சீரக சம்பா சாகுபடி முறை..! Seeraga Samba Rice Cultivation..!

Seeraga Samba Rice Cultivation

சீரக சம்பா நெல் சாகுபடி | Seeraga Samba Rice Cultivation

Seeraga Samba Rice Cultivation:- பல்வேறு நெல் ரகங்கள் இருந்தாலும் சீரக சம்பா நெல் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இந்த ரக நெல் நல்ல வளமான மண்ணில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. மேலும் இதற்கு இயற்கை உரங்கள் மட்டுமே இடவேண்டும்.

சீரக சம்பா அரிசி பொதுவாக பிரியாணி மற்றும் பொங்கல் தயாரிக்கப் பயன்படுகிறது. மக்களிடம் இதன் தேவை அதிகமிருந்தாலும் குறைந்த இடங்களிலேயே பயரிடப்படுகிறது. இது குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுவதால் இதன் விலையும் அதிகம்.

சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..!

 

பாரம்பரிய நெல் ரகங்களில் முதல் இடத்தில் இருப்பது சீரக சம்பா நெல் பயிர். ஆத்தூர் கிச்சலி சம்பா நெல்வகைக்கு ஓரளவு சமமாக மகசூல் தரவல்லது சீரக சம்பா நெல்.

சீரக சம்பாவில் இரண்டு ரகங்கள் உண்டு. வாசனை சீரக சம்பா மற்றும் சாதாரண சீரக சம்பா. இந்த

நெல்லிற்கு இந்த பெயர் வரக்காரணம் இதன் நெல் மணிகள் சீரக வடிவில் இருப்பதால்.

சரி சீரக சம்பா சாகுபடி (Seeraga Samba Rice Cultivation) செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

பருவ காலம்:

சீரக சம்பா சாகுபடி (Seeraga Samba Rice Cultivation): 

இதன் வயது சுமார் 135 நாட்கள். சம்பா பட்டத்தில் நடுவது செய்வது சிறப்பு. புரட்டாசி மாதம் முதல் வாரம் நடவு செய்வது நல்ல பட்டம். மற்ற பட்டங்களில் பயிர் செய்தால் கதிர்கள் சரியாக வெளி வருவது இல்லை. பறவைகளின் தொந்தரவு சற்று அதிகமாக இருக்கும்.

விதை அளவு:

சீரக சம்பா சாகுபடி (Seeraga Samba Rice Cultivation):

வைக்கோல் படுகை நாற்று முறையில் நாற்று விட்டால் ஏக்கருக்கு நான்கு கிலோ விதை போதும். அதிகபட்சமாக இருபது நாள் நாற்று நடுவது சிறப்பு. அதிகப்படியான தூர்கள் வரும்.

கயிறு பிடித்து (செம்மை நெல் சாகுபடி) நடுவதன் மூலம் 20% மகசூல் கூட வாய்ப்பு உண்டு. சீராக சம்பாவில் களை கட்டுப்பாடு எளிது.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli Sagupadi in Tamil..!

பயிர் பாதுகாப்பு:

சீரக சம்பா சாகுபடி (Seeraga Samba Rice Cultivation):

பூச்சி தாக்குதலுக்கு கற்பூர கரைசல் கொடுக்கலாம். கற்பூர கரைசல் பயன்படுத்தும் போது நன்மை செய்யும் பூச்சிகள் உடைய எண்ணிக்கை உடனே வயலில் அதிகரிக்கும். பயிர் கரும் பச்சையாக மாற வாய்ப்புகள் அதிகம்.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து பயிருக்கு உரமாக தரலாம்.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் பயன்படுத்தும் போது மண்புழுக்கள் எண்ணிக்கை மறுநாள் முதலே அதிகரிக்கும். அதேபோல் வயலின் மேல் மட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் காணலாம்.

உரங்கள்:

சீரக சம்பா சாகுபடி (Seeraga Samba Rice Cultivation):

நுன்னுயிர் உரங்களை வேரில் அளிப்பது மூலம் இருபது சதவீதம் மகசூலை அதிகப்படுத்தலாம். இதனால் திறட்சியான மணிகள் கிடைக்கும், வளர்ச்சி சற்று கூடும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சீரக சம்பா ரகம் சுமார் 3.5 அடி உயரம் வரை வளர வாய்ப்பு உள்ளது. சுமார் அறுபது தூர்கள் வரை கிடைக்கும். மாடுகள் இந்த வைக்கோலை விரும்பி உண்ணும்.

மகசூல்:

சீரக சம்பா சாகுபடி (Seeraga Samba Rice Cultivation):

ஏக்கருக்கு அதிகபட்சம் 32 மூட்டை வரை மகசூலுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த அரிசியின் விஷேசம் என்னவென்றால் சாதம் மற்றும் பிரியாணி சமைக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. சன்னமான அரிசி, இது மட்டுமன்றி சுவை சற்று அதிகம். இதனால் விற்பனை வாய்ப்பு அதிகம்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil