கத்தரிக்காய் சாகுபடி
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..🙏 இன்றைய பதிவில் இயற்கையான முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். நம் நாட்டில் அதிகம் விளைய கூடிய பயிர்களில் நெல்லுக்கு அடுத்த இடத்தில் அதிகமாக விளைவிக்கும் பயிர் வகை கத்தரிக்காய் தான். இது நம் தமிழ் நாட்டில் பல இடங்களில் பயிரிடப்படுகிறது. அந்தவகையில் இன்று கத்தரிக்காய் சாகுபடி எப்படி செய்வது என்று தெரியாதவர்களுக்கு இந்த பதிவின் மூலம் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதையும் பாருங்கள் 👉 மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை..!
கத்தரிக்காய் சாகுபடி செய்வது எப்படி..?
மணமும் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட இந்த கத்தரிக்காய் பல ரகங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் மண்ணிற்கு ஏற்ற பயிராக விளைகிறது. இந்த கத்தரிக்காய் இந்தியாவை தாயகமாக கொண்ட காய்கறி ரகம் என்று சொல்லப்படுகிறது.
கத்தரிக்காய் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. அதனால் கத்தரிக்காயை பயிரிட்டு அறுவடை செய்து விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.
எந்த மண்ணில் பயிரிடலாம்:
நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் பயிரிட வேண்டும். வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண்ணில் கத்தரிக்காய் பயிரிடலாம்.
கத்தரிக்காய் பயிரிடும் காலம்:
கத்தரி சாகுபடியை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை பயிரிடலாம். கத்தரிக்காய் 6 மாதம் வரை விளையக் கூடிய பயிர் என்று சொல்லபடுகிறது.
மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் !!! |
கத்தரிக்காயை விதை நேர்த்தி செய்வதால் அதன் முளைப்பு திறன் அதிகரிப்பது மட்டுமில்லாமல் நோய்களும் தடுக்கப்படுகிறது.
கத்தரிக்காய் 1 ஹெக்டேருக்கு 200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்யலாம். விதை நேர்த்தி செய்வதற்கு சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் அளவு அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அளவில் கலக்க வேண்டும். அதேபோல அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றையும் 100 கிராம் வீதம் கலந்து நிழலில் 1/2 மணி நேரம் காயவைக்க வேண்டும்.
இதுபோல காயவைத்து நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 10 அடி நீளம் மற்றும் 3 அடி அகலம், அதேபோல அரை அடி உயரத்தில் மேட்டுப் பாத்தி அமைத்து 10 செ.மீ இடைவெளியில் பொடியை தூவுவது போல, நேர்த்தி செய்த விதைகளைத் தூவ வேண்டும்.
விதைகளை விதைத்த பின்பு மண் மூடுமாறு கையால் கிளறி விட வேண்டும். பின் போதுமான அளவில் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதுபோல 1 வாரம் வரை தண்ணீர் தெளித்து வந்தால் விதைகள் முளைத்து வருவதை பார்க்கலாம்.
பொதுவாக கத்தரிக்காய் ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி மாறுபடுகிறது. மிதமான வளர்ச்சி உள்ள கத்தரி ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் 2 வரிசை முறையில் 60 x 60 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.
அதுபோல அதிக வளர்ச்சியுள்ள கத்தரி ரகங்களை உயர் பாத்தியில் 1 வரிசையில் 1 செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.
கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும் |
கத்தரிக்காய் செடிகளை எப்படி பராமரிப்பது:
- நீங்கள் பயிரிட்ட மண் களி மண்ணாக இருந்தால் வாரத்திற்கு 2 முறை தண்ணீர் விட வேண்டும்.
- அதன் பின் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். மழைக் காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- நடவு செய்த நாட்களில் இருந்து 20 முதல் 25 நாட்களுக்குள் களையெடுக்க வேண்டும்.
- கத்திரிக்காயில் புழு தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், வாரம் 1 முறை 1 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி அளவு மூலிகை விரட்டியை கலந்து தெளிக்க வேண்டும்.
- அதுபோல, நடவு நட்ட 2 வாரத்திற்கு பிறகு மாதம் 2 முறை மூலிகை பூச்சி விரட்டி தெளித்தால் போதும்.
- கத்தரிக்காய் 45 வது நாள் அறுவடைக்கு வந்துவிடும். அதன் பின் 10 நாள் கழித்து இரண்டாம் களை எடுக்கும் போது நோய்த் தாக்குதல் ஏதும் இருக்கிறதா என்பதை பார்த்து கொள்வது மிகவும் நல்லது.
- அதுபோல 3 மாதம் கழித்து மக்கிய தொழு உரத்தைத் தண்ணீருடனோ அல்லது கத்திரி செடியின் வேரிலோ கைப்பிடியளவு வைப்பதால் அடுத்த மூன்று மாதத்திற்கு மகசூல் பாதிப்படையாமல் இருக்கும்.
கத்தரிக்காய் சாகுபடி – மகசூல்:
மேல் கூறப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி வந்தால் 50 முதல் 120 நாட்களுக்குள் கத்தரி மகசூல் அறுவடை செய்ய முடியும். ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை கத்தரி மகசூல் கிடைக்கும்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் |