தயாரிப்பு தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை..!

தயாரிப்பு தொழி

தயாரிப்பு தொழில் – ரூ.22 செலவில் பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை..!

How to make dish wash liquid for business..!

தயாரிப்பு தொழில் – வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெற வேண்டுமா? அப்படி என்றால் வெறும் ரூ.22 செலவில் பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிப்பு தொழில் செய்து நல்ல வருமானம் பெறலாம்.

இந்த தயாரிப்பு தொழில் செய்வதற்கு இடவசதியோ அல்லது அதிக முதலீடோ, வேலையாட்களோ தேவையில்லை. வீட்டில் இருந்தே வெறும் ரூபாய் 22 செலவில் இந்த தயாரிப்பு தொழில் மூலம் நல்ல இலாபம் பார்க்கமுடியும்.

இதையும் படிக்கவும்–> புதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறு தொழில் பட்டியல் 2019..!

சரி வாங்க பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிப்பு தொழில் பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

குடிசை தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் செய்ய – தேவையான பொருட்கள்:

 1. SLES (sodium laureth sulfate)20 மில்லி
 2. Citric acid10 கிராம்
 3. Global salt40 கிராம்
 4. பேக்கிங் சோடா – 20 கிராம்
 5. RO water750 மில்லி
 6. லெமன் எசன்ஸ் – தேவையான அளவு
 7. புட் கலர் – தேவையான அளவு
 8. பிளாஸ்ட்டிக் வாளி – ஒன்று
இதையும் படிக்கவும்–> சுயதொழில் – சலவை சோப்பு தயாரிப்பு முறை!!!

குடிசை தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை ..!

தயாரிப்பு தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் செய்முறை விளக்கம், முதலில் பிளாஸ்ட்டிக் வாளியை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் SLES (sodium laureth sulfate) 20 மில்லி ஊற்றவும்.

SLES பயன்படுத்துவதால், பாத்திரத்தில் உள்ள கறைகளை நீக்குவதற்கும், பாத்திரங்களை ஜொலிஜொலிக்க வைப்பதற்கும் மேலும் அதிக நுரை வருவதற்கும் இந்த SLES பயன்படுகிறது.

பின்பு இந்த கலவையுடன் Citric acid 20 கிராம் சேர்க்கவும். பின்பு ஒரு மரக்கரண்டியை கொண்டு இந்த கலவையை சுமார் 5 நிமிடங்களை வரை நன்றாக கிளறி விடவும்.

Citric acid பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கும், பாத்திரத்தை பளபளக்கவும் பயன்படுகிறது.

Citric acid நன்றாக கரைந்த பின் 20 கிராம் பேக்கிங் சோடாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலவையை நன்றாக கிளறி விடவும்.

பின்பு இந்த கலவையுடன், Global salt அதாவது (G salt) 40 கிராம் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

G salt பாத்திரத்தில் உள்ள கறைகளை நீக்குவதற்கும், பாத்திரத்தில் உள்ள கிருமிகளை அகற்றுவதற்கும் பயன்படுகிறது.

பிறகு இதனுடன் RO water – 750 மில்லி சேர்த்து 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விடவேண்டும். இவ்வாறு கிளறி விடுவதினால் கலவையானது நல்ல கெட்டியாக மாறும்.

இறுதியாக தங்களுடைய விருப்பத்திற்கு லெமன் எசன்ஸ் மற்றும் புட் கலர் சிறிதளவு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

பின்பு இந்த கலவையை சுமார் 4 மணி நேரம் வரை, கலவையை தனியாக வைத்திருக்கவும்.

காலி பாட்டிலில் இந்த கலவையை ஊற்றி எப்போதும் போல் பாத்திரம் கழுவ பயன்படுத்தி கொள்ளலாம்.

இதையும் படிக்கவும்–> பினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..!

பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிப்பு தொழில் – முதலீடு:

 • SLES (sodium laureth sulfate) – ஒரு லிட்டர் ரூ 100/-, நாம் 20 மில்லி மட்டுமே பயன்படுத்தவத்தினால் ரூ.20/-
 • Citric acid – 10 கிராம் – ஒரு கிலோ – ரூ 50/-, 10 கிராம் ரூபாய்: 0.50.P
 • Global salt – 40 கிராம் – ஒரு கிலோ – ரூ25/-, 40 கிராம் ரூபாய். 1/-
 • பேக்கிங் சோடா – 20 கிராம் – ஒரு கிலோ 45/- 20 கிராம் ரூ. 1/-
 • ஒரு லிட்டர் பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயார் செய்ய மொத்த செலவு ரூ 22.05/-

குடிசை தொழில் – சந்தை வாய்ப்பு:

 • சந்தையில் விற்கப்படும் பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் விலையை விட குறைந்த விலைக்கு சிறிய பெட்டி கடைகளில் மற்றும்  வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யலாம்.இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.
இதையும் படிக்கவும்–> சிறுதொழில் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு..!
இதையும் படிக்கவும்–> குளியல் சோப் இனி நமே தயாரிக்கலாம் ?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.