடன்களை வழங்கத் தகுதி பெற்றுள்ளன.

டெல்லி நிதிக்கழகம், கேரளா நிதிக்கழகம், ஜம்மு காஷ்மீர் நிதிக்கழகம், ஆந்திர பிரதேச நிதிக்கழகம், இந்திய இறக்குமதி, ஏற்றுமதி வங்கி, தமிழ்நாடு தொழில்கள் முதலீட்டுக் கழகம், தேசிய சிறு தொழில்கள் கழகம், வடகிழக்கு வளர்ச்சி நிதிக்கழகம், இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

பிணையன்றிக் கடன் வசதி:-

சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் இத்திட்டத்தில் எளிதாகக் கடன் பெறுவதற்கு விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாம் நபரின் பிணை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் இருப்பு மற்றும் மூலதனக்கடனாக நூறு கோடி ரூபாய் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

நலிந்த நிறுவனங்களைப் புனரமைப்பதற்காகவும் கடன் பெற்றுக்கொள்ளலாம். அரசு மற்றும் குறிப்பிட்ட முகமையின் கீழ் இயங்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரவாத விகிதம்:-

கடன் பெறும் தொழில்முனைவோர் பாதிக்கப்படாமல் இருக்கக் கடன் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட கடனில் அதிகபட்சமாக 85 விழுக்காடு பாதுகாப்பு உத்தரவாதத்தை இந்தத் திட்டம் வழங்குகிறது.

50 லட்சம் பெற்றவருக்கு 75 விழுக்காடும், 5 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு 85 விழுக்காடும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

நடுத்தர நிறுவன தொழில் முனைவோருக்கும், பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் 80 விழுக்காடு அளிக்கப்படுகிறது.

மொத்த கடன் தொகையில் 50 விழுக்காடு உத்தரவாதம் இருந்தால் 50 லட்சத்திலிருந்து 100 லட்சம் வரை கடன் தகுதி உயர்த்தப்படுகிறது.

newசுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்..!

உத்தரவாத காலம்:-

கடன் தொகையைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்ட கால அளவு வரை உத்தரவாதம் பொருந்தும். உழைப்பு மூலதனத்துக்கு 5 ஆண்டுகள் வரை அனுமதிக்கவோ, உத்தரவாதத்தை 5 ஆண்டுகளில் தடை செய்யவோ நேரிடும்.

உத்தரவாத கட்டணம்:

கடன் தொகையைப் பொறுத்து ஆண்டுக் கட்டணமாக 1.0 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றால் 0.75 விழுக்காடும், 5 லட்சத்திலிருந்து 100 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் பெண்கள் மற்றும் குறு தொழில் முனைவோருக்கு 0.85 விழுக்காடும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

தகவல்களை எப்படி அறியலாம்?

குறு மற்றும் சிறு தொழில் தொடங்குவோர் இந்த திட்டம் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள www.cgtmse.in என்ற இணையதளத்திற்கு சென்று முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2021
SHARE