சர்க்கரை நோய் விரட்டும் மருந்து !!! பயிரிடும் முறை மற்றும் பயன்கள்…

சர்க்கரை நோய்

பாகற்காய் சாகுபடி:

பாகற்காய் சாகுபடி இரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய் (diabetes treatment) அளவை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. இது கொடிவகை பாகற்காய் ஆகும். இவை வெப்ப பிரதேசத்தில் அதிகமாக விளையக்கூடியவை. பாகற்காய் சாகுபடி இரண்டு வகைப்படும். அவற்றில் ஒன்று கொம்பு பாகற்காய் சாகுபடி மற்றோன்று மிதி பாகற்காய்.

இவை மிகவும் கசப்பாக இருக்கும். என்ன தான் கசப்பாக இருந்தாலும் பாகற்காய் நாம் உணவில் அதிகம் எடுத்துக்கொண்டால் அதிகளவு மருத்துவ குணத்தை அள்ளி தருகிறது. இத்தகைய கொடிவகை பாகற்கயை எப்படி பயிரிடலாம் என்றும் மற்றும் பாகற்காயின் பயன்களையும் நாம் இவற்றில் காண்போம்.

சரி இப்போது பயற்கைய சாகுபடி முறையை பற்றி காண்போம்.

பாகற்காய் சாகுபடி:

பாகற்காய் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள்:

கோ1, எம்.டி.யூ.1, அர்காஹரித், கோபிஜிஎச் 1, என்.எஸ்.244, என்.எஸ்.453, யு.எஸ் 6214, யு.எஸ்.390 ஆகியவை இரசாயன சாகுபடிக்கு உகந்தது.

பருவகாலம்

ஜனவரி முதல் ஜுலை வரை பாகற்காய் சாகுபடி  ஏற்ற காலங்கள்.

நிலம்:

அங்ககச் சத்து, கார அமிலத்தன்மை, நல்ல மண் கொண்ட மணற்சாரி வண்டல் மண் பாகற்காய் சாகுபடி முறைக்கு ஏற்றது.

தேர்ந்தெடுத்த நிலத்தை மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் நிலத்தை நன்கு சமன்படுத்திக் கொள்ளவும். கடைசி உழவின் போது அடியுரமாக தொழு உரம் நடவு செய்ய வேண்டும்.

விதையளவு:

பாகற்காய் சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு பாகற்காய் விதை 1 கிலோ 800 கிராம் தேவைப்படும்.

ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் கலந்து விதையை தெளிக்க வேண்டும்.

வரிசைக்கு வரிசை 2 மீட்டர் என்றும், குழிக்கு குழி 1.5 மீட்டர் என்ற இடைவெளி விட்டு குழிக்கு 5 விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர்நிர்வாகம்:

பாகற்காய் சாகுபடி பொறுத்தவரை விதைகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்தில் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரநிர்வாகம்:

பாகற்காய் சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 10 கிலோ தொழு உரமும், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர்  பாஸ்பேட், 20 கிராம் மூரேட் ஆப் பொட்டாசியம் உரங்களை கலந்து குழிக்கு அடியுரமாக இட வேண்டும். விதைத்த 30-ஆம் நாள் குழிக்கு 20 கிராம் யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

குழிக்கு 2 செடிகள் விட்டு 15-ஆம் நாள் களைத்துவிட வேண்டும். கொடிகள் நன்றாக படர கால்தூண்கள் கம்பிகள் கொண்டு 2 மீட்டர் உயரத்திற்கு முறையாக பந்தல்கள் அமைக்க வேண்டும். செடிகள் நன்றாக வளர்ந்து வரும் பருவத்தில் மூன்று முறை தவறாமல் களை எடுக்க வேண்டும்.

அறுவடை:

பாகற்காய் சாகுபடி பொறுத்தவரை விதைத்த 60-65 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பிறகு வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம். பாகற்காய் முதிர்ச்சி நிலை அடைவதற்கு முன் அறுவடை செய்ய வேண்டும்.

பாகற்காய் சாகுபடி பொறுத்தவரை ஏக்கருக்கு 140-150 நாட்களில் 14 டன் வரை பாகற்காய் கிடைக்கும்.

இதுவரை பாகற்காய் சாகுபடி முறையை பற்றி பார்த்தோம் இப்போது, சர்க்கரை நோய் (diabetes treatment) சரி செய்யும் கீரைகள் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

சர்க்கரை நோய் பாதிப்பை வீட்டிலேயே குணப்படுத்த எளிய உணவுகள்:

 

முருங்கைகாய் மற்றும் கீரை:

தினமும் நாம் முருங்கைகாய் மற்றும் முருங்கை கீரை அதிகமாக உணவில் எடுத்துக் கொண்டால் முருங்கையில் உள்ள நார்ச்சத்து உணவு தெவிட்டாத நிலையை அதிகரித்து உணவு தடைப்படுவதை தடுக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகளவு உணவில் முருங்கைக்காய் மற்றும் முருங்கை கீரை சேர்த்துக்கொள்வது நல்லது.

துளசி இலை:

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை மிகவும் உதவியாக உள்ளது. துளசி இலை இரத்த அழுத்தத்தை போக்கும் ஆற்றல் மிக்க ஆன்டி – ஆக்சிடன்ட்கள் உள்ளது. அவை சர்க்கரை நோய் (diabetes treatment) மூலம் ஏற்படும் பல சிக்கல்களை குணப்படுத்தும் தன்மை துளசி இலைக்கு உள்ளது.

ஆளி விதைகள்:

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டரால் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதை மிகவும் உதவுகிறது. எனவே தினமும் ஆளி விதையை உட்கொண்டு வந்தால் உணவிற்கு பிற்பட்ட சர்க்கரை நோய் (diabetes treatment) அளவை சுமார் 28 சதவீதம் குறைக்கிறது.

இலவங்கப்பட்டை:

தொடர்ந்து ஒரு கிராம் இலவங்கப்பட்டையை 30 நாட்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய் (diabetes treatment) அளவை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.

கீரின்டீ:

கீரின்டீயில் திடமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள்  சத்துகள் உள்ளது. எனவே இரத்தத்தில் சர்க்கரை நோய் (diabetes treatment) அளவை குறைக்க மிகவும் உதவியாக உள்ளது கீரின்டீ.

நாவல் பழ விதை:

நாவல் பழ விதை நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தி இரத்தத்தில் சர்க்கரை நோய் (diabetes treatment) அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் நாவல் பழ இலையை மென்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை குணப்படுத்தும்.

வேப்ப இலை:

வேப்ப இலையை நாம் தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் (diabetes treatment) கட்டுப்படுத்தி குணப்படுத்தும் தன்மை வேப்ப இலைக்கு உள்ளது.

கருப்பு சீரகம்:

கருப்பு சீரகம் தினமும் உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோய் (diabetes treatment) சிகிச்சைக்கு கருப்பு சீரகத்தை பயன்படுத்தலாம்.

உடற்பயிற்சி:

செலவில்லாத மருத்துவம் உடற்பயிற்சி எனவே தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் உடலில் ஏற்படும் பல வகையான நோய்களின் தாக்கங்களும் குணமாகும். எனவே தினமும் முடிந்தளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பாகற்காயின் பயன்கள்:

  • இரத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின் பாலிபெப்டைட்  பாகற்காயில் உள்ளது. பாகற்காயை குழம்பில் அல்லது சூப்பாக நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் (diabetes treatment) குணப்படுத்தப்படுகிறது.
  • பாகற்காய் ஜூஸ் செய்துக் குடித்தால் உயர் இரத்த அழுத்தம், இரத்த கொதிப்பு மற்றும் இரத்த கொதிப்பினால் ஏற்படும் அரிப்பு மற்றும் இரத்த கோளாரு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது பாகற்காய் ஜூஸ்.
  • பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சிறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது.
  • தொடர்ந்து பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடல் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.