கொத்தவரங்காய் சாகுபடி செய்வது எப்படி? Guar cultivation..!
Guar cultivation:- கொத்தவரை என்பது கொத்தவரங்காய் என்று அழைக்கப்படுகிறது. இது கொத்து கொத்தாக காய்கள் காய்க்கும் செடி வகையை சேர்ந்து. கொத்தவரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. கொத்தவரையின் செடி வலி நிவாரணமாகவும், கிருமிநாசினையாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொத்தவரங்காய் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளும். மேலும் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு கொத்தவரை ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. சரி இப்பதிவில் கொத்தவரங்காய் சாகுபடி செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.
இதையும் படியுங்கள் சௌசௌ சாகுபடி முறை இயற்கை விவசாயம்..! |
இரகங்கள்:
கொத்தவரை செடி சாகுபடிக்கு பூசா மவுசாமி, பூசா நவுபகார், பூசா சதபாகர் மற்றும் கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
பருவகாலம்:
கொத்தவரை சாகுபடி பொறுத்தவரை ஜூன் முதல் ஜூலை வரையும், பின் அக்டோபர் முதல் நவம்பர் வரையும் சாகுபடி செய்ய ஏற்ற பருவக்காலமாகும்.
கொத்தவரை சாகுபடிக்கு ஏற்ற நிலம்:
கொத்தவரங்காய் செடியை சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதி கொண்ட மனர் பாங்கான நிலம் மிகவும் சிறந்தது. கொத்தவரை எல்லா மண் வகையிலும் வளரும் தன்மை கொண்டது என்றாலும் கொத்தவரை உவர் நீர் மற்றும் உவர் மண்ணில் வளர்வது இதன் தனி சிறப்பாகும்.
தட்பவெப்ப நிலை:
கொத்தவரை வளர மிதமான சூரிய ஒளியும், மண்ணின் ஈரப்பதமும் குறையாமல் இருக்க வேண்டும். மண்ணின் கார அமிலத்தன்மை 7.5 முதல் 8 வரை இருக்க வேண்டும்.
நிலம் மேலாண்மை:
கொத்தவரை சாகுபடி பொறுத்தவரை நிலத்தை நன்கு உழுது சமன்படுத்தி கொண்டு பின்னர் 45 செ.மீ (Cm) இடைவெளியில் பார்களை அமைத்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் தர்பூசணி சாகுபடி முறைகள்..! |
விதையளவு:
ஒரு ஏக்கருக்கு தலா 10 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதைக்கும் முன்பு விதைகளை ஆட்டு ஊட்ட கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும், இதனால் விதைகள் நல்ல வீரியத்துடன் வளரும்.
அல்லது
ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவைக்கொண்டு நேர்த்தி செய்யலாம்.
இந்த விதைகளை 15 முதல் 30 நிமிடங்கள் வரை நிழலில் உலர்த்தி பக்கவாட்டில் 15 செ.மீ (Cm) இடைவெளியில் ஊன்ற வேண்டும்.
நீர் மேலாண்மை:
கொத்தவரை சாகுபடி பொறுத்தவரை விதைகளை ஊன்றிய பிறகு நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்சலாம்.
உரம் மேலாண்மை:
கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, மக்கிய தொழு உரம் 25 டன், தழைச்சத்து 50 கிலோ, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். நடவு செய்த 30வது நாளில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.
களை நிர்வாகம்:
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
கொத்தவரை நடவு செய்த 20 நாட்களில் பூ பூக்கத் தொடங்கி விடும். அடி கிளை வரை நுனி கிளை வரை அடுக்கடுக்காக காய்கள் இருக்கும். நேராக போகும் தண்டுகளை விட்டு விட்டு பக்க கிளைகளை அகற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறை:
கொத்தவரையை இலை தத்துப்பூச்சி, காய்ப்புழு ஆகியவை அதிகம் தாக்கும். எனவே புகையிலை, பூண்டு கரைசலை பயன்படுத்தி தடுக்கலாம். இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் கலந்து பிஞ்சி பருவ மற்றும் காய் பருவங்களில் தெளிக்கலாம்.
இதையும் படியுங்கள் நெல் சாகுபடி முறைக்கு சொட்டு நீர் பாசனம் அமோக மகசூல் ..! |
அறுவடை:
கொத்தவரை விதைத்த 45 நாட்களிலேயே காய்கள் அறுவடைக்கு தாயராகி விடும். காய்கள் முற்றி விடாமல் 2 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும். இதில் 5 முதல் 7 டன் வரை மகசூல் கிடைக்கும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | pasumai vivasayam in tamil |