மாடித்தோட்டம் ரோஜா பயிரிடும் முறை..!

ரோஜா

மாடித்தோட்டம் ரோஜா பயிரிடும் முறை..!

வணக்கம். இன்று நாம் மாடித்தோட்டம் பதிவில் ரோஜா சாகுபடி  செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

அதாவது நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக ரோஜா சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம் வாங்க.

மாடித்தோட்டம் புடலங்காய் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!

ரோஜா பயிரிடுவதற்கு தேவையான பொருட்கள்:

  • Grow Bags அல்லது Thotti.
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண்.
  • வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • ஒட்டு கட்டிய செடிகள்
  • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
  • கவாத்து உபகரணங்கள்
newமல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..!

மாடித்தோட்டம் ரோஜா சாகுபடி முறை..!

மாடித்தோட்டம் ரோஜா சாகுபடி – தொட்டிகள்:

*இதற்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது.

*செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

*இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு , ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.

*இது நீண்ட கால செடி என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்ப்பது சிறந்தது. அப்பொழுது தான் மண் இலகுவாக செடி வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

மாடித்தோட்டம் ரோஜா சாகுபடி விதைக்கும் முறை:

*ஒட்டு கட்டிய செடிகளை பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். அகலமானதாக இருந்தால் இரு செடிகள் வரை நடவு செய்யலாம்.

மாடித்தோட்டம் சம்பங்கி சாகுபடி முறை மற்றும் சம்பங்கி பயன்கள்..!

மாடித்தோட்டம் ரோஜா சாகுபடி உயிர் நீர் பாசனம்:

* நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

* தென்னை நார்க்கழிவு இருப்பதால் ஈரப்பத்தை கண்காணித்து நீர் ஊற்ற வேண்டும். பைகளின் அடியில் துளை இடுவதால் அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறிவிடும்.

மாடித்தோட்டம் ரோஜா சாகுபடி உரமிடும் முறை:

* வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும்.

* இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும்.

* இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

* செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.

மாடித்தோட்டம் ரோஜா சாகுபடி பயிர் பாதுகாப்பு முறை :

* வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

* பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும்.

பஞ்சகாவ்யா

* செடிகளின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் பக்கக்கிளைகள் தோன்றும். தொட்டியில் நான்கு கிளைகளுக்கு மேல் வளர அனுமதிக்க கூடாது.

ரோஜா தொட்டிகளை வைக்கும் இடங்கள்:

* பொதுவாக ரோஸ் என்றாலே அழகுதான் அவற்றை நாம் நம் மாடிதோட்டத்திலோ அல்லது மாடிப்படிகளிலோ அல்லது ஜன்னல்களிலோ வைத்தால் இன்னும் அழகாக இருக்கும்.

* அதுவும் தொட்டிகளுக்கு வண்ணங்கள் பூசினால் இன்னும் அழகாக இருக்கும். அழகாக பூத்து குலுங்கும் ரோஜாவை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ரோஜா பூவின் பயன்கள்:

* ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் விரைவில் குணமாகும்.

* ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.

* புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். இந்நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.

*ரோஜா இதழ்களை சேகரித்து தேனிலோ அல்லது சர்க்கரை பாகிலோ ஊற வைத்து தினமும் சாப்பிட்டுவர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

* ரோஜா மலரின் சாற்றை ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தலாம். தலைவலி எந்த பக்கம் இருக்கிறதோ, அதற்கு நேரெதிர் நாசி துவாரத்தில் இதன் சாற்றை 2 துளிவிட உடனே தலைவலி மறைந்துபோகும்.

மாடி தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடும் முறை மற்றும் அறுவடை

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்