வாங்கும் விலை ரூ.24 ஆனால் விற்கும் விலையோ ரூ.1000..! அருமையான சுயதொழில்..!

Advertisement

Chicory Root Powder Business in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய கடமைகள் இருக்கும். அதாவது தனது குடும்பம் எந்த ஒரு பொருளாதார நஷடமும் இல்லாமல் நடத்தி செல்ல வேண்டும். குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் போன்ற பல ஆசைகள் இருக்கும். இருப்பினும் அவற்றை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றால் அவை அனைத்திற்கும் பணம் அதிக அளவில் தேவைப்படும். அதனால் தான் நமக்கு தேவையான பணத்தை நாமே சம்பாதிக்க அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் Chicory Root Powder தயாரிப்பு தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.

இந்த Chicory Root Powder பலவகையான உணவு பொருட்களுக்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக காபி பவுடர் தயார் செய்வதற்கு இந்த Chicory Root Powder பயன்படுத்தப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இது பல வகையான மருந்துகள் தயார் செய்யவும் பயன்படுகிறது.

ஆக இந்த தொழில் வருமானம் என்பது நிச்சயம் நமது எதிர்பார்ப்பை விட மிக அதிகமாக இருக்கும். அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மூலப்பொருட்கள்:

இந்த தொழிலின் முக்கிய மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள Chicory வேர்கள் தான். மேலும் அதனுடன் பேக்கிங் கவர் மற்றும் கேமிங் மெஷின் ஆகியவை தேவைப்படும்.

தேவைப்படும் சான்றிதழ்:

பொதுவாக எந்த ஒரு உணவு சார்ந்த தொழிலை தொடங்கினாலும் அதற்கு நீங்கள் FSSAI சான்றிதழை பெற வேண்டும். ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கு GST Registrationநிச்சயம் செய்திருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 4,950 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை மட்டும் செய்தால் போதும் உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது..!

இடம் வசதி:

இந்த தொழிலுக்கு தனியாக இடமே கடையோ அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய வீட்டில் உள்ள ஒரு சிறிய அறை ஒன்று போதும் இந்த தொழிலை சுலபமாக செய்ய முடியும்.

Chicory வேர்கள் எங்கு கிடைக்கும்?

இந்த Chicory வேர்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் இந்த Chicory வேர்கள் மிக மலிவான விலையில் கிடைக்கிறதாம்.

தயார் செய்யும் முறை:chicory powder

நாம் வாங்கி வைத்து Chicory வேர்களை நன்கு சுத்தம் செய்யவும். பின் அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள்.

பின் ஒரு அகலமான பாத்திரத்தில் காயவைத்த வேர் துண்டுகளை போட்டு நன்கு வறுக்க வேண்டும். மர நிறத்தில் உள்ள வேர்கள் அரக்கு நிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் இருந்து இறக்கு நன்கு ஆற வைக்கவும். பிறகு மிக்சி ஜாரில் சேர்த்து பின் நன்றாக சலித்துக்கொள்ளவும். பிறகு பேக்கிங் மிஷினில் பேக்கிங் செய்து கொள்ளவும்.

சந்தை வாய்ப்பு:

நாம் பேக்கிங் செய்து வைத்துள்ள Chicory Root Powder-ஐ மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், டிபார்மண்ட் ஸ்டோர் மற்றும் மருந்து தயாரிக்கும் இடங்களில் விற்பனை செய்யலாம். அதேபோல் ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

தோராயமாக சந்தையில் 200 கிராம் Chicory Powder-யின் வாய்வழி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக 1 கிலோ Chicory Root Powder-யின் விலை 1000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு நாளுக்கு 4 கிலோ முதல் 5 கிலோ வரை Chicory பவுடரை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4000 முதல் 5000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். தோராயமாக ஒரு மாதத்திற்கு 120000 முதல் 150000 வரை சம்பாதிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கைநிறைய தினமும் 3,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில்..! குறைவான முதலீட்டில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement