சுயதொழில் – குளியல் சோப் இனி நமே தயாரிக்கலாம் ?

சுயதொழில்

சுயதொழில் – குளியல் சோப் இனி நமே தயாரிக்கலாம் ?

பெண்கள் வீட்டில் இருந்தே ஒய்வு நேரங்களில் செய்ய கூடிய ஒரு சிறந்த தொழில் தான் குளியல் சோப்பு (skin whitening soap) தயாரிப்பு. அதுவும் பெண்கள் ஒய்வு நேரங்களில் மிக எளிதில் செய்யக்கூடிய தொழிலாக இது விளங்குகிறது. இந்த தொழில் துவங்குவதற்கு இட வசதியோ, அதிக முதலீடோ மற்றும் வேலை ஆட்களோ தேவையில்லை. ஒரு நபர் இருந்தாலே போதும் இந்த தொழிலை துவங்கலாம். தற்போது இந்த தொழிலுக்கு அதிக சந்தை வாய்ப்பு இருப்பதினால், அதிக இலாபமும் பெற இயலும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கூட இந்த தொழிலை பகுதி வேலையாக செய்து வருமானம் பெற இயலும்.

சரி வாங்க இந்த பகுதியில் இயற்கை முறையில் (skin whitening soap) குளியல் சோப் எப்படி தயாரிப்பது என்று இவரில் நாம் காண்போம்..!

சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

 

சுயதொழில் – இயற்கை குளியல் சோப் தயாரிக்கும் முறை – தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை ஜெல் – ஒரு கப்
  2. காஸ்ட்டிங் சோடா – ஒரு கப்
  3. காய்ந்த ரோஜா – ஒரு கப்
  4. தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
  5. வாசனை திரவியம் – விருப்பத்திற்கு ஏற்றது
  6. பிளண்டர்
  7. முல்தானிமட்டி – இரண்டு ஸ்பூன்
  8. விட்டமீன் E மாத்திரை – 2

சுயதொழில் – இயற்கை குளியல் சோப் தயாரிக்கும் முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும். அவற்றில், வைத்திருக்கும் காய்ந்த ரோஜா பூவை நன்றாக கொதிக்க வைக்கவும்.

பின்பு அடுப்பில் இருந்து இறக்கி கொதிக்க வைத்த, ரோஜா பூவை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஆறவைக்கவும். கொதிக்க வைத்த நீர் நன்றாக ஆறியதும் அவற்றில் காஸ்டிக் சோடாவை சேர்க்க வேண்டும்.

பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..!

காஸ்ட்டிக் சோடா ஒரு காரத்தன்மை உடையது. நெடி ஏறும் எனவே அவற்றை சேர்க்கும் பொது முகத்தில் துணி காட்டிக்கொள்வது மிகவும் நல்லது.

காஸ்ட்டிக் சோடா சேர்க்கும் போது மிகவும் வெப்பத்தன்மையாக இருக்கும். எனவே கவனமாக அவற்றை ஒரு கரண்டியால் கலந்து விட வேண்டும்.

பின்பு காஸ்ட்டிக் சோடாவின் வெப்ப தன்மை ஆறியதும் அவற்றில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவேண்டும். (கற்றாழையில் இருக்கும் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு அவற்றை மிக்சியில் நன்றாக அடித்து கொள்ள வேண்டும்)

பின்பு முல்தானி மெட்டியை கலவையில் சேர்த்து கலந்து விட வேண்டும்.

அதன் பிறகு 200 மில்லி தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒரு பிளண்டரை பயன்படுத்தி நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்பு தொடர்ச்சியாக அவற்றில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு வாசனை திரவியத்தை கலந்து விட வேண்டும்.

இறுதியாக விட்டமின் E மாத்திரையை கலவையில் கலந்து திரும்பவும் பிளண்டரால் கலந்து விட்டால் கலவை தயாராகிவிடும்.

இப்பொழுது டி கப்பில் இந்த கலவையை ஊற்றி, கலவை நன்றாக இறுகும் வரை காத்திருக்க வேண்டும்.

பின்பு கலவை நன்றாக இறுகியதும் டி கப்பில் இருந்து சோப்பை தனியாக எடுத்தால் குளியல் சோப் (skin whitening soap) தயார்.

சுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம்

சுயதொழில் – சந்தை வாய்ப்பு:

இப்பொழுது சந்தையில் விற்கப்படும் குளியல் சோப்புகள் அனைத்திலும் அதிகளவு கெமிக்கல் இருப்பதினால், தோல் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே அதிகளவு கெமிக்கல் கலக்காத குளியல் சோப்பை நம் வீட்டில் இருந்தபடியே தயாரித்து தரமானதாக சந்தையில் விற்பனை செய்தால், அதிக வாடிக்கையாளர்களை தாங்கள் ஈர்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் உங்கள் வீட்டு பகுதியில் சிறிய பெட்டி கடைகளில் மற்றும் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்து இலாபம் பெற இயலும்.

சுயதொழில் – முக்கிய குறிப்பு:

சோப் தயாரித்த உடனே பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. 20 நாட்களுக்கு பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.

ஏன் என்றால் இந்த குளியல் சோப் தயாரிக்க பயன்படுத்தியுள்ள காஸ்ட்டிக் சோடாவில் இருக்கும் கெமிக்கல் தன்மை முழுவதும் வெளியேறுவதற்காக 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.

கலவைகளை கைகளில் கலந்து விட கூடாது, கண்டிப்பாக கரண்டியாலோ அல்லது பிளண்டராலோ மட்டுமே கலந்து விட வேண்டும்.

சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2019