குடைமிளகாய் சாகுபடி முறை..!

குடைமிளகாய் சாகுபடி

கோடை காலத்தில் நல்ல வருமானம் தரும் குடைமிளகாய் சாகுபடி முறை (Bell Pepper Cultivation)..!

குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும்.

இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.

குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடியாகும்.

இதையும் படிக்கவும் தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

 

சரி இப்போது குடைமிளகாய் சாகுபடி முறை (bell pepper cultivation) பற்றி படித்தறிவோம் வாங்க…

குடைமிளகாய் சாகுபடி முறை (Bell Pepper Cultivation) ..!

 • குடைமிளகாய் நாற்றங்காலுக்கு 50 சதவீதம் நிழல் வளையம் போதுமானது.
 • ஒரு மீட்டர் அகலம் மற்றும் போதுமான அளவு நீளமான மேட்டு பாத்திகள் போதுமானது.
 • நாற்றுகளை குழித் தட்டில் வளர்க்க வேண்டும்.
 • குழித் தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ கலந்து நன்கு நிரப்ப வேண்டும்.

விதை அளவு:

 • ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை போதுமானது.
 • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரடி கலந்து விதை தெளிக்க வேண்டும்.
 • ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லத்தை கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.
 • விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டு பாத்திகளின் மீது வைக்க வேண்டும்.
 • விதை முளைக்கும் வரை ஒரு நாளைக்கு 2 முறை என்று தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இதையும் படிக்கவும் கொடி வகை காய்கறிகள் சாகுபடியை எப்படி அதிகரிக்கலாம்..?

குடைமிகளாய் சாகுபடி முறைக்கு ஏற்ற உரங்கள்

 • குடைமிளகாய் சாகுபடி பொறுத்தவரை 3 சதவீதம் 30(மிலி/லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்.
 • விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5% மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்ச்சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
 • 15 நாட்களில் குடைமிளகாய் நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்.
  குடைமிகளாய் சாகுபடி முறையில் கடைசி நடவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 25 டன் தொழுவுரம் அடி உரமாக இடவேண்டும்.
 • அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஏக்கருக்கு 703 கிலோ என்ற அளவில் கடைசி நடவின் போது இட வேண்டும்.
 • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஏக்கருக்கு தலா 5 கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழு உரத்துடன் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்.
 • குடைமிகளாய் சாகுபடி முறையில் கடைசி நடவின் முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஏக்கருக்கு 2.5 என்ற அளவில் 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
 • நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டு பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டு பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • நாற்றுகளை நடுவதர்க்கு முன் 8-12 மணி நேரத்திற்க்கு முன் நடவு வயலை சொட்டு நீர்பாசானம் அமைப்பின் மூலம் நனைக்க வேண்டும்.
 • 35 நாட்கள் கழித்து குடைமிளகாய் செடிகளை 0.5 சதவீதம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்தபிறகு  இரு வரிசை நடவு முறையில் 90:60:60 செமீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

பயிர் வளர்ப்பு:

குடைமிளகாய் சாகுபடி (bell pepper cultivation) பொறுத்தவரை  சூடோமோனாஸ் புளோரசனஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.

நடவு செய்த 30 மற்றும் 60-ம் நாள் களையெடுக்க வேண்டும்.

குடைமிளகாய் சாகுபடி பொறுத்தவரை நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட் ஒரு சதவீதம் என்ற அளவில் நடவு செய்த 60 மற்றும் 100-ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.

இந்த குடைமிளகாய் சாகுபடி (bell pepper cultivation) பொறுத்தவரை  டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீரில் 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30-ம் நாட்கள் தெளிக்க வேண்டும்.

குடைமிளகாய் சாகுபடி பொறுத்தவரை பிளானோபிக்ஸ் 0.25 மி.லி/லி என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இந்த குடைமிளகாய் சாகுபடி (bell pepper cultivation) பொறுத்தவரை நன்கு வளர்ச்சி அடைந்த குடைமிளகாயை 70-ம் நாள் முதல் அறுவடை செய்யலாம்.

இதையும் படிக்கவும் கறவை மாடுகளுக்கான அனைத்து நோய்க்கும் மூலிகை மருத்துவம்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com