பயிர் நோய்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள்..!

பயிர் பாதுகாப்பு

பல்வேறு விதமான பயிர்களும் அவற்றைத் தாக்கும் நோய்களை தடுக்கும் உத்திகளும்…

Crop Protection In Tamil

நாம் பயிரிடப்படும் பயிர்களை பூச்சிகள், நோய்கள், களைகள், விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றிடமிருந்து பாதுகாத்து நல்ல மகசூல் பெறுவதே பயிர் பாதுகாப்பு எனப்படும்.

மேலும் பயிர் பாதுகாப்பிற்கு உதவும் முறைகள் எளிதில் மேற்கொள்ளத்தக்கதாகவும், செலவு குறைவானதாகவும், சிறப்பாகக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும், மகசூலை அதிகரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் தரமானதாகவும், உற்பத்திச் செலவு குறைவானதாகவும் இருக்கும்.

சரி இந்த பகுதியில் பல்வேறு விதமான பயிர்களும், அவற்றை தாக்கும் நோய்களும், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

நெல் பயிர் பாதுகாப்பு (Crop Protection In Tamil):

இந்த நெல் பயிர் நோய்கள் நெல்லில் வரும் துங்ரோ நோயை கட்டுப்படுத்த நடவு செய்த 15 மற்றும் 30 வது நாளில் ஒரு ஏக்கருக்கு மோனோகுரோட்டோபாஸ் 36 WSC (1000 மி.லி), அல்லது பாஸ்போமிடான் 85 WSC (500 மி.லி) அல்லது பென்தியான் 100 EC (500 மி.லி) பூச்சி கொல்லியைத் தெளிக்க வேண்டும்.

நெல் அறுவடை செய்தபின் எஞ்சிய தாழ்களை உழவு செய்வதன் மூலம் மஞ்சள் குட்டை நோய் காரணிகளை அழித்து அடுத்த பட்டத்திற்குப் பரவாமல் தடுக்கலாம்.

பயறு வகை பயிர் பாதுகாப்பு (Crop Protection In Tamil):

நோயுற்ற செடிகளை ஆரம்பகட்டத்திலேயே பிடுங்கி அழிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு மோனோகுரோட்டோபாஸ் (500 மி.லி) அல்லது மீத்தைல் டெமட்டான் (500 மி.லி) பூச்சிகொல்லியை 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

எள் பயிர் பாதுகாப்பு:

பச்சை சிற்றிலை நோயை கட்டுப்படுத்த எள்ளுடன் துவரை பயிரை 6:1 என்ற விகிதத்தில் பயிரிட்டால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.

புகையிலை பயிர் பாதுகாப்பு:

புகையிலையில் தோன்றும் நோயை கட்டுப்படுத்த 1 சதவீத காகிதப்பூ இலை சாற்றை மூன்று முறை ஒரு வார இடைவெளியில் தெளிக்கலாம்.

இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ???

தக்காளி பயிர் பாதுகாப்பு :

பயிர் நோய்கள் – தக்காளி புள்ளி வாடல் நோயை எண்டோசல்பான் 35 இசி (1.5 மி.லி. / லிட்டர்) பூச்சிகொல்லியை நடவு செய்த 25, 40 மற்றும் 55வது நாட்களில் தெளிக்க வேண்டும்.

கத்தரி பயிர் பாதுகாப்பு:

பயிர் நோய்கள் – கத்தரி சிற்றிலை நோய்கண்ட செடிகளை ஆரம்பகட்டத்திலேயே பிடுங்கி அழிக்க வேண்டும்.

எனவே ஒரு ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 25 இசி (2 மி.லி) அல்லது டைமெத்தோயேட் 30 EC (2 மி.லி) பூச்சிகொல்லியைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மிளகாய் பயிர் பாதுகாப்பு:

பயிர் நோய்கள் – மிளகாயில் ஏற்படும் தேமல் நோயை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஐந்து வரிசைக்கும் இரண்டு வரிசை சோளம் அல்லது மக்காச்சோளப்பயிரை பயிரிட்டு தாக்கத்தைக் குறைக்கலாம்.

மேலும் மீத்தைல் டெமட்டான் 25 EC (2 மி.லி) அல்லது பாசலோன் 35 EC (2 மி.லி) பூச்சிகொல்லியைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

வாழை பயிர் :

பயிர் நோய்கள் – முடிக்கொத்து நோய் – பாஸ்போமிடான் (2 மி.லி) அல்லது மீத்தைல் டெமட்டான் (2 மி.லி) அல்லது மோனோகுரோடோபாஸ் (1 மி.லி) அல்லது டைமெத்தோயேட் (2 மி.லி) எனும் பூச்சிகொல்லியை வாழை மர தலைப்பகுதி நன்கு நனையும்படியும் தண்டு மற்றும் அடிப்பகுதியிலும் 21 நாட்களுக்கொருமுறை தெளிக்க வேண்டும்.

இயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..!

 

இதுபோன்று விவசாயம் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>இயற்கை விவசாயம்